காரசாரமான ஆந்திர ஸ்டைல் பென்னே தோசை சட்னி இந்த முறையில் செய்து அசத்துங்கள்!

- Advertisement -

கர்நாடகாவில் ரொம்பவே ஃபேமஸான இந்த பென்னே தோசை சட்னி எப்படி செய்வது என்று பார்க்க இருக்கோம்.  இந்த சட்னி செய்து தோசை மேல தடவி சுட்டா எத்தனை தோசைவேனா சாப்பிட்டே இருக்கலாம். அதுவும் இந்த தோசைக்கு தேங்காய் சட்னி ரொம்பவே பொருத்தமா இருக்கும். இது வெறும்  தோசையா கூட அப்படியே சாப்பிடலாம் .

-விளம்பரம்-

இது காலை நேர உணவுகளுக்கு செய்து கொடுக்கும் பொழுது ரொம்பவே சுலபமாகவும் செய்துவிடலாம். ரொம்பவே டேஸ்டாவும் இருக்கும். அதனால குழந்தைகளுக்கும் இது ரொம்பவே பிடிக்கும். வீட்டில் இருக்கிற பெரியவங்களுக்கும் இந்த பென்னே தோசை சட்னி ரொம்பவே விருப்பமான தோசையாக இருக்கும்.

- Advertisement -

இந்த மாதிரி அண்டை மாநிலங்கள்ல உள்ள ஸ்பெஷலான உணவுகளை நம்ம செய்து கொடுக்கும்போது  எல்லாருமே ரொம்பவே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. இங்க நம்ம வைக்கிற தோசைகளை விட புதுசா பென்னே தோசை சட்னிக்கு பெயர் சொல்லும் போது அந்த தௌசை ரொம்பவே ஸ்பெஷல் அப்படிங்கிற எண்ணம் எல்லாருக்குமே இருக்கும். அப்படி  பென்னே தோசை சட்னி எப்படி கர்நாடக ஸ்டைல செய்வது. சுவையான பென்னே தோசை   எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

பென்னே தோசை சட்னி | Penne Dosai Chutney Recipe In Tamil

கர்நாடகாவில் ரொம்பவே ஃபேமஸான இந்த பென்னே தோசை சட்னி எப்படி செய்வது என்று பார்க்க இருக்கோம்.  இந்த சட்னி செய்து தோசை மேல தடவி சுட்டா எத்தனை தோசைவேனா சாப்பிட்டே இருக்கலாம்.அண்டை மாநிலங்கள்ல உள்ள ஸ்பெஷலான உணவுகளை நம்ம செய்து கொடுக்கும்போது  எல்லாருமே ரொம்பவே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. இங்க நம்ம வைக்கிற தோசைகளை விட புதுசா பென்னே தோசை சட்னிக்கு பெயர் சொல்லும் போது அந்த தௌசை ரொம்பவே ஸ்பெஷல் அப்படிங்கிற எண்ணம் எல்லாருக்குமே இருக்கும். அப்படி  பென்னே தோசை சட்னி எப்படி கர்நாடக ஸ்டைல செய்வது. சுவையான பென்னே தோசை   எப்படிசெய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Penne Dosai
Yield: 4
Calories: 206kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் தோசைமாவு
  • 1 வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • 5 காய்ந்த மிளகாய்
  • 2 ஏலக்காய்
  • 1/4 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 1 சிறய துண்டு வெல்லம்
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • வெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  •  
    முதலில் மிக்ஸி ஜாரில் வெங்காயம் காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் வெல்லம், ஏலக்காய், உப்பு, மஞ்சள் தூள் , சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் .அரைத்து வைத்துள்ள மிளகாய் சட்னியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  •  பிறகு அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் அதில்  மாவை ஊற்றி தோசையாக தேய்க்க வேண்டும்.
  •  பிறகு அதன் மேல் அரைத்து வைத்துள்ள மிளகாய் சட்னியை நன்றாக தடவ வேண்டும் .
  • மிளகாய் சட்னி தடவிய பிறகு அதன் மேல் நமக்கு எவ்வளவு விருப்பமோ அவ்வளவு வெண்ணையை வைத்து நன்றாக தோசை வெந்து வெண்ணெய உருகிய பிறகு எடுத்து சூடாக பரிமாறினால் சுவையான பென்னே தோசை சட்னி தயார்.
  •  இந்த தோசையை தேங்காய் சட்னி உடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 250g | Calories: 206kcal | Carbohydrates: 67g | Protein: 26g | Sodium: 88mg | Potassium: 328mg | Iron: 1mg