மருதாணியை பெண்கள் எதற்காக வைத்துக் கொள்கிறார்கள் என்ற ரகசியத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்!

- Advertisement -

‘மருதாணி வைச்சு கை நல்லா செவந்தா, வீட்டுக்காரரு உன் மேலே ரொம்பப் பாசமா இருக்கார்னு அர்த்தம்டி’ – என்கிற பாட்டியின் வார்த்தைகளை நம்பி மருதாணி வைத்துக்கொண்ட பெண்கள் சிலர். அழகுக்காக மருதாணி வைத்துக்கொண்ட பெண்கள் சிலர். ஆனால், மருதாணி வைப்பதால் கிடைக்கிற பலன்களைப் பற்றி தெரிந்துகொண்டால், மாதம் ஒருமுறை நாம் அனைவருமே மருதாணியும் கைகளுமாகத்தான் அலைவோம். மருதாணியை செடியில் இருந்து பறிப்பது முதல் கையில் வைப்பது வரை பல வழிமுறைகள் இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. இவற்றை முறையாக பயன்படுத்தினால் கண்டிப்பாக மருதாணி வைப்பதன் ஆன்மிக, ஜோதிட மற்றும் மருத்துவ பலன்களையும் நம்மால் பெற முடியும். மருதாணியை பெண்கள் எதற்காக வைத்துக் கொள்கிறார்கள் என்ற ரகசியத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

-விளம்பரம்-

மருதாணி செடி

மருதாணி தெய்வீக மூலிகை வரிசையில் துளசியைப்போன்று மகாலட்சுமி வாசம் செய்யும் மருத்துவ குணம் கொண்ட செடியாகும். மருதாணி செடியை வீட்டில் வளர்ப்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இந்த ஒரு செடி மட்டும் வீட்டில் எந்த ஒரு திசையிலும் வைத்து வளர்க்கலாம். தோஷம் இல்லாத மருதாணி செடி மிகவும் மகத்துவமானது. குறிப்பாக வீட்டிற்கு முன் பக்கத்தில் மருதாணி செடியை வளர்த்தால் நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றலால் எந்த பிரச்சினையும் வராது. எதிர்மறை ஆற்றலை வாசலிலேயே தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி மருதாணி செடிக்கு உண்டு.

- Advertisement -

கையில் மருதாணி வைப்பதற்கான காரணம்

பூஜை விழாக்கள், மத விழாக்கள் மற்றும் திருமணம் போன்ற விசேஷ சமயங்களில் பெண்கள் தங்கள் காலில் மருதாணி பூசுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். குறிப்பாக இந்து மதத்தில் இந்த பாரம்பரியம் அதிகமாக உள்ளது. மருதாணி செடியின் இலைகளை பறித்து வேறு எந்த ஒரு பொருளையும் அதனுடன் சேர்க்காமல் அரைத்து மாதம் ஒரு முறையாவது பெண்கள் கைகளில் இட்டுக் கொண்டால் அவர்களுடைய கைகளில் எப்பொழுதும் மகாலட்சுமி வாசம் செய்வாள். மருதாணி வைக்கப்படும் கைகளில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். காரிய தடை என்பது இருக்கவே இருக்காது. லட்சுமி தேவிக்கு விருப்பமான, மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்றாகவும் மருதாணி சொல்லப்படுகிறது. அதனால் மருதாணி வைத்துக் கொள்வதால் ஐஸ்வர்யா பெருகும் என சொல்லப்படுகிறது.

எந்த நாட்களில் மருதாணி வைக்கலாம்?

வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலட்சுமியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. செவ்வாய் கிழமை மற்ற விரத நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் மருதாணி பூசலாம். மிக குறிப்பாக புதன், வியாழன் மற்றும் சனி போன்ற நாட்களில் மருதாணி பூசினால் குடும்பத்தில் விருத்தியும், மகிழ்ச்சியும் புதிய ஆடை, ஆபரண சேர்க்கையும் உண்டாகும் என்று சாஸ்திரம் சொல்கிறது.‌ அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.

மருதாணி வைப்பதால் ஏற்படும் நன்மைகள்

மருதாணியின் முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையவையாகும். இவற்றின் இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்றவை மருத்துவ பயன்களை கொண்டது. மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். பெண்களுக்குப் பேய் பிடிக்காது. மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது. மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்க வாய்ப்பே இல்லை.

-விளம்பரம்-

எப்போது மருதாணி வைக்கக் கூடாது ?

ராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் மருதாணி வைக்கக் கூடாது. சந்திராஷ்டம காலங்களில் மருதாணி வைப்பதை தவிர்க்க வேண்டும். அவரவருக்கு சந்திராஷ்டமம் நடக்கும் போது மட்டுமின்றி, பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களின் சந்திராஷ்டமம் நடக்கும் காலங்களிலும் மருதாணி வைக்கக் கூடாது.

செல்வம் சேர மருதாணி தீபம்

மருதாணி இலை மகாலக்ஷ்மியின் ஒரு வடிவம் எனலாம். ஒரு தட்டில் மஞ்சள், குங்குமம் வைத்து அதில் மருதாணி இலை, கிராம்பு, ஏலக்காய் வைத்து, பின் அதன் மேல் நெய் தீபம் ஏற்றி வந்தால் உங்கள் கடன் தொல்லை நீங்கி உங்கள் வீட்டில் பணம் பெருகும். அதன்பிறகு உங்கள் வாழ்க்கையே மாறி விடும்.

இதனையும் படியுங்கள் : மறந்தும் கூட துளசி செடிக்கு அருகில் வைக்க கூடாது பொருட்கள் ? அப்படி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா ?

-விளம்பரம்-