- Advertisement -
மீன் பிரியர்களுக்கு இந்த காரசாரமான ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும். அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக பத்து, பதினைந்து நிமிடத்தில் சட்டென்று செய்து பொரித்து சாப்பிட்டு பார்த்தால் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடனடியாக செய்து அசத்தக்கூடிய இந்த வித்தியாசமான ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் இனி பார்க்க இருக்கிறோம்.
-விளம்பரம்-
ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல் | Andhra Style Fish Fry
மீன் பிரியர்களுக்குஇந்த காரசாரமான ஆந்திரா ஸ்டைல்ஃபிஷ் கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும்.அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக பத்து, பதினைந்து நிமிடத்தில் சட்டென்று செய்துபொரித்து சாப்பிட்டு பார்த்தால் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். வீட்டில் இருக்கும்பொருட்களை வைத்தே உடனடியாக செய்து அசத்தக்கூடிய இந்த வித்தியாசமான ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதை தான்இந்த பதிவின் மூலம் நாம் இனி பார்க்க இருக்கிறோம்.
Yield: 4
Calories: 89kcal
Equipment
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- மீன்
- மிளகாய் தூள்
- எலுமிச்சை சாறு
- சோம்பு
- இஞ்சி பூண்டு விழுது
- மிளகு
- உப்பு
- எண்ணெய்
- சோளமாவு
செய்முறை
- மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவிய பின் நறுக்கி வைத்து கொள்ளவும். மிளகு, சீரகம், சோம்பை வறுத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.
- ஒரு கடாயில் நறுக்கிய மீனைப் போட்டு, அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு,சோளமாவு போட்டு நன்றாக பிசையவும். சோளமாவு மீனுடன் ஒட்டி இருக்கும் மசாலாவை உதிராமல் இருக்க உதவும்.
- ஒரு மணி நேரம் மசாலா நன்கு ஊறும் வரை வைக்கவும். பின் தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில்பிசறி வைத்த மீனை ஒவ்வொன்றாய் போடவும். சிறு தீயில் வைக்கவும். மீன் கருகாமல் இருக்க ஒவ்வொன்றாய் நகர்த்தி விடவும்.
- மீனில் ஒட்டியுள்ள மசாலா நன்றாக சிவந்து ஒரு பக்கம் வெந்ததும், மீனை மெதுவாக உடையாமல் புரட்டிப் போடவும்.இரு பக்கமும் வெந்து சிவந்ததும் மீனை எடுத்து விடவும். சுவையானஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல் ரெடி!!!
Nutrition
Serving: 400g | Calories: 89kcal | Carbohydrates: 13g | Protein: 32g | Saturated Fat: 0.7g | Potassium: 372mg
- Advertisement -