அதிசியங்கள் ஆயிரம் உள்ளது அதில் ஒன்று தான் 1000 வருடம் பழமையான தமிழனின் கட்டிக்கலை!

- Advertisement -

உலக அதிசயங்கள் பழையவற்றை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் கல்லூரி என்று ஏதும் இல்லை இன்றோ எத்தனை என்ஜினியரிங் கல்லூரி எத்தனை மருத்துவ கல்லூரி . எல்லாம் இருந்தும் கல்லூரியில் படித்த அறிவை வைத்து கட்டும் கட்டிடங்கள் எல்லாம் விரிசல் விட்டு விழுகின்றன குறைந்த வருடங்களிலேயே. ஆனால் அவன் எந்த கல்லூரிக்கும் செல்லவில்லை எந்த பாடசாலைக்கும் செல்லவில்லை அவன் கட்டிய கட்டிடங்கள் எல்லாம் அதிசயமாகவே இருக்கின்றன. எப்படி அதை எப்படிஸசெய்தான் என்று கூட இன்னும் தெரியாத அளவிற்கு தலையை பிய்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் மக்கள். ஒவ்வொரு கலையிலும் சிலையிலும் எத்தனை சிறிய நுணுக்கங்கள் இருந்தாலும் அத்தனையும் கற்களிலே செதுக்கி கண்களை கவர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழன் கல்விக்கும் , மருத்துவத்திற்கும், கட்டிட கலைக்கும் முதலிடம் கொடுத்தனர்.

-விளம்பரம்-

நம் தமிழர்கள் கட்டிடக்கலைக்கு அவர்கள் தங்களை அர்ப்பணம் செய்திருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். ஒரு கோவிலின் கோபுரத்தின் நிழல் தரையிலே படாதாம். இன்னொரு கோவில் தூணில் கல்லும் சரிகமப பாடல் பாடுகிறதாம். யாழி என்ற ஒரு உயிரினம் இருந்ததையும் சிற்பத்தில் இருந்தே தெரிந்து கொண்டிருக்கிறோம். கல்லில் இருக்கும் சிலைக்கு காலில் கொலுசு, செருப்பு, தோல் பை, இரட்டை ஜடைகள் என்று அத்தனையும் தத்ரூபமாக சிறிய சிறிய வேலைபாடுகளை எல்லாம் செய்தனர் கட்டிடக்கலையில் சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் தமிழர்கள். அப்படி பல அதிசயங்களை உள்ளடக்கிய கட்டிடக்கலைகளைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

- Advertisement -

தஞ்சையின் அதிசயம்

நான் கட்டிடக்கலை என்று சொன்னவுடனே தமிழர்கள் செய்ததில் முதலிடம் கொண்டு ஆராய்ந்து பார்ப்பது தஞ்சை பெரிய கோவில் தான். அந்த தஞ்சை பெரிய கோவில் கருவறை மேலே உள்ள ஒற்றை கோபுர கல்லை எப்படி வைத்தார்கள் என்பதை இன்னும் நாம்மால் கண்டறிய இயலவில்லை. கோபுரத்தின் நிழல் தரையில் விழாமல் அதன் மேலே விழுந்து கொள்ளும் அதிசயம் எப்படி என்று தெரியவில்லை? இத்தனை அதிசயங்களையும் எப்படி அவர்கள் கணித்து கட்டிடத்தை முடித்தார்கள் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. அப்படிப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோவில் நமக்கு லக அதிசயங்களில் ஒன்றானது தானே.

கல் எங்காவது கவி பாடுமா ?நமக்கு தெரிந்து எந்த கல்லையாவது தட்டினால் அதிலிருந்து பாடல் வருமா என்ன? இந்த நெல்லையப்பர் கோவில் இருக்கும் தூணை தட்டினால் சப்த ஸ்வரங்கள் ஒலிவிடுமாம் சரிகமபதநிச என்ற ஒரு இசையில் அவ்விடம் நிறைந்துவிடுமாம் இது அதிசயங்களில் அதிசயம் தானே.

