இனி கட்லா மீன் வாங்கினால் வீடே மணக்க மணக்க குழம்பு ஒரு தடவை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

- Advertisement -

மீன் அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு நாக்குல எச்சி ஊறும் அந்த அளவுக்கு மீன் ரொம்ப பிடிக்கும் அப்படின்னு சொல்றவங்க நிறைய பேர் இருக்காங்க. மீன்ல கட்லா மீன் பாறை மீன் வவ்வால் மீன் வஞ்சிரம் மீன் மத்தி மீன் ஜிலேபி மீன் கெண்டை மீன் கெளுத்தி மீன் ஊழி மீன் நகர மீன் முரல் மீன் அப்படின்னு எக்கச்சக்கமான மீன் வகைகள் இருக்கு இதுல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான மீன் ரொம்பவே பேவரட்டா இருக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம கட்லா மீன்ல எப்படி சிம்பிளா சூப்பரான மீன் குழம்பு வைப்பது என பார்க்க போறோம்.

-விளம்பரம்-

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான டேஸ்ட்டுல மீன் குழம்பு வைப்பாங்க. ஆனா இன்னிக்கு நம்ம வைக்கப் போற இந்த மீன் குழம்பு ரொம்ப வேஸ்ட் சாப்பிடுவதற்கும் அவ்ளோ ருசியா இருக்கும். தட்டுல சாதம் போட்டு அதில் மீனோட மீன் குழம்பு ஊத்தி பக்கத்துல ஒரு பொரிச்ச மீன் வச்சு சாப்பிட்டா அப்பதான் நமக்கு மீன் சாப்பிட்டா திருப்தியே இருக்கும். அந்த வகையில உங்க வீட்ல கட்லா மீன் எடுத்தீங்கன்னா இந்த மாதிரி டேஸ்ட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க கண்டிப்பா இந்த மாதிரி தான் மீன் குழம்பு வைப்பீங்க.

- Advertisement -

நல்லா புளிப்பா காரசாரமா வைக்க போற இந்த மீன் குழம்பு வரைக்கும் ரொம்ப பிடிக்கும். உங்க வீட்ல யாருக்காவது சளி பிடிச்சிருந்தா இந்த மீன் குழம்பு வச்சு சுட சுட நல்லெண்ணெய் ஊத்தி கொடுங்க கண்டிப்பா அத குடிச்சாங்கன்னா சீக்கிரத்திலேயே அவங்களுக்கு சளி சரியாகிவிடும். இப்ப வாங்க ஒரு சூப்பர் டேஸ்டான கட்லா மீன் குழம்பு எப்படி வைக்கிறது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

கட்லா மீன் குழம்பு | Catla Fish Recipe In Tamil

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான டேஸ்ட்டுல மீன் குழம்பு வைப்பாங்க. ஆனா இன்னிக்கு நம்ம வைக்கப் போறஇந்த மீன் குழம்பு ரொம்ப வேஸ்ட் சாப்பிடுவதற்கும் அவ்ளோ ருசியா இருக்கும். தட்டுல சாதம்போட்டு அதில் மீனோட மீன் குழம்பு ஊத்தி பக்கத்துல ஒரு பொரிச்ச மீன் வச்சு சாப்பிட்டாஅப்பதான் நமக்கு மீன் சாப்பிட்டா திருப்தியே இருக்கும். அந்த வகையில உங்க வீட்ல கட்லாமீன் எடுத்தீங்கன்னா இந்த மாதிரி டேஸ்ட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்ககண்டிப்பா இந்த மாதிரி தான் மீன் குழம்பு வைப்பீங்க. உங்க வீட்ல யாருக்காவது சளி பிடிச்சிருந்தா இந்த மீன்குழம்பு வச்சு சுட சுட நல்லெண்ணெய் ஊத்தி கொடுங்க கண்டிப்பா அத குடிச்சாங்கன்னா சீக்கிரத்திலேயேஅவங்களுக்கு சளி சரியாகிவிடும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Catla Fish Kulambu
Yield: 4
Calories: 128kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கிலோ கட்லா மீன்
  • புளி எலுமிச்சை பழ அளவு
  • 30 சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 3 தக்காளி
  • 2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கட்லா மீனில் உப்பு சேர்த்து நன்றாக தேய்த்து கழுவி எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் சின்ன வெங்காயம் 20 மற்றும் தக்காளி சேர்த்து எண்ணெய் ஊற்றி நன்றாக பொண்ணிடமாக வதக்கிஎடுத்துக் கொள்ளவும்
  • அதனை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  • ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • பிறகு மீதி இருக்கும் சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்
  • பிறகு புளியை ஊறவைத்து கரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
  • குழம்பு மிளகாய் தூள் உப்பு அரைத்து வைத்துள்ள விழுது அனைத்தையும் சேர்த்து 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைக்கவும்
  • இறுதியாக கழுவி வைத்துள்ள மீனை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான கட்லாமீன் குழம்பு தயார்

Nutrition

Serving: 100g | Calories: 128kcal | Carbohydrates: 33.3g | Protein: 14g | Sodium: 35mg | Potassium: 186mg

இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான மீன் மிளகு மசாலா இப்படி செஞ்சி பாருங்க ?