தீராத கடனும் தீர, வறுமை நீங்கி பணம் சேர ஆடி செவ்வாயில் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

- Advertisement -

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம். இம்மாதத்தில் நாம் எந்த வேண்டுதலை வைத்தாலும் அது உடனடியாக நடந்து விடும் என்பது நம்பிக்கை. ஏனென்றால் ஆடி மாதத்தில் அம்மனே தவம் இருந்து அவரது வேண்டுதலை அவரே நிறைவேற்றிக் கொண்டார் என்பதினால். அம்பிகையே இந்த மாதத்தை தேர்ந்தெடுத்து தன்னுடைய வேண்டுதலை வைத்து அது நிறைவேற்றியதால் இந்த மாதத்தில் நம்முடைய வேண்டுதல் எதுவாக இருப்பதும் அதுவும் விரைவில் நிறைவேறும்.

-விளம்பரம்-

இத்தகைய சிறப்புமிக்க இந்த மாதத்தில் நம்முடைய குடும்பத்தில் உள்ள வறுமை பிணி, பீடை அனைத்தும் நீங்கி தீராத கடன் சுமை கூட விலக அம்பிகையை செவ்வாய்க்கிழமையில் வழிபட வேண்டும். செவ்வாய்க்கிழமையில் வழிபடுவதற்கான காரணம் கடன் நீங்க இந்த நாளை போல உகந்த நாள் ஏதுமில்லை. ஆகையால் ஆடி மாதத்தில் இந்த நாளில் நாம் அம்பிகையை வழிபடுவது மேலும் பல நலன்களை தரும்.

- Advertisement -

கடன் தீர ஆடி மாத வழிபாடு

ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யும் வேலையில் நாமும் பால் வாங்கிக் கொடுக்கலாம். அல்லது, பாலாபிஷேகம் செய்யும் வேலையில் நாமும் கலந்து கொள்ளலாம், இது மிகவும் விசேஷமானது. அல்லது, சர்க்கரைப் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்துவிட்டு பின் கோவிலுக்கு வருபவருக்கு பிரசாதமாக வழங்கலாம்.

ஆலயம் சென்று கொடுக்க முடியாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு பிரசாதம் வைத்து கொடுக்கலாம். அதுவும் முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் வீட்டில் வசிப்பவர்களுக்கு சர்க்கரைப் பொங்கலினை பிரசாதமாக செய்து கொடுக்கலாம். இப்படி செய்வதன் மூலம் நமக்கு இருக்கும் கடன் பிரச்சனை அனைத்தும் நீங்கி, குடும்பம் செல்வ செழிப்புடன் வாழ அம்பிகையின் அருள் நமக்கு கிடைக்கும்.

செவ்வாயில் வழிப்பட முடியாதவர்கள்

பொங்கல் வைத்து வழிபடுவது தான் நம் பாரம்பரியம். அதுவும் இந்த மாதத்தில் நாம் பொங்கல் வைத்து வழிபடுவது குடும்பத்தில் மிகவும் சுபிட்சமாக இருக்கும். செவ்வாய்க்கிழமைகளில் பொங்கல் வைத்து வழிபட முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைத்து வழிபட்டு அம்மனின் அருளை பெறலாம். இத்தனை நலன்களை தரக்கூடிய இந்த ஆடி மாத வழிபாட்டை நாமும் செய்து நம் குடும்பம் கடன் பிணி, பீடை, வறுமை இல்லாமல் சுபிட்சமாக வாழ வழி தேடி கொள்ளலாம்.

-விளம்பரம்-