Home சைவம் அடுத்தமுறை காளான் வாங்கினால் இந்த பாதாம் காளான் கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!!

அடுத்தமுறை காளான் வாங்கினால் இந்த பாதாம் காளான் கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!!

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியெனில் உங்கள் வீட்டில் காளான் மற்றும் பாதாம் இருந்தால், அதைக் கொண்டு சுவையான பாதாம் காளான் கிரேவி செய்யுங்கள். சிக்கனை பிடிக்காத அசைவ விரும்பிகள் இருக்க முடியாது, அதே போல காளான் பிடிக்காத அசைவ விரும்பிகளும் இருக்க முடியாது. ஏனென்றால், அசைவத்திற்கு ஏற்ற புரத சத்துக்களை கொண்டுள்ளது காளான். காளான் ஒரு சத்தான உணவுப் பொருள்.

-விளம்பரம்-

இது டையட் மேற்கோள்வோருக்கு மிகச்சிறந்த உணவு. காளானில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன, அதோடு கூட அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன. இத்தகைய நன்மைகளைப் பெற வேண்டுமானால், இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பாதாம் காளான் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும்.

இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதனை சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம் வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். சுவையாக அதேசமயம் எளிய முறையில் பாதாம் காளான் கிரேவி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

பாதாம் காளான் கிரேவி | Badam Mushroom Gravy Recipe In Tamil

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியெனில் உங்கள் வீட்டில் காளான் மற்றும் பாதாம் இருந்தால், அதைக் கொண்டு சுவையான பாதாம் காளான் கிரேவி செய்யுங்கள். சிக்கனை பிடிக்காத அசைவ விரும்பிகள் இருக்க முடியாது, அதே போல காளான் பிடிக்காத அசைவ விரும்பிகளும் இருக்க முடியாது. ஏனென்றால், அசைவத்திற்கு ஏற்ற புரத சத்துக்களை கொண்டுள்ளது காளான். காளான் ஒரு சத்தான உணவுப் பொருள். இந்த பாதாம் காளான் கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Badam Mushroom Gravy
Yield: 4 People
Calories: 113kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 டீஸ்பூன் மல்லி
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 2 தக்காளி
  • 3 பெரிய வெங்காயம்
  • 3 வர ‌மிளகாய்
  • 6 பல் பூண்டு
  • 4 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 3 பட்டை, ஏலக்காய்
  • 1 பாக்கெட் காளான்
  • 20 பாதாம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி              சிறிதளவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

செய்முறை

  • முதலில் காளானை நன்கு கழுவி விட்டு சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து மல்லி, சீரகம், சோம்பு, மிளகு, வரமிளகாய், பாதாம் முதலியவற்றை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். தக்காளியை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
  • பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். இது நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் காளானை சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து வேக விடவும்.
  • பின் இது நன்கு கொதித்து கிரேவி பதம் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பாதாம் காளான் கிரேவி தயார். இது சப்பாத்தி, பரோட்டா, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 113kcal | Carbohydrates: 4.1g | Protein: 25g | Fat: 4.9g | Sodium: 99mg | Potassium: 120mg | Fiber: 8.2g | Vitamin A: 82IU | Vitamin C: 448mg | Calcium: 18mg | Iron: 24mg

இதனையும் படியுங்கள் : ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!