Home ஸ்நாக்ஸ் வீட்டில சாதம் மிஞ்சிடுச்சு அப்படின்னா ஒரு தடவ இந்த பழைய சாத அடை செஞ்சு பாருங்க...

வீட்டில சாதம் மிஞ்சிடுச்சு அப்படின்னா ஒரு தடவ இந்த பழைய சாத அடை செஞ்சு பாருங்க சட்டுனு காலி ஆகிவிடும்!

நம்ம என்னதான் வீட்ல பார்த்து அளவா சமைச்சாலும் எப்படியாவது டெய்லி சாப்பாடு கொஞ்சமாவது நமக்கு மீதி வந்துடும் அப்படி மீதம் ஆகுற பழைய சாதத்தை நம்ம எல்லாரும் தண்ணீரில் நாம் மோர் தயிர் என ஒரே அது கூட வெங்காயம் பச்சை மிளகாய் சைடு டிஷ்ஷா வச்சுட்டு சாப்பிடுவோம் அப்படி சாப்பிடுவதற்கும் ரொம்பவே அருமையான டேஸ்டாக இருக்கும். ஆனால் டெய்லி மே இப்படி சாப்பிட்டா போர் அடிச்சிடும் இல்லையா அதுக்கு நம்ம ஒரு டிஃபரண்டான அடை செஞ்சு சாப்பிடலாம்.

-விளம்பரம்-

இந்த பழைய சாத அடை சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும். நம்ம வீட்ல தோசை மாவுன்னு எதுவுமே இல்லனா பழைய சாதம் இருந்தா போதும் டக்குனு காலை உணவோ இல்ல இரவு உணவாகவோ இந்த பழைய சாத அடை செஞ்சு சாப்பிடலாம். இந்த பழைய சாத அடை செய்வது ரொம்பவே ஈசியான ஒன்னு கொஞ்சம் காய்கறிகள் மட்டும் இருந்தா போதும் ஒரு சூப்பரான ஆரோக்கியமான அடையை நம்ம செஞ்சுடலாம். இந்த அடை கூட சாப்பிடுவதற்கு நமக்கு எந்த சட்னியும் தேவையில்லை.

அப்படியே சாப்பிட்டு முடிச்சிடலாம். நமக்கு பழைய சாதமும் வீணாகாத மாதிரி இருக்கும் அதே நேரத்தில் யூஸ்ஃபுல்லா நமக்கு பிரேக்ஃபாஸ்டோ இல்ல நைட் சாப்பாடோ ரெடி ஆன மாதிரியும் இருக்கும். இந்த அடைய நம்ம பழைய சாதம் வைத்து தான் பண்ணனும் அப்படின்ற அவசியம் இல்ல சூடு சாதம் இருக்கு அதுல ஏதாவது டிஃபரண்டா சாப்பிடணும் அப்படின்னு தோணுனா கூட இந்த அடை செஞ்சு சாப்பிடலாம்.இப்ப வாங்க இந்த ருசியான பழைய சாத அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
3.80 from 5 votes

பழைய சாத அடை | Rest Rice Adai Recipe In Tamil

பழைய சாத அடை சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும். நம்ம வீட்ல தோசை மாவுன்னு எதுவுமே இல்லனாபழைய சாதம் இருந்தா போதும் டக்குனு காலை உணவோ இல்ல இரவு உணவாகவோ இந்த பழைய சாத அடைசெஞ்சு சாப்பிடலாம். இந்த பழைய சாத அடை செய்வது ரொம்பவே ஈசியான ஒன்னு கொஞ்சம் காய்கறிகள்மட்டும் இருந்தா போதும் ஒரு சூப்பரான ஆரோக்கியமான அடையை நம்ம செஞ்சுடலாம். இந்த அடைகூட சாப்பிடுவதற்கு நமக்கு எந்த சட்னியும் தேவையில்லை.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Rest Rice Adai
Yield: 4
Calories: 155kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 கப் பழைய சாதம்
  • 1/2 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 கப் துருவிய கேரட்
  • 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகள்
  • 4 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  •  
    முதலில் வெங்காயம் பச்சை மிளகாய் காரட் அனைத்தையும் ரெடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் சாதத்தை சேர்த்து அதனை நன்றாக மசித்து விடவும்.
  • பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் துருவிய கேரட் துருவிய இஞ்சி சேர்த்துக் கொள்ளவும்.
  • பிறகு அதனுடன் திவ்யா அளவு உப்பு பெருங்காயத்தூள் சீரகம் கொத்தமல்லி இலைகள் அரிசி மாவு அனைத்தும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • இறுதியாக சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிசைந்து தனியாக எடுத்து வைக்கவும்
  • ஒரு வாழை இலை எடுத்து அதன் மேல் என்னை தடவி கலந்து வைத்துள்ள மாவில் இருந்து ஒரு உருண்டை எடுத்து தடிமனாக இல்லாமல் லேசாக தட்டிக் கொள்ளவும்
  • ஒரு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி தட்டி வைத்துள்ளதை சேர்த்து இரு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான பழைய சாத அடை தயார்

Nutrition

Serving: 500g | Calories: 155kcal | Carbohydrates: 210g | Protein: 2.9g | Fiber: 1g

இதையும் படியுங்கள் : சூப்பரான முடக்கத்தான் கீரை தோசை இப்படி மொறுகலா செய்து செஞ்சி கொடுத்தா எத்தனை தோசைனாலும் சாப்பிடுவாங்க!