இரவு டிபனுக்கு ஆந்திரா ஸ்டைல் உள்ளி கார தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

- Advertisement -

பலவகையான மொழி, கலாச்சாரம் நிறைந்திருக்கும் இந்தியாவில், உணவுமுறைகளும் அதன் சுவைகளும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. தமிழர்களின் உணவுகளில் காரம், உப்பு, புளிப்பு சுவைகள் சரிசமமாக சேர்க்கப்படுகிறது. இதுவே கர்நாடகா பக்கம் சென்றால் எல்லா உணவிலும் லேசான இனிப்புச் சுவை தட்டும். கேரளா என்றால் தேங்காய் எண்ணெயின் மணம். ஆந்திரா என்றால் காரம். ஆந்திரா என்றாலே நமக்கு காரம் தான் முதலில் நினைவிற்கு வருகிறது. காரசாரமான சமையல் முறையில் பெயர் போனது ஆந்திரா. எல்லா வகை உணவுகளிலும் காரத்தை விரும்பும் இவர்களுக்கு மிக ருசியான உணவையும் கொடுக்க தெரியும். அதிலும் குறிப்பாக சட்னி, ஊறுகாய் போன்றவற்றை செய்வதில் இவர்களை அடிச்சிக்க ஆளே கிடையாது.

-விளம்பரம்-

குறிப்பாக ஆந்திரா ஸ்பெஷலான கோங்குரா தோசை, ரெட் சட்னி தோசை போன்றவை உணவுப் பிரியர்கள் மத்தியில் படு ஃபேமஸ். உள்ளி கார தோசை ஆந்திரா மக்களின் இரவு உணவின் மூச்சு காற்று என்றே சொல்லலாம். சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து கொள்வது அவசியமான ஒன்று. பெரும்பாலும் வீடுகளில் சின்ன வெங்காயத்தை சாம்பாரில் சேர்பார்கள், ஆனால் குழந்தைகள் அந்த வெங்காயத்தை எடுத்து விட்டு தான் சாதத்துடன் குழம்பை சாப்பிடுவார்கள்.

- Advertisement -

இதை மொத்தமாக வதக்கி சட்னியாக அரைத்து தோசை போல் ஊற்றி கொடுத்தால், குழந்தைகள் பக்குவமாய் சாப்பிடுவார்கள். நம்மூரில் இருக்கும் ஆந்திரா ஸ்டைல் உணவகங்களிலும் இந்த தோசையை சுவைக்கலாம். எனினும் வீட்டில் செய்தால் கூடுதல் ஸ்பெஷல் தானே! ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த இந்த ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி கார தோசையை நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.

Print
1 from 2 votes

ஆந்திரா உள்ளி காரம் தோசை | Andhra Ulli Kaaram Dosa Recipe In Tamil

ஆந்திரா ஸ்பெஷலான கோங்குரா தோசை, ரெட் சட்னி தோசை போன்றவை உணவுப் பிரியர்கள் மத்தியில் படு ஃபேமஸ். உள்ளி கார தோசை ஆந்திரா மக்களின் இரவு உணவின் மூச்சு காற்று என்றே சொல்லலாம். சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து கொள்வது அவசியமான ஒன்று. பெரும்பாலும் வீடுகளில் சின்ன வெங்காயத்தை சாம்பாரில் சேர்பார்கள், ஆனால் குழந்தைகள் அந்த வெங்காயத்தை எடுத்து விட்டு தான் சாதத்துடன் குழம்பை சாப்பிடுவார்கள். இதை மொத்தமாக வதக்கி சட்னியாக அரைத்து தோசை போல் ஊற்றி கொடுத்தால், குழந்தைகள் பக்குவமாய் சாப்பிடுவார்கள். நம்மூரில் இருக்கும் ஆந்திரா ஸ்டைல் உணவகங்களிலும் இந்த தோசையை சுவைக்கலாம். எனினும் வீட்டில் செய்தால் கூடுதல் ஸ்பெஷல் தானே! ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த இந்த ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி கார தோசையை நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: dinner
Cuisine: andhra, Indian
Keyword: Ulli Kaaram Dosa
Yield: 3 People
Calories: 44kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 2 பெரிய வெங்காயம்
  • 6 பல் பூண்டு
  • 7 வர ‌மிளகாய்
  • 2 கப் தோசை மாவு
  • உப்பு தேவையான அளவு
  • 1/4 கப் கொத்தமல்லி தழை
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • வெண்ணெய் சிறிதளவு

செய்முறை

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு, வரமிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும்.
  • இவை நன்கு ஆறியதும் ஒரு‌ மிக்ஸியில் சேர்த்து இதனை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசைமாவை நைசாக ஊத்தி, நாம் அரைத்து வைத்துள்ள விழுதை தோசை மீது பரவலாக தேய்க்கவும்.
  • பிறகு தோசையை சுற்றி நல்லெண்ணெய் ஊற்றி வெந்ததும் தோசை மேல் கொத்தமல்லி இலை தூவவும்‌.
  • இறுதியாக வெண்ணெய் சேர்த்து தோசை எடுத்து சாம்பாருடன் பரிமாறவும்.
  • அவ்வளவுதான் ஆந்திரா உள்ளி காரம் தோசை தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 44kcal | Carbohydrates: 2g | Protein: 1.5g | Fat: 0.1g | Sodium: 5mg | Fiber: 1.9g | Vitamin C: 15mg | Calcium: 30mg | Iron: 0.5mg

இதனையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ஒரு அருமையான சட்னி ரெசிபி! ஒரு முறை குடைமிளகாய் சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!