அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதற்கு கிரகங்கள் கூறும் ரகசியம்

- Advertisement -

அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் வெள்ளி நிச்சயமாக கொஞ்சமாவது வாங்க வேண்டும் என்று பலர் கூற கேட்டிருப்போம் அறிவியல் ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் அன்று தங்கம் வாங்குவதற்கு புது சொத்துக்கள் பொருட்கள் வாங்குவதற்கு பல காரணங்கள் உள்ளது. அசிங்க திருத்திகை என்று செய்ய வேண்டிய ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் உள்ளது இவைகளுக்கு பின்னால் இருக்கக்கூடிய கிரக ரகசியங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

-விளம்பரம்-

அட்சய திரிதியை

அட்சய திருதியை என்றால் என்ன நினைவிற்கு வருவது தங்கம் வாங்க வேண்டும் என்பதுதான் அந்த நாளில் குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் அப்படி வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது எல்லோருடைய நம்பிக்கையாகவும் உள்ளது தங்கத்தை தவிர புதிய வீடு புதிய சொத்துக்கள் புதிய வாகனம் போன்றவைகளை வாங்குவதும் புதிய தொழிலில் முதலீடு செய்வதும் இந்த நாளில் செய்தால் மிகவும் சிறப்பானது என்று மக்கள் அனைவரும் நினைக்கிறார்கள் தங்கம் வாங்குவதற்கு இயலவில்லை என்றால் கூட வெள்ளியோ அல்லது அரிசி போன்ற மங்கலமான பொருட்களை யாவது அன்றைய தினம் வாங்க வேண்டும் என்பது மக்களுடைய எண்ணமாக இருக்கும்.

- Advertisement -

மங்களகரமான நாள்

அட்சய திரிதியை மகாலட்சுமிக்கு உரிய நாள் மங்களகரமான நாள் இன்று சொல்லப்பட்டாலும் அனைத்து மாதங்களிலும் திரிதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திதி மட்டும் அட்சய திரிதியாக சிறப்பிக்கப்பட்டு புதிய முதலீடுகள் செய்வதற்கும் புதிய பொருட்கள் வாங்குவதற்கும் உகந்த நாளாக இருக்கிறது ஏன் என்ற கேள்வி பலருக்கும் வந்திருக்கும். அதற்கான ஜோதிட காரணங்களையும் அறிவியல் ரீதியான காரணங்களையும் பார்க்கலாம்.

அட்சய திரிதியையின் சிறப்புகள்

அட்சய என்பதற்கு குறைவில்லாத அழிவில்லாத என்பது பொருள் இந்த நாளன்று திருமால் தன்னுடைய ஆறாவது அவதாரமான பரசுராம அவதாரத்தை எடுத்தார் என்றும் கிருஷ்ணர் குசேலருக்கு செல்வத்தை கொடுத்தார் என்றும் பாண்டவர்களின் பசியை போக்க கிருஷ்ணர் அக்ஷய பாத்திரத்தை கொடுத்தார் என்றும் பல புராணங்கள் சொல்கின்றது. அதனால் தான் அட்சய திருதியை அன்று திருமணம் நடத்துவதும் புது வீடு குடி ஏறுவதும் சொத்துக்கள் வாங்குவதும் புது வீடு வாங்குவதும் தான தர்மங்கள் செய்வதும் புனித நதிகளில் நீராடுவதும் பல பிறவிகளுக்கு பலனை தரும் என்று கூறப்படுகிறது.

அட்சய திரிதியை கொண்டாடப்படுவதற்கான அறிவியல் காரணம்

இந்த நாள் இன்று தான் இந்த உலகமே இயங்குவதற்கு காரணமாக இருக்கக்கூடிய சூரியன் மற்றும் சந்திரன் அவர்களின் முழு கதிர்வீச்சு ஆற்றல்களை வெளிப்படுத்துகின்றது அன்றுதான் சூரியன் அஸ்வினி நட்சத்திரத்திலும் சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்திலும் இருப்பார்கள். பொதுவாக அஸ்வினி நட்சத்திரம் கேதுவின் ஆதிக்கம் நிறைந்தது கேது ஆன்மீக தன்மையும் இருக்கும் தன்மையும் கொண்ட கிரகம் என்றே சொல்லலாம். அதேபோல் அஸ்வினி நட்சத்திரம் வேகம் மற்றும் சுறுசுறுப்பை குறிக்கும் நட்சத்திரம் அதே போல் கிருத்திகை நட்சத்திரம் சூரியனால் ஆளப்படும் நட்சத்திரம் என்று சொல்லலாம் எனவே இது தலைமை பண்பு உயர்பதவி ஆதிக்கம் போன்றவற்றிற்கு காரணமான கிரகம். அட்சய திரிதியை என்பது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்து உழைத்து துணிச்சலாக இருப்பவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும்

-விளம்பரம்-

அட்சய திரிதியை அன்று புனித நீராடுவதற்கான காரணம்

அதேபோல் கடக ராசியில் சந்திரன் ஆதிக்கம் செலுத்தும். இது நீருக்குரிய ராசி சந்திரன் புனித நதிகளுக்கும் புதிய ஆரம்பத்திற்குமான ராசி என்பதால் அந்த நாளில் புனித நீராடுவது மிகவும் சிறப்பானது. ஜோதிடத்தில் நான்காம் இடத்திற்கு உரியவர் சுக்கிரன். பதினொன்றாம் இடத்திற்கு உரியவர் சந்திரன். இந்த இரண்டு இடங்களுமே வளர்ச்சியையும் ஏற்றத்தையும் குறிக்கக்கூடியது எனவேதான் அட்சய திருதியை நாளன்று புதிய பொருட்கள் வாங்கினால் அது பெருகும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.

அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்க காரணம்

அட்சய திருதியை அன்றுதான் லக்னத்தில் குரு செவ்வாய் சனி போன்ற கிரகங்களின் சேர்க்கை நடைபெறும் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் அந்த நாளன்று தொழிலில் முதலீடு செய்வது தொடர்பான முடிவுகளை எடுப்பது மிகவும் சிறந்தது. குரு தெற்கு உரிய உலோகம் தங்கம் தான் குருவின் அருள் இருந்தால் திருவருள் சேரும் என்று கூற கேட்டிருப்போம் எனவே குருவின் அருளை பெறுவதற்கு இந்த நாள் அன்று தங்கம் வாங்குவது மிகவும் சிறந்தது அதை போல் செல்வத்திற்கு காரணமான கிரகம் சுக்கிரன் இவருக்கு உரிய இடம் வெள்ளை எனவே தங்கம் வாங்க முடியாதவர்கள் சுக்கிரனின் அருளை பெறுவதற்கு வெள்ளை நிற புதிய பொருட்களை வாங்கலாம். வீடு சொத்து மனை போன்றவற்றிற்கு அதிபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் எனவே அவருடைய அருளை பெறுவதற்கு அந்த நாளில் புதியதாக சொத்துகள் வீடுகள் மனை போன்றவைகளை வாங்கலாம். சனிபகவான் சாமானிய மனிதனைக் குறிக்கக் கூடியவர் எனவே இந்த கிரகங்களின் சேர்க்கை சாதாரண மனிதனும் முதலீடு செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : தங்கம் இல்லாத வீட்டில் கூட தங்கம் சேர! இந்த ஒரே ஒரு இலை கையில் இருந்தால் போதும்!

-விளம்பரம்-