காலையிலும், மாலையிலும் நாம் செய்யக்கூடிய டிபன் வகைகளுக்கு ஏதாவது ஒரு சட்னியை தயார் செய்து கொடுப்போம். அவ்வாறு நாம் செய்யும் சட்னி நம் உடல் நலனை பேணி காக்கும் என்றால் அந்த சட்னி செய்து தருவது நமக்கு கூடுதல் பலனை தரும் அல்லவா? அந்த வகையில் இன்று நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய அற்புதமான கீரையை வைத்து செய்யக்கூடிய வாழைத்தண்டை தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம் வாழைத்தண்டை செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறிவிடும். சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்த வாழைத்தண்டு உதவியாக இருக்கும்.
குடல் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளையும் தீர்க்க உதவுவதாக கருதப்படுவது தான் வாழை தண்டு . அனைத்து இடங்களிலும் பரவலாக கிடைக்கக்கூடிய இந்த வாழைத்தண்டு பயனை அறியாமல் பலரும் அதை சமைக்காமல் இருக்கிறார்கள். வாழை தண்டு பல நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது. அப்படிப்பட்ட இந்த வாழைத்தண்டை வைத்து எவ்வாறு சட்னி செய்வது என்று பார்ப்போம்.
வாழைத்தண்டு சட்னி | Banana Stem Chutney Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் வாழைத்தண்டு பொடியாகநறுக்கியது
- 1/4 கப் பொட்டுக்கடலை
- 3 நறுக்கிய பச்சை மிளகாய்
- 1/2 கப் தேங்காய் துருவல்
- பெருங்காயம் சிறிதளவு
- கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை
- பொட்டுக் கடலை, நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை தனியே கலக்கி வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வாழைத்தண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பிறகு, பொட்டுக்கடலை மாவு கலவையை சேர்த்து, மேலும் சிறிதளவு நேரம் வதக்கி இறக்கவும்.
- ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைது, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பரிமாறவும்