அடுத்தமுறை மீன் வாங்கினால் இப்படி வீடே கமகமக்கும் ருசியான மீன் குருமா செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

- Advertisement -

 அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான உணவாக மீன் இருக்கிறது. மீன் வைத்து குழம்பு, வறுவல், தொக்கு என பல வகைகளில் சமைத்திருக்கிறோம். ஆனால் மீன் குருமா இப்படி ஒருமுறை செய்து பாருங்க , அசத்தலான மற்றும் வித்யாசமான சுவையில் இருக்கும். இப்படி ஒரு மசாலா சுவை நிறைந்த மீன் குருமா இதுவரைக்கும் நீங்க சுவைத்திருக்க வாய்ப்பே இருக்காது. வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

-விளம்பரம்-
Print
No ratings yet

மீன் குருமா | Fish Kuruma Recipe In Tamil

மீன்குருமா இப்படி ஒருமுறை செய்து பாருங்க , அசத்தலான மற்றும் வித்யாசமான சுவையில் இருக்கும். இப்படி ஒரு மசாலா சுவை நிறைந்த மீன் குருமா இதுவரைக்கும் நீங்க சுவைத்திருக்க வாய்ப்பே இருக்காது. வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: LUNCH, Main Course
Cuisine: tamilnadu
Keyword: Fish Kuruma
Yield: 4 people
Calories: 240kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 500 கிராம் மீன்
  • 4 துண்டு தேங்காய்
  • 5 பச்சை மிளகாய்
  • 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 4 தேக்கரண்டி கசகசா
  • 3 தேக்கரண்டி உப்பு
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 5 பல் பூண்டு
  • இஞ்சி சிறு துண்டு
  • 60 கிராம் வெங்காயம்
  • பட்டை ஒரு துண்டு
  • 3 கிராம்பு
  • 50 கிராம் எண்ணெய்

செய்முறை

  • மீனைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கழுவிக் கொள்ளவும். தேங்காயையும், கசகசாவையும் நீர்விட்டு விழுதாக அரைக்கவும்.
  • பச்சைமிளகாயை வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றைச் சிறிது நீர் விட்டு நசுக்கிக் கொள்ள வேண்டும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ள வேண்டும். அரைத்த தேங்காய், கசகசா விழுது, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒரு ஆழாக்கு நீர் விட்டுக் கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததம், வெங்காயம், நசுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு மசாலா, அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்க வேண்டும்.
  • வெங்காயம் சிவந்து மணம் வந்தவுடன் கரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் ஊற்றி மூடி விட வேண்டும்.
  • 15 நிமிடங்கள்கொதித்த பிறகு மூடியை அகற்றி, சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளை அதில் போட்டு, மீன் வெந்ததும் குருமாவை இறக்கி விட வேண்டும்.

Nutrition

Serving: 200g | Calories: 240kcal | Carbohydrates: 11g | Protein: 29g | Fat: 9g | Cholesterol: 100mg | Sodium: 380mg
- Advertisement -