சமையலுக்கு சுவையும் மணமும் தரும் கரம் மசாலா பொடி செய்வது எப்படி ?

- Advertisement -

நாம் எந்தவித சமையல் செய்தாலும் அதில் நாம் சேர்க்கும் மசாலா பொடிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனனென்னில் நாம் சேர்க்கும் அனைத்து மசாலா பொருட்கள் தான் சேர்க்கும் செய்யும் உணவுகளின் நிறம், சுவை மற்றும் மணத்தை தருகிறது. அந்த வகையில் அசைவ உணவுகளை நாம் அனைவரும் மிகவும் விரும்பும் படியான உணவு.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : அதிக சுவையும் மணமும் தரும் செட்டிநாடு மசாலா எப்படி வீட்டில் செய்வது ?

- Advertisement -

ஏனென்றால் அதில் சேர்க்கப்படும் மசாலா தான் அதன் சுவைக்கும் மனத்திற்கும் காரணம் ஆகையால் நீங்கள் அசைவ உணவு வகைகள் செய்ய விரும்பினால் கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் மசாலா பொருட்களை வாங்குவதற்கு பதிலாக. நீங்கள் வீட்டிலேயே இந்த மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். இன்று எப்படி கரம் மசாலா பொடி தயார் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
5 from 1 vote

கரம் மசாலா பொடி | Garam Masala Podi in Tamil

நாம் சேர்க்கும் மசாலா தான் உணவுகளின் நிறம், சுவை மற்றும் மணத்தை தருகிறது. அந்த வகையில் அசைவ உணவுகளை நாம் அனைவரும் மிகவும் விரும்பும் படியான உணவு. ஏனென்றால் அதில் சேர்க்கப்படும் மசாலா தான் அதன் சுவைக்கும் மனத்திற்கும் காரணம் ஆகையால் நீங்கள் அசைவ உணவு வகைகள் செய்ய விரும்பினால் கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் மசாலா பொருட்களை வாங்குவதற்கு பதிலாக. நீங்கள் வீட்டிலேயே இந்த மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். இன்று எப்படி கரம் மசாலா பொடி தயார் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Prep Time7 minutes
Active Time7 minutes
Total Time14 minutes
Course: MASALA
Cuisine: Indian, TAMIL
Keyword: Garam masala, கரம் மசாலா

Equipment

 • 1 கடாய்
 • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

 • 1 tbsp மல்லி
 • 1 tbsp மிளகு
 • 1 tbsp சீரகம்
 • 1 tbsp சோம்பு
 • 8 நட்சத்திர சோம்பு
 • 4 ஜாதிப் பூ
 • 20 ஏலக்காய்
 • 2 பட்டை
 • 2 பிரியாணி இலை
 • 1 tbsp கடல் பாசி

செய்முறை

 • முதலில் கடாயை அடுப்பில் வைத்து நாம் சேர்க்கும் பொருட்கள் அனைத்தும் எண்ணெய் இல்லாமல் வறுத்துக்கொள்ள வேண்டும். வறுக்கும் போது அதிகமாக தீயில் வறுக்க கூடாது மிதமான தீயிலேயே வறுத்துக் கொள்ள வேண்டும். பொருட்கள் கருகிவிட்டால் மசாலா கசப்பாக வந்துவிடும்.
 • முதலில் மல்லி, மிளகு மற்றும் சீரகம் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தனியாக ஒரு பெரிய பவுளில் தட்டி விடுங்கள்.
 • அதன் பின்பு மீண்டும் கடாயை அடுப்பில் வைத்து கிராம்பு, சோம்பு மற்றும் நட்சத்திர சோம்பு இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளுங்கள். நன்றாக வறுபட்டதும் ஏற்கனவே வறுத்த பொருடாகளுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 • அதன் பின்பு கடாயில் ஜாதி பூ, ஏலக்காய் மற்றும் பட்டை இந்த மூன்று பொருட்களையும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொருட்களும் வறுபட்டதும் ஏற்கனவே வறுத்த பொருட்களுடன் சேர்த்து விடுங்கள்
 • அதன் பின்பு கடல் பாசி மற்றும் பிரியாணி இலையே சிறு சிறிதாக வெட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக கடாயில் போட்டு வறுத்து கொள்ளுங்கள் பிறகு இந்த பொருட்களையும் நாம் ஏற்கனவே வருத்த பொருட்களுடன் சேர்த்து நன்றாக குளிர வைத்துக் கொள்ளுங்கள்.
 • அனைத்து பொருட்களும் நன்றாக குளிர்ந்த பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அறைத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் கரம் மசாலா காரசாரமாக தயாராகிவிட்டது இனிய சமைக்கும் போது இந்த மசாலாவை பயன்படுத்தி பட்டையை கிளப்புங்கள்.

English Overview: garam masala is one of the most important masala in south india. garam masala podi or garam masala podi seivathu eppadi or garam masala podi in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

LEAVE A REPLY

Recipe Rating
Please enter your comment!
Please enter your name here