சுட சுட சாதத்துடன் சாப்பிட சைடிஷாக இப்படி மட்டும் செய்து பாருங்க! சுவை நாக்கிலே நாக்கும்!

- Advertisement -

டேஸ்டியான பால் சோளம் மிளகு வறுவல் ரொம்பவே எளிதான முறையில் வீட்டிலேயே செய்யலாம். எல்லா வகையான சாதத்துக்கும் நல்ல சைடு டிஷ்ஷாக இருக்கக் கூடிய இந்த பால் சோளம் மிளகு வறுவல் இந்த மாதிரி நீங்கள் செய்யும் பொழுது சாம்பார் சாதம், ரசம் சாதம், வெரைட்டி ரைஸ் என்று எது செய்தாலும் போதும் போதும் என்று சாப்பிட தோன்றும். அந்த அளவிற்கு சுவையாக இருக்கக்கூடிய இந்த பால் சோளம் மிளகு வறுவல் எப்படி செய்வது? என்று இனி தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

-விளம்பரம்-
Print
4 from 1 vote

பால் சோளம் மிளகு வறுவல் | Baby Corn Pepper Fry

டேஸ்டியான பால் சோளம் மிளகு வறுவல் ரொம்பவே எளிதான முறையில் வீட்டிலேயே செய்யலாம். எல்லா வகையானசாதத்துக்கும் நல்ல சைடு டிஷ்ஷாக இருக்கக் கூடிய இந்த பால் சோளம் மிளகு வறுவல் இந்தமாதிரி நீங்கள் செய்யும் பொழுது சாம்பார் சாதம், ரசம் சாதம், வெரைட்டி ரைஸ் என்று எதுசெய்தாலும் போதும் போதும் என்று சாப்பிட தோன்றும். அந்த அளவிற்கு சுவையாக இருக்கக்கூடியஇந்த பால் சோளம் மிளகு வறுவல் எப்படி செய்வது? என்று இனி தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Side Dish
Cuisine: tamil nadu
Yield: 4
Calories: 184kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ பேபிகார்ன் மிகச்சிறிய அளவிலான சோளம்
  • 150 கிராம் தக்காளி
  • 250 கிராம் வெங்காயம்
  • 25 கிராம் பச்சைமிளகாய்
  • 100 கிராம் கொத்தமல்லி இலை
  • கறிவேப்பிலை சிறிது
  • 100 கிராம் எண்ணெய்
  • 20 கிராம் சோம்பு
  • 5 கிராம் ஏலக்காய்
  • 15 கிராம் மிளகாய் தூள்
  • 5 கிராம் மஞ்சள்தூள்
  • 75 கிராம் மிளகு
  • 10 கிராம் சீரகம்
  • உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

  • பேபிகார்னை சுத்தம் செய்து, உப்பு சேர்த்து ஸ்பான்ஜ் மாதிரி வேக வைத்து, சின்னதாக நறுக்கி வைக்கவும்.
  • வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். மி 10 கிராம், சோம்பு 5 கிராம், சீரகம் ஏலக்காய் ஆகியவற்றை வெறும் கடாயில் எண்ணெய் விட்டு, மீதமுள்ள சோம்பு, சீரகம் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
  • பிறகு பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். வேகவைத்து நறுக்கிய பேபிகார்ன் சேர்த்து, உப்பு போட்டுக் கிளறவும். எல்லாம் ஒன்றாகக் கல வரும்போது, பொடியைத்தூவிக் கிளறவும்.
  • ஆவி வந்து, வாசனை வரும்போது இறக்கி, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். தோசை, ஆப்ப இடியாப்பம், சப்பாத்தி, தயிர்சாதம் என எதனுடனும் சாப்பிடஉகந்தது இது.

Nutrition

Serving: 100g | Calories: 184kcal | Carbohydrates: 18g | Protein: 2.9g | Fat: 11g | Fiber: 0.5g | Calcium: 32mg | Iron: 0.9mg
- Advertisement -