லெமன் சாதம், புளி சாதம், தக்காளி சாதம், தேங்காய் சாதம், புதினா சாதம் அப்படின்னு பல கலந்த சாதங்கள் இருக்கு. இந்த கலந்த சாதங்கள் எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். அப்படி இப்படி கலந்த சாதங்கள் மேல விருப்பம் உள்ளவர்களுக்காகவே ஸ்பெசலா தேங்கா சாதத்தை ஆந்திரா ஸ்டைலை எப்படி ரொம்பவே சுவையா செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். எப்படி ரொம்பவே ருசியா இருக்கும் அப்படிங்கறது செய்து பார்த்து சாப்பிட இருக்கோம்.
இந்த மாதிரி தேங்காய் சாதத்தை வித்தியாசமா செஞ்சு கொடுக்கும்போது வீட்ல இருக்குற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச மாதிரி இருக்கும். உங்ககிட்ட நிறைய தேங்காய்கள் இருக்கு என்ன பண்றதுன்னு தெரியலையா? டெய்லி சட்னியும் வைக்க முடியாது செய்ற சாப்பாட்டிலும் கலக்க முடியல அப்படின்னு வருத்தப்பட்டா இந்த மாதிரி தேங்காய் சாதம் செஞ்சு கொடுத்தீங்கன்னா எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.
தேங்காய் சாதத்துக்கு கூட ஒரு வாழைக்காய் வறுவல் இல்ல உருளைக்கிழங்கு வறுவல் வச்சு கொடுக்கும்போது சாப்பிடுவதற்கு அவ்வளவு சுவையாக இருக்கும். இப்படி சுவையான கல்யாண வீடுகளில் செய்ற மாதிரியான தேங்காய் சோறு எப்படி ரொம்பவே சுலபமா நம்ம செய்கிறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம். இந்த சுவையான ஆந்திரா கல்யாண வீட்டு தேங்காய் சோறு எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி நாம இப்போ செய்ய போறோம். வாங்க இந்த தேங்காய் சாதம் எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
ஆந்திரா தேங்காய் சோறு | Andhra Coconut Rice In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் சாதம்
- 2 கப் தேங்காய் துருவல்
- 1 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுந்து
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 வெங்காயம்
- 4 பச்சைமிளகாய்
- 5 முந்திரிபருப்பு
- 6 காய்ந்த திராட்சை
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் நெய்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- பின்அதில் முந்திரி , காய்ந்த திராட்சை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- தேங்காய்நிறம் சற்றே மாற ஆரம்பித்த பிறகு அதில் எடுத்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இந்த சாதம் வடிக்கும் பொழுதே அதில் தேங்காய் பால் சேர்த்து வேக வைத்தால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும.
- பிறகு சாதத்தில் தேங்காய் துருவலைசேர்த்து நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.மேலே சிறிது நெய் சேர்த்து கலந்து விட்டு சூடாகஉருளைக்கிழங்கு வறுவலோடு பரிமாறினால் சுவையான ஆந்திர கல்யாண தேங்காய்சோறு தயார்.