- Advertisement -
நீங்கள் இட்லி, தோசை, சப்பாத்திகளுக்கு சில குறிப்பிட்ட வகை சட்னிகளை மட்டும் சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போது கண்டிப்பாக வீட்டில் இந்த சுவையான பூண்டு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் நீங்கள் இதற்கு முன் இந்த மாதிரியான சட்னியை செய்து சாப்பிட்டிருக்க மாட்டீர்கள். இது போன்று ஒரு தடவை நீங்களும்
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : செட்டிநாடு காரசாரமான பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி ?
- Advertisement -
உங்கள் வீட்டில் செய்து சாப்பிடுங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்து விடும் உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு சட்னியாக மாறிவிடும். சுவையான பூண்டு சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள் பார்க்கலாம்.
பூண்டு சட்னி | Garlic Chutney Recipe In Tamil
பூண்டு சட்னி இந்த சட்னி இட்லி, தோசை போன்றவற்றையுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.குறைந்த நேரத்தில் சுலபமாக செய்து விடலாம். வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் ஒரு முறை இந்த பூண்டு சட்னி ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- 12 சின்ன வெங்காயம்
- 8 பல் பூண்டு
- 3 காய்ந்த மிளகாய்
- உப்பு,புளி சிறிதளவு
தாளிக்க:
- கறிவேப்பிலை சிறிதளவு
- கடுகு சிறிதளவு
- பெருங்காயத் தூள் சிறிதளவு
செய்முறை
செய்முறை:
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிறகு மிக்சியில் மிளகாய், வெங்காயம், பூண்டு, தேவையான அளவு உப்பு, மற்றும் சிறிதளவு புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- அடுத்து மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சிறிதளவு பெருங்காயம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி பரிமாறவும்.
- இப்பொழுது சுவையான பூண்டு சட்னி தயார்.
Nutrition
Carbohydrates: 2.7g | Protein: 0.7g | Sodium: 1.1mg | Potassium: 52mg | Fiber: 0.6g | Calcium: 3.8mg | Iron: 0.1mg