தக்காளி இல்லாமல் சுவையான முருங்கை காய் சட்னி பத்து இட்லி கூட பத்தாது

- Advertisement -

தக்காளி கடகடன்னு விலை உயர்ந்த போது தக்காளி இல்லாமல் சட்னி வைக்கும் எல்லாரும் கவலைப்பட்டுருபோம். வெங்காயம் அதே மாதிரி தான் . கவலைப்படாதீங்க அப்படி டக்குனு வீட்ல தக்காளி இல்லையா கவலையே பட வேண்டாம் முருங்கக்காய் மட்டும் தான் இருக்கணும் ரொம்பவே ஈஸியா சிம்பிளா நல்ல கம கமன்னு ஒரு சட்னியை ரெடி பண்ணிரலாம். இது சட்னி இட்லி , தோசை சாப்பிடுவதற்கு அவ்வளவு சுவையா இருக்கும்.

-விளம்பரம்-

இந்த முருங்கக்காய் சட்னி செய்வது ரொம்ப ரொம்ப ஈசி ஒரு முருங்கக்காய் இருந்தா கூட போதும் 3 பேர் சாப்பிடற அளவுக்கு ஒரு சட்னி ரெடி பண்ணிடலாம். இந்த சுவையான முருங்கக்காய் சட்னிய எப்படி ஈஸியா வீட்ல செய்யறது அப்படின்னு பாத்துக்கலாம். இதுக்கு தக்காளியே வாங்கி கட்டுபடியாகலப்பா அப்படின்னு ஃபீல் பண்றீங்களா? உங்களுக்கு தான் இந்த தக்காளி இல்லாம ரொம்ப சுலபமா ஈஸியா சுவையான இந்த முருங்கைக்காய் சட்னிய செய்து எல்லாருக்கும் கொடுத்து சும்மா அசத்துங்க. இந்த முருங்கைக்காய் சட்னிக்கு எப்படியும் 5 6 இட்லியாவது உள்ள போகும் .

- Advertisement -

அவ்வளவு சுவையா இருக்கும் இந்த முருங்கைக்காய் சட்னி. செய்வதும் ரொம்பவே சுலபம் இந்த முருங்கைக்காய் சட்ன சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த மாதிரி சட்னி வச்சு கொடுத்தீங்கன்னா கொஞ்சம் கூட அடம்பிடிக்காமல் குழந்தைகளை எல்லாம் சாப்பிடுவாங்க. அது மட்டும் இல்லாம இது முருங்கைக்காயில செய்யறதுனால இதுல நிறைய நார்ச்சத்தும் அயன் கட்டனும் அதிகமாக இருக்கும் .குழந்தைகளுக்கு காய்கறி சாப்பிடுவதை விட சத்தும் நல்லாவே கிடைக்கும். சரி வாங்க எப்படி இன்னும் முருங்கக்காய் சட்னி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
1 from 1 vote

முருங்கை காய் சட்னி | Drumstick chutney in tamil

இந்த முருங்கக்காய் சட்னி செய்வது ரொம்ப ரொம்ப ஈசி ஒரு முருங்கக்காய் இருந்தா கூட போதும் 3 பேர் சாப்பிடற அளவுக்கு ஒரு சட்னி ரெடி பண்ணிடலாம். இந்த சுவையான முருங்கக்காய் சட்னிய எப்படி ஈஸியா வீட்ல செய்யறது அப்படின்னு பாத்துக்கலாம். இதுக்கு தக்காளியே வாங்கி கட்டுபடியாகலப்பா அப்படின்னு ஃபீல் பண்றீங்களா? உங்களுக்கு தான் இந்த தக்காளி இல்லாம ரொம்ப சுலபமா ஈஸியா சுவையான இந்த முருங்கைக்காய் சட்னிய செய்து எல்லாருக்கும் கொடுத்து சும்மா அசத்துங்க. இந்த முருங்கைக்காய் சட்னிக்கு எப்படியும் 5 6 இட்லியாவது உள்ள போகும் .
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: chutney
Cuisine: tamilnadu
Keyword: chutney, drumstick chutney
Yield: 5
Calories: 112kcal
Cost: 50

Equipment

  • 1 குக்கர்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 2 முருங்கை காய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 3 காய்ந்த மிளகாய்
  • 5 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • திராட்சை அளவு புளி
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • முதலில் முருங்கை காய்களை இரண்டாக நறுக்கி ஒரு குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • பின்பு அதில் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் கறிவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைக்கவும்.
  • சட்னிக்கு வறுத்த பொருள்கள் ஆறிய பிறகு உப்பு சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் அவைகளை சேர்த்து சற்றே கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு வேகவைத்து எடுத்துள்ள முருங்கை காய்களை எடுத்து அவற்றில் உள்ளே உள்ள சதை பகுதியை மட்டும் தனியாக ஸ்பூன் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் .
  • முருங்கைக்காயின் சதைப் பகுதியை அரைத்து வைத்துள்ள சட்னியோடு சேர்த்து ஒரே ஒரு பல்ஸ் மிக்ஸியில் கொடுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியோடு கலந்து இட்லி, தோசைக்கு பரிமாறினால் சுவையான முருங்கைக்காய் சட்னி தயார்.

Nutrition

Calories: 112kcal | Carbohydrates: 289g | Protein: 36.2g | Fat: 14.9g | Saturated Fat: 4.1g | Polyunsaturated Fat: 3.3g | Sodium: 556.3mg