Home அசைவம் தேங்காய்ப்பால் சேர்த்து இப்படி மட்டும் மீன் குழம்பு வச்சு பாருங்க! இனிமே மீன் வாங்கினால் இப்படித்தான்...

தேங்காய்ப்பால் சேர்த்து இப்படி மட்டும் மீன் குழம்பு வச்சு பாருங்க! இனிமே மீன் வாங்கினால் இப்படித்தான் குழம்பு வைப்பீங்க!

அசைவத்தில் மீன் குழம்பு தனி இடத்தை பிடிக்கும். எந்த மீன் போட்டு குழம்பு வைத்தாலும் இதன் சுவைக்கு அது ஈடு இணை ஆகாது. சாதாரண  நீங்கள் ஒரு முறை தேங்காய்ப்பால் சேர்த்து செய்யப்படும் தேங்காய்ப்பால் மீன் குழம்பு ருசித்து விட்டால் போதும், இதன் பிறகு மீன் பார்க்கும் போதெல்லாம் இந்த தேங்காய்ப்பால் மீன் குழம்பு தான் ஞாபகத்திற்கு வரும் அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதம் இருக்கும்

-விளம்பரம்-

சுவையான தேங்காய்ப்பால் மீன் குழம்பு, இப்படி ஒருமுறை செய்து பாருங்கள் சுவை உங்கள் நாவிலேயே ஒட்டிக் கொள்ளும்.அசைவ வகைகளிலே நம் உடலுக்கு சிறிதும் கெடுதல் இல்லாதது இந்த மீன் வகைகள் தான்.மீன் வகைகளில் தான் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

அந்த வையில் இந்த வெள்ளை சுதும்பு மீனில் வைட்டமின் பி-12, புரதம், பொட்டாசியம், அதிக அளவில் உள்ளது. இந்த மீனை கேரளா தேங்காய்ப்பால் சேர்த்து மீன் குழம்பு சமைக்க செய்முறை தான் இது. இது ஒரு அருமையான  மீன் குழம்பு ரெசிபிங்க. வாங்க நாமும் இந்த வித்தியாசமான மீன் குழம்பை கற்றுக் கொள்வோம்.

Print
4 from 2 votes

தேங்காய்ப்பால் மீன் குழம்பு | Coconut Milk Fish Gravy Recipe In Tamil

அசைவத்தில் மீன் குழம்பு தனி இடத்தை பிடிக்கும்.எந்த மீன் போட்டு குழம்பு வைத்தாலும் இதன் சுவைக்கு அது ஈடு இணை ஆகாது. சாதாரண  நீங்கள் ஒரு முறை தேங்காய்ப்பால் சேர்த்து செய்யப்படும்தேங்காய்ப்பால் மீன் குழம்பு ருசித்து விட்டால் போதும், இதன் பிறகு மீன் பார்க்கும்போதெல்லாம் இந்த தேங்காய்ப்பால் மீன் குழம்பு தான் ஞாபகத்திற்கு வரும் அந்த அளவிற்குஇதன் சுவை பிரமாதம் இருக்கும்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Gravy
Cuisine: tamil nadu
Keyword: Coconut Milk Fish Gravy
Yield: 4
Calories: 649kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ மீன்
  • 2 தக்காளி
  • 2 வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • சிறிய துண்டு இஞ்சி
  • 6 பல் பூண்டு
  • மல்லி சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 4 தேக்கரண்டி மல்லித்தூள்
  • 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
  • 1/4 தேக்கரண்டி பெருஞ்சீரகத்தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • புளி சிறிய எலுமிச்சை அளவு
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/2 தேக்கரண்டி வெந்தயம்
  • 1 கப் தேங்காய்ப்பால்
  • 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • உப்பு தேவையானஅளவு

செய்முறை

  • முதலில் நறுக்க வேண்டியவற்றை நறுக்கி தயார் செய்து கொள்ளவும். தேங்காய்ப் பால் எடுத்து வைக்கவும். மீனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிந்து வைக்கவும், புளி கரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • சிறிதளவு வதங்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு சேர்த்து மூடி போட்டு நன்கு வதங்க விடவும்.
  • அதில் அனைத்து மசாலா தூளையும் சேர்த்து சிறிதளவு பிரட்டி புளித்தண்ணீரை சேர்க்கவும், புளித்தண்ணீர் அடங்கட்டும். வாடை விட்டு மசாலா, கொதித்து பின்பு சுத்தம் செய்த மீன் துண்டுகளை சேர்க்கவும். கொதி வரவும் அடுப்பை சிம்மில் வைக்கவும். உப்பு சரி பார்க்கவும்.
  • மீன் வெந்தவுடன் தேங்காய்ப்பாலை சேர்க்கவும். அடுப்பு சிம்மில் இருந்து கொதிக்க வேண்டும்.
  • குழம்பு கொதித்து எண்ணெய் தெளிய ஆரம்பிக்கவும், நறுக்கிய மல்லிதழை தூவி மூடி அடுப்பை அணைக்கவும். சுவையான தேங்காய்ப்பால் மீன் குழம்பு ரெடி

Nutrition

Serving: 300g | Calories: 649kcal | Carbohydrates: 24g | Protein: 64g | Fat: 352g | Potassium: 425mg | Calcium: 36mg

இதையும் படியுங்கள் : இனி கட்லா மீன் வாங்கினால் வீடே மணக்க மணக்க குழம்பு ஒரு தடவை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!