வயிற்றில் ஒரு குழந்தை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள நாம் இப்பொழுது ஸ்கேன் சென்டர்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் திருப்பூரில் இருக்கும் குண்டடம் வடுகநாத பைரவர் கோவிலில் ஒரு குழந்தை தாயின் கருவறையில் எந்த நிலைகளில் இருக்குமோ அதை கல்லில் சிற்பங்களாக செதுக்கி இருப்பது அதிசயத்திலும் அதிசயம் தான்.

-விளம்பரம்-

சில குறிப்பிட்ட கோயில்களில் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் இறைவன் கருவறையில் உள்ள மூலவர் சிலை மீது சூரிய ஒளி கதிர்கள் பூவாய் பொழியுமாம். அவை கருவறையில் உள்ள இறைவன் மீது தன் சூரிய ஒளியை படரும் அதிசயம் நிறைந்த கோயில்களை கட்டி இருக்கிறார்கள் தமிழர்கள். அப்படி வியாசர்பாடியில் உள்ள ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி மாலை போல இறைவன் மீது படருமாம். இந்த கோயில் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இப்படிப்பட்ட கோவிலை கட்டியவர்கள் அதிசயத்தில் அதிசயமானவர்களா இல்லை இந்த கோவில்களின் கட்டிடகலை அதிசயமானதா?

மீனாட்சி அம்மன் கோவில்

இப்பொழுது தான் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டதை கண்டறிந்திருக்கிறார். இதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளே வைத்திருக்கிறார்கள். ஓசோன் படலத்தை எந்த மாதிரியாக பாதுகாப்பு முறைகள் இருக்கிறது என்பது வரை இருக்கிறார்கள். இப்படி அங்குள்ள சிற்பங்களை பற்றி வகையாக எடுத்துக் கூறிக் கொண்டே இருக்கலாம்.

நமக்கு தெரிந்த படைகள் எல்லாம் யானைப் படைகள் குதிரைப்படைகள், காலாட் படைகள் என்று அறிந்திருப்போம். யாளி என்று ஒரு உயிரினம் இருந்தது அது யானையும் சிங்கத்தையும் கலந்தது போல் மிக கம்பீரமாக இருக்கும் போர் புரியும் இப்படி ஒரு படையும். இருந்தது என்பதை எப்படி அறிந்திருப்போம். அவைகள் எல்லாம் கோயிலில் சிற்பங்களாக இருக்கின்றன. இவையெல்லாம் அதிசயத்தில் அதிசயம் தான்.

-விளம்பரம்-

கல்லிலே சங்கிலி இணைப்புகளை செதுக்கி வைத்திதிருக்கிறார்கள். யாளியின் வாயில் உருளும் பந்துகளை கற்களிலேயே செதுக்கியிருக்கிறார்கள். இப்படி கூறிக் கொண்டே போகலாம். அதிலும் கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைத்துள்ள குளத்தில் ஒரு சிங்கம். இருக்குமாம். அந்த சிங்கத்தின் வாயில் ஒரு சிறிய கதவு இருக்குமாம். அந்த கதவை திறந்தால் நாம் குளத்தில் குளிக்கலாமாம். ஆனால் மேலிருந்து பார்ப்பவர்களுக்கு நாம் குளிப்பது தெரியாதாம். அந்த காலத்தில் ராணிகள் குளிப்பதை யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்று இப்படி ஒரு கட்டிடக்கலை கட்டி வைத்திருக்கிறார்கள். இது போன்ற கட்டிடக்கலை உலகிலேயே அதிசயத்திலும் அதிசயமாகவே இருக்கிறது. அதை அவர்கள் எப்படி செய்தார்கள் என்று கண்டறியவே முடியாத அளவிற்கு இத்தனை அதிசயமாக இருக்கிறது. இதில் தமிழன் அதிசயமானவனா? அவற் திறமை அதிசயமானதா? இல்லை அவன் செதுக்கிய சிற்பங்களும் , கட்டிய கட்டிடங்கள் அதிசயமானவைகளா ? எதை உரைப்பதென்றே தெரியவில்லை.