அடுத்தமுறை தோசை இப்படி செய்யுங்க ருசியான அழகர் கோவில் தோசை! சைடிஸ் கூட தேவையில்லை!

- Advertisement -

அழகர் கோவில் தோசை – பச்சை அரிசி மற்றும் உளுந்து பருப்புடன் தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான சுவையான க்ரீப்/தோசை. இந்த தோசை விஷ்ணு/அழகருக்கு பிரசாதமாக வழங்கப்படுவதால் அழகர் கோவில் தோசை என்று பெயர். அழகர் கோயில். சண்டை போட்டுப் பிரிந்தவர்கள் அழகர்கோவிலுக்கு வந்து, அங்கே மட்டுமே பிரத்யேகமாகக் கிடைக்கும் அழகர் தோசையை வாங்கிச் சாப்பிட்டால், பங்காளிச் சண்டை, மாமன்-மச்சான் சண்டை, கிராமங்களுக்கு இடையிலான சண்டை, நண்பர்களுடனான சண்டை அனைத்தும் தீர்ந்து, அன்பும் உறவும் பலம் பெறுவதாக மதுரை சுற்றுவட்டார கிராம மக்களிடம் ஒரு நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. இந்த அழகர் கோவில் தோசையின் விரிவான செய்முறையை கீழே உள்ள படி வாரியான படங்களுடன் பாருங்கள்.

-விளம்பரம்-

அழகர் கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படக்கூடிய தோசை, பாரம்பரியமாக இது மதுரை அழகர் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதம். இந்த பிரசாதத்தை நம்முடைய வீட்டிலும் செய்து சாப்பிடலாம். இதில் கருப்பு உளுந்து சேர்த்து இருப்பதால் பெண்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கு இந்த தோசை ரொம்ப ரொம்ப நல்லது. அடிக்கடி வீட்டில் இந்த தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். அருமையான அழகர் கோவில் தோசை ரெசிப்பி இதோ உங்களுக்காக.

- Advertisement -
Print
3 from 2 votes

அழகர் கோவில் தோசை | Azhagar Kovil Dosai

அழகர் கோவில் தோசை – பச்சை அரிசி மற்றும் உளுந்து பருப்புடன் தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான சுவையானக்ரீப்/தோசை. இந்த தோசை விஷ்ணு/அழகருக்கு பிரசாதமாக வழங்கப்படுவதால் அழகர் கோவில் தோசைஎன்று பெயர். அழகர் கோயில். சண்டை போட்டுப் பிரிந்தவர்கள் அழகர்கோவிலுக்கு வந்து, அங்கேமட்டுமே பிரத்யேகமாகக் கிடைக்கும் அழகர் தோசையை வாங்கிச் சாப்பிட்டால், பங்காளிச் சண்டை,மாமன்-மச்சான் சண்டை, கிராமங்களுக்கு இடையிலான சண்டை, நண்பர்களுடனான சண்டை அனைத்தும்தீர்ந்து, அன்பும் உறவும் பலம் பெறுவதாக மதுரை சுற்றுவட்டார கிராம மக்களிடம் ஒரு நம்பிக்கைஇன்றும் நிலவுகிறது. இந்த அழகர் கோவில் தோசையின் விரிவான செய்முறையை பார்ப்போம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamilnadu
Keyword: Azhagar Kovil Dosai
Yield: 4
Calories: 132kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 3 கப் கருப்பு உளுந்து சேர்த்து அரைத்த புளிக்காத தோசை மாவு
  • 1/2 கப் தயிர்
  • 1/2 தேக்கரண்டி சுக்கு பொடி
  • உப்பு தேவைக்கு ஏற்ப
  • 2 பச்சைமிளகாய்
  • சிறு துண்டு இஞ்சி
  • 1 தேக்கரண்டி மிளகு பொடிக்கவும்
  • 1 தேக்கரண்டி சீரகம்

தாளிக்க

  • கடலை பருப்பு சிறுது
  • உளுந்து சிறுது
  • பெருங்காயம் சிறுது
  • கறிவேப்பிலை சிறுது
  • எண்ணெய் சிறுது

செய்முறை

  • பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தோசை மாவுடன் தயிர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
  • பேனில் எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கடலைபருப்பு, உளுந்து சேர்த்து தாளிக்கவும்.கடைசியாக பொடித்த மிளகு சேர்க்கவும்
  •  தாளித்தவற்றை மாவில் சேர்த்து கலக்கவும் தோசைக்கல் காய்ந்தததும் மாவை ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
  • சூடாக பரிமாறவும்.சுவையான அழகர் தோசை ரெடி.

செய்முறை குறிப்புகள்

இந்த தோசைக்கு தொட்டுக் கொள்ள மிளகாய் பொடி, பூண்டு பொடி சிறந்தது. வெறுமனே சாப்பிட்டால் கூட நன்றாக இருக்கும். அவசரமாய் செய்ய சிறந்தது

Nutrition

Serving: 800g | Calories: 132kcal | Carbohydrates: 72g | Protein: 12g | Fat: 48g