- Advertisement -
இன்றைய சமூகத்தில் காலை உணவு என்றாலே தவிர்க்க முடியாத ஒன்றாய் மாறிப்போனது தான் இட்லி. பேபி இட்லி பார்ப்பதற்கும் சுவைப்பதற்கு அற்புதமாக இருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதை விரும்பி உண்பார்கள். பேபி இட்லி எந்த கடையில் வாங்கின அப்படின்னு தான் கேட்பாங்க. அந்த அளவுக்கு சுவையான ஒரு பேபி இட்லி ரெசிபி. இது இங்கு மும்பையில் ரொம்பப் பிரசித்தம். குஜராத்தியில் இதை இவ்வாறு செய்து கடைகளில் அழகாக பேக் செய்து விற்கிறார்கள். அனைவரும் விரும்பி சுவைக்கும் இட்லி எப்படி வித்யாசமான வடிவில் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.
-விளம்பரம்-
பேபி இட்லி | Baby Idly Recipe In Tamil
இன்றைய சமூகத்தில் காலை உணவு என்றாலே தவிர்க்க முடியாதஒன்றாய் மாறிப்போனது தான் இட்லி. பேபி இட்லி பார்ப்பதற்கும் சுவைப்பதற்கு அற்புதமாகஇருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதை விரும்பி உண்பார்கள். பேபி இட்லிஎந்த கடையில் வாங்கின அப்படின்னு தான் கேட்பாங்க. அந்த அளவுக்கு சுவையான ஒரு பேபி இட்லி ரெசிபி. அனைவரும் விரும்பி சுவைக்கும் இட்லி எப்படி வித்யாசமான வடிவில் செய்வது என்பது குறித்து இந்தபதிவில் காணலாம் வாருங்கள்.
Yield: 4
Calories: 191kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 50 பேபி இட்லி
- 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள்
- 2 பெரியது பச்சை மிளகாய்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க.
- கறிவேப்பிலை
- மல்லித் தழை
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 2 டீஸ்பூன் எண்ணெய்
செய்முறை
- முதலில் அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் விட்டு, அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பிறகு அதில் மஞ்சள், மிளகாய்த் தூள் சேர்க்கவும். பிறகு மெலிதாகக் கீறிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
- நன்றாகப் பொரிந்த வாசனை வந்தபின் பேபி இட்லிகளை மெல்ல சேர்க்கவும். கேஸ் அடுப்பை "சிம்மில்" வைக்கவும் நன்றாக மிக்ஸ் செய்து இறக்கி கொத்துமல்லி இலை சேர்க்கவும்.
- இதில் கொஞ்சம் எண்ணெய் அதிகம் சேர்த்தால் சுவை கூடும். (அதாவது தாளிப்பதை விட கொஞ்சம் அதிக எண்ணெய்).
Nutrition
Serving: 100G | Calories: 191kcal | Carbohydrates: 41g | Protein: 6g | Sodium: 5mg
- Advertisement -