இப்போதுள்ள நவீன காலகட்டத்தில் மளிகை கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும் ரெடிமேட் குழம்பு வகைகள், ரெடிமேட் மசாலா பொருட்களை கொண்டு உணவு தயாரித்து உடலுக்கு சத்து சேர்க்காமல் நாவிற்கு மட்டும் ருசி சேர்த்து கொண்டு உள்ளோம். இதை பயன்படுத்துவது தவறல்ல ஒரு அவசர காலங்களில் பயன்படுத்தலாம்.
இதையும் படியுங்கள் : கிராமத்து அரைக்கீரை சாதம் எப்படி செய்வது ?
ஆனால் நாம் என்ன செய்கிறோம் அடிக்கடி ரெடிமேட் குழம்பு வகைகளை பயன்படுத்துகிறோம். சரி அது போகட்டும் இன்று அதிக சத்து நிறைந்த அரைக்கீரையை வைத்து எப்படி குழம்பு செய்து சாப்பிட்டு உடலுக்கு சத்து சேர்க்கலாம் என்று பார்க்கலாம். எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம்.
அரைக்கீரை குழம்பு | Araikeerai Kulambu Recipe in Tamil
Equipment
- 1 குழம்பு பாத்திரம்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 pressure cooker
- 1 பருப்பு மத்து
தேவையான பொருட்கள்
- 1 கட்டு அரைக்கீரை
- ½ tbsp கடுகு
- கருவேப்பிலை தேவையான அளவு
- 1 tbsp உளுத்தம் பருப்பு
- 1 குழி கரண்டி எண்ணெய்
- 150 கிராம் வெங்காயம்
- 150 கிராம் தக்காளி
- உப்பு தேவையான அளவு
- 4 tbsp துவரம்பருப்பு வறுத்து அரைக்க
- ½ கப் துவரம்பருப்பு
- 2 tbsp தனியா
- ½ tbsp வெந்தயம்
- 1 tbsp மிளகு
- 8 piece வத்தல்
செய்முறை
- முதலில் துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்றாக அலசி கொண்டு பின்பு குக்கரில் போட்டு ஒரு விசில் வரும் வரை நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள்.
- ஒரு விசில் வந்தவுடன் குக்கரின் பிரஷரை வெளியேற்றி துவரம் பருப்பை எடுத்து நன்றாக கடைந்து கொள்ளுங்கள். பின்பு அரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்துவிட்டு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் உப்பு போட்டு அதில்கீரையை நன்றாக வதக்கவும்.
- அரைக்கீரை வதங்கிய பின் வேறு பாத்திரத்தில் அரைக்கிறதை எடுத்து நன்றாக கடைந்து கொள்ளுங்கள். பின்பு கடாயை அடுப்பில் வைத்து கடுகு, உளுந்தம் பருப்பு, மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
- பின்பு அதில் வெங்காயம், வற்றல் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள், வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி. வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் தக்காளியும் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- தக்காளியின் பச்சை வாடை போயி மென்மையாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள். இந்த நேரத்தில் வறுப்பதற்காக வைத்துள்ள துவரம் பருப்புடன் தனியா, மிளகு இவற்றையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி ஆக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
- பின்பு அதனுடன் கடந்து வைத்துள்ள கீரையும் துவரம் பருப்பையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள். பின்பு துவரம் பருப்பை வறுத்து அரைத்துள்ள பொடியை அதனுடன் போட்டு கிளறிவிட்டு ஒரு நிமிடம் கொதிக்க வைத்து பின்பு இறக்கி விடுங்கள் இப்பொழுது சுவையான அரைக்கீரை குழம்பு இனிதே தயாராகிவிட்டது.
Nutrition
English Overview: arai keerai kulambu is one of the most important dishes in india. arai keerai kulambu recipe or arai keerai kulambu seivathu eppadi or arai keerai kulambu in Tamil are a few important terms to describe this recipe in the tamil language