இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திரா ரெசிபிக்கள் தான் சுவையாகவும், நன்கு காரமாகவும் இருக்கும். அதிலும் ஆந்திராவில் சட்னி, தால், கோங்குரா, பெண்டகாயா மசாலா போன்றவை தான் மிகவும் பிரபலமானவை. வழக்கமான மதியம் குழம்பிற்கு, ஒரே மாதிரியான பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பெண்டகாயா மசாலா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
வெண்டைக்காயை கொண்டு பொரியல், சாம்பார், புளிக்குழம்பு என என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் வெண்டைக்காய் வழுவழுப்பான தன்மையைக் கொண்டதால், இதை பக்குவமாக சமைத்தால் தான் அந்த வழுவழுப்புத்தன்மை இல்லாமல் இருக்கும். வெண்டைக்காயுடன் வறுத்த வேர்க்கடலை சேர்த்து மிக எளிதாக 20 நிமிடங்களுக்குள் செய்யக்கூடிய ஸைட் டிஷ் என இந்த வெண்டைக்காய் வேப்புடுவை குறிப்பிடலாம். இதனைத் தயிர் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிட்டால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு ருசியாக இருக்கும்.
ஆந்திரா உணவில் இந்த வெண்டைக்காய் மசாலா பிரதான உணவு. எந்த பண்டிகை நிகழ்ச்சி என்றாலும் இது கட்டாயம் இடம் பெறும். அந்த வகையில் அவர்களின் ஸ்பெஷலான வெண்டைக்காய் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். ஆந்திராவில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பெண்டகாயா வேப்புடு செய்முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆந்திரா பெண்டகாயா மசாலா | Andhra Bendakaya Masala Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 1/4 கி வெண்டைக்காய்
- 10 சின்ன வெங்காயம்
- 1 பெரிய வெங்காயம்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டீஸ்பூன் தனியா
- 1 டீஸ்பூன் சீரகம்
- உப்பு தேவையான அளவு
- 4 வர மிளகாய்
- 1/4 கப் வேர்க்கடலை
- 5 பல் பூண்டு
தாளிக்க :
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 வர மிளகாய்
செய்முறை
- முதலில் வெண்டைக்காயை கழுவி, ஒரு துணியால் துடைத்து விட்டு நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்காமல் தனியா, சீரகம், வேர்க்கடலை, வர மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலை, சீரகம், தனியா, வரமிளகாய், பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதன்பிறகு வெண்டைக்காய் வதங்கினதும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை தூவி நன்கு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான ஆந்திரா ஸ்டைல் பெண்டகாயா மசாலா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ஆந்திரா கிரீன் ஆப்பிள் ஊறுகாய் வீட்டில் இருந்தால் போதும், ஆரோக்கியமும், ருசியும் நிறைந்த சைடிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம்!