Home அசைவம் மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து...

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது முட்டையில் கோலா உருண்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். முட்டையில் வறுவல், முட்டை 65, குழம்பு செய்து சாப்பிட்டுருப்பீங்க! ஆனால் மட்டன் போலவே முட்டையிலும் கோலா உருண்டை செய்யாலம் தெரியுமா? முட்டை அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்றாகும்.

-விளம்பரம்-

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படிப்பட்ட முட்டையை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று முட்டை கோலா உருண்டை. Meatballs என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த கோலா உருண்டைகள் இந்திய துணை கண்டம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகை. இவை மாமிசம் சேர்க்காமலும் செய்யப்படுகிறது. மாமிசம் சேர்க்காமல் செய்யப்படும் கோலா உருண்டைகளை கிரீஸ் நாட்டில் hortokeftedes என்று அழைக்கிறார்கள். மாமிசம் இல்லாமல் செய்யப்படும் கோலா உருண்டைகளில் மாமிசத்துக்கு பதிலாக உருளைக்கிழங்கோ அல்லது பன்னிர்ரோ சேர்க்கப்படுகிறது.

சில பகுதிகளில் இவை கிரேவி ஆகவும் செய்யப்படுகிறது. ருசியான மற்றும் மிருதுவான முட்டை கோலா உருண்டையை யாருக்குத்தான் பிடிக்காது, அசைவ பிரியர்களுக்கு இந்த வாரம் கடைசில் என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு அருமையான ரெசிபி தான் இந்த முட்டை கோலா உருண்டை. அது மட்டும் அல்லாமல் விருந்தினர்கள் வருகையில் அப்பொழுது இந்த முட்டை கோலா உருண்டையை செய்து பரிமாறினாள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள், ஏனென்றால் இந்த ரெசிபி அவ்வளவு சுவையாக இருக்கும். பெரும்பாலான நபர்கள் அவித்த முட்டையை பெரிதும் விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த முட்டை கோலா உருண்டை செய்து செய்து கொடுத்தால் ருசித்து ருசித்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும்.

Print
4.67 from 3 votes

முட்டை கோலா உருண்டை | Egg Kola Urundai Recipe In Tamil

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது முட்டையில் கோலா உருண்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். முட்டையில் வறுவல், முட்டை 65, குழம்பு செய்து சாப்பிட்டுருப்பீங்க! ஆனால் மட்டன் போலவே முட்டையிலும் கோலா உருண்டை செய்யாலம் தெரியுமா? முட்டை அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்றாகும். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படிப்பட்ட முட்டையை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று முட்டை கோலா உருண்டை. பெரும்பாலான நபர்கள் அவித்த முட்டையை பெரிதும் விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த முட்டை கோலா உருண்டை செய்து செய்து கொடுத்தால் ருசித்து ருசித்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Egg Kola Urundai
Yield: 4 People
Calories: 67.39kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 4 முட்டை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
  • 4 டேபிள் ஸ்பூன் பிரெட் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முட்டைகளை ஒரு‌ பாத்திரத்தில் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பின் அதனை துருவி வைத்துக் கொள்ளவும்.‌
  • பின் அதனுடன் மிளகாய் தூள், மைதா,
    சோள மாவு, வெங்காயம், கொத்தமல்லி கரம் மசாலா, உப்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின் இரண்டு கைகளிலும் எண்ணெய் தடவி முட்டை கலவையை சிறிதளவு எடுத்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  • பின் சோள மாவை தண்ணீரில் கரைத்து இந்த உருண்டையை அந்த சோள மாவு கலவையில் பிரட்டி, பின் பிரெட் துகள்களில் நன்கு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு‌ வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த முட்டை கோலா உருண்டையை ஒன்று ஒன்றாக எண்ணெயில் போட்டு பொரித்த எடுக்கவும். அவ்வளவுதான்‌ சுவையான முட்டை கோலா உருண்டை தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 67.39kcal | Carbohydrates: 6g | Protein: 6.64g | Fat: 4.57g | Sodium: 168mg | Potassium: 174mg | Vitamin A: 96IU | Calcium: 24.72mg | Iron: 2.91mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பாகற்காய் முட்டை புர்ஜி ஒரு முறை மட்டும் இப்படி செய்து பாருங்க அட்டகாசமான ருசியில் இருக்கும்!