மணமணக்கம் கறி மசாலா பொடி இப்படி எளிமையாக வீட்டிலே செய்து பாருங்கள்!

- Advertisement -

நாம் எந்தவித சமையல் செய்தாலும் அதில் நாம் சேர்க்கும் மசாலா பொடிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனனென்னில் நாம் சேர்க்கும் அனைத்து மசாலா பொருட்கள் தான் செய்யும் உணவுகளின் நிறம், சுவை மற்றும் மணத்தை தருகிறது. அந்த வகையில் அசைவ உணவுகளை நாம் அனைவரும் மிகவும் விரும்பும் படியான உணவு.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : நல்ல சுவையும் மணமும் தரும் கரம் மசாலா பொடி செய்வது எப்படி ?

- Advertisement -

ஏனென்றால் அதில் சேர்க்கப்படும் மசாலா தான் அதன் சுவைக்கும் மனத்திற்கும் காரணம் ஆகையால் நீங்கள் அசைவ உணவு வகைகள் செய்ய விரும்பினால் கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் மசாலா பொருட்களை வாங்குவதற்கு பதிலாக. நீங்கள் வீட்டிலேயே இந்த மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். இன்று எப்படி கறி மசாலா பொடி தயார் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

1/2 tbsp – எண்ணெய்
25 – வர மிளகாய்
1 1/2 கப் – மல்லி
6 tbsp – மிளகு
6 tbsp – சீரகம்
1 tbsp – சோம்பு
3 tbsp – கடலை பருப்பு
1 tbsp – உளுந்த பருப்பு
1 tbsp – அரிசி
8 துண்டு – பட்டை
12 – கிராம்பு
3 – ஏலக்காய்
2 tbsp – கசகசா
6 கொத்து- கருவேப்பிலை
1 tbsp – உப்பு
1 tbsp – மஞ்சள் தூள்

செய்முறை விளக்கம்

செய்முறை 1

முதலில் கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள், எண்ணெய் காய்ந்ததும் இதில் வர மிளகாய் சேர்த்து வறுக்கவும் வர மிளகாய் கருகாமல் மொறு மொறுப்பாக வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். தீயை மிதமான அளவில் வைத்துக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

செய்முறை 2

பின் வறுத்த வர மிளகாயை தனியாவே ஒரு பெரிய தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கடையில் மல்லி சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். மல்லி வறுபட்டு நல்ல மனம் வந்தபின் மல்லியும் வரமிளகாயுடன் சேர்த்து கொள்ளவும்.

செய்முறை 3

பின்பு கடாயில் மிளகு சேர்த்து அதையும் நன்றாக வறுத்து எடுத்து ஏற்கனவே வறுத்த பொருட்களுடன் சேர்த்துக் கொள்ளவும். அதன் பிறகு சீரகம், சோம்பு இரண்டையும் கடாயில் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதையும் மீத பொருட்களுடன் சேர்த்து தட்டிக் கொள்ளுங்கள்.

செய்முறை 4

அதன் பின்பு கடை கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து சில வினாடிகள் நன்றாக வறுக்கவும். அதன் பின்பு இதனுடன் சிறிது அரிசியையும் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும். பருப்பு நன்கு சிவந்து வந்ததும் மீத பொருட்களுடன் சேர்த்துக் கொள்ளவும்.

-விளம்பரம்-

செய்முறை 5

பின்பு கடாயில் பட்டை துண்டுகளை போட்டு வறுக்கவும் அதன் பின் இதனுடன் கிராம்பு ஏலக்காய் போன்ற பொருட்களையும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் இந்த பொருட்களை தட்டில் சேர்த்து கொள்ளவும்.

செய்முறை 6

பின் கடாயில் கசகசாவை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். இதையும் மீத பொருட்களுடன் சேர்த்து பின் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்தெடுக்கவும். பின் கல் உப்பு சேர்த்து வறுக்கவும், கருவேப்பிலை நன்கு வறுப்பட்டதும் ஏற்கனெவே வறுத்த அனைத்து பொருட்களுடன் சேர்த்து குளிர வையுங்கள்.

செய்முறை 7

பின் வறுத்த பொருட்களுடன் மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸி ஜாரில் பாதி பாதியாக அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் குழம்பு கிரேவிகளுக்கு கூடுதல் சுவை கொடுக்கும் கறி மசாலா இனிதே தயாராகிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here