Home அசைவம் நெத்திலி மீன் வறுவல், நெத்திலி மீன் வாங்கினால் இப்படி வறுவல் செஞ்சி பாருங்கள்!

நெத்திலி மீன் வறுவல், நெத்திலி மீன் வாங்கினால் இப்படி வறுவல் செஞ்சி பாருங்கள்!

மீன்களில் தான் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள் அதிகமாக இருக்கிறது.பலருக்கு சிக்கன் , கறியை விட மீன் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி மீன் பிரியர்களுக்கு நெத்திலி மீன் வறுவல் என்றால் சொல்லவே வேண்டாம், வாயில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு சுவையாக இருக்க கூடிய இந்த நெத்திலி மீன் வறுவல் எப்படி செய்வது தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

-விளம்பரம்-

என்னதான் சிக்கன், மட்டன் என்று இவற்றை அதிகமாக சாப்பிட்டாலும், . பலரும் மீன்களை வீட்டில் செய்தாலும், கடைகளுக்கு சென்றாலும் பெரிய மீன்களை தான் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவதுண்டு. ஆனால் இந்த நெத்திலி மீனில் உடம்பிற்குத் தேவையான எவ்வளவு ஊட்டச்சத்துகள் இருக்கின்றது என்று தெரியுமா?

இந்த நெத்திலி மீனை குழம்பு வைத்துச் சாப்பிடலாம், தொக்கு செய்து சாப்பிடலாம் அல்லது குழந்தைகளுக்கு பிடிக்கின்ற வகையில் எண்ணெயில் பொரித்து நெத்திலி ஃப்ரை செய்து சாப்பிடலாம். வாருங்கள் இந்த நெத்திலி மீனில் மசாலாக்கள் சேர்த்து அசத்தலான சுவையில் செய்யும் நெத்திலி மீன் வறுவல், எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்

Print
No ratings yet

நெத்திலி மீன் வறுவல் | Anchovies Fish Fry In Tamil

மீன்களில்தான் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள் அதிகமாக இருக்கிறது.பலருக்கு சிக்கன் , கறியைவிட மீன் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி மீன் பிரியர்களுக்கு நெத்திலி மீன்வறுவல் என்றால் சொல்லவே வேண்டாம், வாயில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு சுவையாக இருக்க கூடிய இந்த நெத்திலி மீன் வறுவல் எப்படி செய்வது தெரிந்துகொள்ள இருக்கிறோம். நெத்திலி மீனை குழம்பு வைத்துச் சாப்பிடலாம், தொக்குசெய்து சாப்பிடலாம் அல்லது குழந்தைகளுக்கு பிடிக்கின்ற வகையில் எண்ணெயில் பொரித்துநெத்திலி ஃப்ரை செய்து சாப்பிடலாம்.
Prep Time30 minutes
Active Time20 minutes
Total Time50 minutes
Course: starters
Cuisine: tamil nadu
Keyword: Anchovies Fish Fry
Yield: 4
Calories: 128kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 500 கிராம் நெத்திலி
  • தேங்காய் எண்ணெய் வறுக்கத் தேவையான அளவு

ஊறவைக்கத் தேவையான பொருட்கள்:

  • 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 ஸ்பூன் சிவப்பு மிளகாய் பொடி
  • 1 /2 ஸ்பூன் மஞ்சள் பொடி
  • 1 /2 ஸ்பூன் தனியா பொடி
  • 1 /2 ஸ்பூன் மிளகுப் பொடி
  • 1 சிட்டிகை வெந்தையப் பொடி
  • 1 /2 துண்டு இஞ்சி இடித்தது
  • 4 பற்கள் பூண்டு இடித்தது
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • மீனை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
  • மேலே ஊற வைக்கக் குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து பேஸ்ட் பதத்திற்குக் கலந்துகொள்ளவும்.
     
  • கலந்ததும் அதில் சுந்தம் செய்து வைத்துள்ள மீனை அதில் பிரட்டிக் கொள்ளவும். அதை சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  • கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு அது சூடானதும், ஊற வைத்துள்ள மீன்துண்டுகளைப் போடவும்.
  • மீன் பொன்னிறமாக வறும் வரை வறுக்கவும். அப்போதுதான் மொறு மொறுவென இருக்கும். அவ்வளவுதான் சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 128kcal | Carbohydrates: 33.3g | Protein: 14g | Sodium: 123mg | Potassium: 186mg | Vitamin A: 32IU | Vitamin C: 123mg

இதையும் படியுங்கள் : தேங்காய்ப்பால் சேர்த்து இப்படி மட்டும் மீன் குழம்பு வச்சு பாருங்க! இனிமே மீன் வாங்கினால் இப்படித்தான் குழம்பு வைப்பீங்க!