கசப்பு குறைவாக ஆந்திரா ஸ்டைலில் பாகற்காய் பொரியல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசி நாக்கிலேயே இருக்கும்!

- Advertisement -

பொதுவாகவே பாகற்காய் என்றால் கசப்பு என்று அதை காய்கறி பட்டியலில் இருந்து நாம் ஒதுக்கி வைத்திருக்கிறோம். பாகற்காய் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதனால் வாரத்தில் ஒருமுறையாவது குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கும் பாவக்காய் சமைத்து கொடுக்க வேண்டும். வீட்டில் பாகற்காய் சமைத்தால் நிச்சயமாக யாரும் விரும்பி சாப்பிட மாட்டாங்க. அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு பாவக்காய் பொரியல் ரெசிப்பி இதோ உங்களுக்காக.

-விளம்பரம்-

எவ்வளவுதான் யோசித்தாலும் கசப்பே தெரியாமல் பாகற்காய் சமைக்க முடியாது. ஆனால் இந்த ஆந்திரா ஸ்டைலில் பாகற்காய் பொரியல் கசப்பே தெரியாமல் செய்து விடலாம் .பாகற்காய் முக்கிய ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுசாக இருக்கிறது பாகற்காய். கசப்பு சுவை மிக்க பாகற்காய் நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.

- Advertisement -

சுட சுட சாதத்தில் இதை பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். ரொம்பவும் பெரிய பாவக்காய் இருக்கும் அல்லவா அதை வாங்காதீங்க.சின்ன சின்ன பாவக்காய் கடைகளில் விற்கும் அல்லவா அதை வாங்கி சமைத்தால் ருசி நன்றாக இருக்கும்.அனைத்து சாத வகைகளுக்கும்  இப்படி ஒரு பாகற்காய் பொரியல் செய்தால் பக்கா வான பக்க உணவு . அனைவர்க்கும் உபயோகமான ரெசிபியை தான் என்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பாகற்காய்  வைத்து இப்படி பொரியல் செய்து வைத்துக் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
No ratings yet

ஆந்திரா பாகற்காய் பொரியல் | Andhra Bitter gourd Poriyal

கசப்பே தெரியாமல் பாகற்காய் சமைக்க முடியாது. ஆனால் இந்த ஆந்திரா ஸ்டைலில் பாகற்காய் பொரியல் கசப்பே தெரியாமல் செய்து விடலாம் .பாகற்காய் முக்கிய ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுசாக இருக்கிறது பாகற்காய். கசப்பு சுவை மிக்க பாகற்காய் நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. பாகற்காய்  வைத்து இப்படி பொரியல் செய்து வைத்துக் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: LUNCH
Cuisine: andhra
Keyword: Andhra Bitter Gourd Stir Fry
Yield: 4
Calories: 63kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ பாகற்காய் 
  • 10 பூண்டு பற்கள்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 2 வர மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 2 வரமிளகாய்
  • 1 கைப்பிடி பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 1 ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு

செய்முறை

  • முதலில் 1/2 கிலோ அளவு பாகற்காயை எடுத்து அது மேலே அடர் பச்சை நிறத்தில் ரொம்பவும் முள்ளு முள்ளாக இருந்தால், அதை லேசாக சீவி எடுத்து விட்டு, வெட்டி உள்ளே இருக்கும் கொட்டைகளை நீக்கி விடுங்கள். அதன் பின்பு பாகற்காய் மிகவும் பொடியாக நறுக்கி சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கொஞ்சம் பெரிய அளவில் இருக்கும் பூண்டு பற்கள் – 10, சீரகம் – 1 ஸ்பூன், வர மிளகாய் தூள் – 2  ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு ஒரு ஓட்டு ஓட்டினால் பூண்டு நன்றாக அரைபட்டு நமக்கு கிடைத்துவிடும்.
  • இந்த மசாலா விழுதும் அப்படியே இருக்கட்டும். இதில் உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை கூடவோ குறைக்கவோ சேர்த்துக் கொள்ளலாம்.
  • அடுத்து அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், வரமிளகாய் – 2 போட்டு, நன்றாக சிவக்க விட்டு மிக மிக பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கைப்பிடி போட்டு, வெங்காயம் வதங்கியவுடன், வெட்டிய பாகற்காய்களை எண்ணெயில் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
  • பாவக்காய் எண்ணெயிலேயே முக்கால் பாகம் வதங்கி, வெந்து வந்தவுடன் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை இதில் போட்டு நன்றாக ஒரு முறை கலந்து விட்டு அடுப்பை சிம்மில் வைத்து ஒரு மூடி போட்டு வேக வைத்தால் ஐந்து நிமிடத்தில் பாவக்காய் சூப்பராக தயாராகி நமக்கு கிடைக்கும்.
  • இறுதியாக 1 ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு இதன் மேலே பிழிந்து, நன்றாக கலந்து பரிமாறி பாருங்கள். சூப்பரான சுவையில் பாவக்காய் பொரியல் நமக்கு கிடைத்திருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 63kcal | Carbohydrates: 5.4g | Protein: 7g | Potassium: 296mg | Fiber: 6.5g | Vitamin A: 471IU | Calcium: 19mg