நம்ம வீட்ல பொதுவா ஏதாவது பிறந்தநாள் கல்யாண நாள் அப்படின்னு வந்தாலே நம்ம செய்ற ஸ்வீட் அப்படின்னா அது கேசரி தான். அதுலயும் கேசரி செஞ்சு அதிகம் கேட்க நெனச்சு வெட்றவங்க எல்லாம் நிறைய பேர் இருக்காங்க. இந்த கேசரி நிறைய பேருக்கு ஃபேவரட் ஆகவும் இருக்கும். கேசரி இல்ல நிறைய வகைகள் இருக்கு பைனாப்பிள் கேசரி ,டூட்டி ஃப்ரூட்டி கேசரி, அப்படின்னு கேசரியில் கூட நிறைய வெரைட்டிஸ் சில பேரு செய்வாங்க.
அந்த வகையில் இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமான வாழைப்பழ கேசரி தான் பாக்க போறோம். எப்பவும் ஒரே மாதிரியா கேசரி செஞ்சு கொடுக்காம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி ஒரு தடவை வாழைப்பழ கேசரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் அந்த டேஸ்டுக்கு நீங்க அடிமையாகிடுவீங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான கேசரி தான் இந்த வாழைப்பழகேசரி.
நிறைய பேருக்கு வாழைப்பழ கேசரியா அது எப்படி இருக்கும் அப்படின்னு டவுட்டா இருக்கும் ஆனா எந்த டவுட்டும் உங்களுக்கு தேவையே கிடையாது சூப்பர் டேஸ்டா இருக்கும் இந்த வாழைப்பழ கேசரி. வாழைப்பழத்தை ஒன்னு ரெண்டா மசிச்சு இதுல சேர்க்கும்போது கேசரி சாப்பிடும்போது அங்கங்க சில வாழைப்பழ துண்டுகள் நமக்கு சாப்பிடும் போது தென்படும் அது சாப்பிடுறதுக்கே ரொம்ப ருசியா இருக்கும்.
முக்கியமா குழந்தைகளுக்கு இந்த வாழைப்பழ கேசரி ரொம்பவே பிடிக்கும் ஸ்கூலுக்கு போயிட்டு வர்ற குழந்தைகளுக்கு ஈவினிங் டைம்ல கூட நீங்க இந்த கேசரிங்க செஞ்சு கொடுக்கலாம் இல்லனா உங்க வீட்ல என்ன விசேஷம் வந்தாலும் எப்பவும் போல கேசரி செய்யாம ஒரு தடவை இந்த வாழைப்பழ கேசரி செஞ்சு பார்க்கலாம் இப்ப வாங்க இந்த சூப்பரான வாழைப்பழ கேசரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வாழைப்பழ கேசரி | Banana Kesari Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் ரவை
- 3 வாழைப்பழம்
- 3 1/2 கப் தண்ணீர்
- 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 10 முந்திரி
- 10 திராட்சை
- 3 டேபிள் ஸ்பூன் நெய்
- 1 கப் சர்க்கரை
- 1 சிட்டிகை குங்குமப்பூ
- 1 டேபிள் ஸ்பூன் பால்
செய்முறை
- ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- பிறகு அந்த நெயில் ரவையை சேர்த்து பொறுமையாக பொன் நிறமாகும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு கடாயில் நெய் ஊற்றி அதில் வாழைப்பழத்தை நன்றாக மசித்து சேர்த்து நன்றாக வதக்கவும்
- வாழைப்பழம் நன்றாக வதங்கிய பிறகு அதில் மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ரவையை சேர்த்து கிளறவும்
- குங்குமப்பூவை சூடான பாலில் ஊறவைத்து அதனை சேர்த்துக் கொள்ளவும்
- பிறகு ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்றாக அனைத்தும் சேர்ந்து வந்தவுடன் முந்திரி திராட்சை இடையிடையே நெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும் இப்பொழுது சுவையான வாழைப்பழ கேசரி தயார்.