சூப் அப்படி என்றாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அப்படி சூப் பல வெரைட்டிகள் இருக்கு அசைவ சைவ சூப் இப்படி நிறைய இருந்தாலும் உடலுக்கு ரொம்ப ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியவை சூப் தான். அப்படி அந்த சூப்பகளில நம்ம உடலுக்கு தேவையான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு சூப் அப்படின்னா அதை வாழைதண்டு சூப் அப்படின்னு சொல்லலாம்.
இந்த வாழைத்தண்டு சூப்பர் சாப்பிடும்போது அது உடல் எடையை குறைப்பதற்கு உதவுது. ஏனெனில் வாழைதண்டுல அதிக அளவு நார்ச்சத்து இருக்கறதுனால இது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதற்கு உதவுது. அது மட்டும் இல்லாம இந்த வாழைத்தண்டு அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது சிறுநீரகத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாமே சரியாகிறது. சிறுநீரகக் கல் பிரச்சனை இருக்கிறவங்க எல்லாருக்குமே வாழைத்தண்டும் வாழைக்கிழங்குல இருக்குற தண்ணீரும் ரொம்பவே நல்ல மருந்தா பயன்படுது.
அப்படி இந்த வாழைத்தண்டுல நம்ம ருசியான ஒரு சூப்பர் வெச்சி குடிக்க போறோம். இந்த மழை காலத்துக்கு ஏத்த மாதிரி ஈவினிங் டைம்ல இப்படி வாழ தண்டு வீட்ல இருக்குறப்போ சூப்பர் சூப் கொடுத்தீங்கன்னா ரொம்பவே ருசியாவும் சுவையாகவும் இருக்கும். இந்த வாழைத்தண்டு உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறதுனால உணவுல வாரத்துக்கு ஒரு தடவையாவது வாழைத்தண்டை சேர்த்துகிறது ரொம்பவே நல்லது. இப்படி ருசியான இந்த வாழைத்தண்டுல ரொம்ப ரொம்ப ஈஸியா எப்படி சூப் செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
வாழைதண்டு சூப் | Banana Stem Soup Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கைப்பிடி வாழைத்தண்டு நறுக்கியது
- 1 வெங்காயம்
- 2 பச்சைமிளகாய்
- 4 பல் பூண்டு
- 1/4 ஸ்பூன் சீரகதூள்
- 1/4 ஸ்பூன் சோம்புதூள்
- 1/4 ஸ்பூன் கரமசாலா
- 1 ஸ்பூன் மிளகுத்தூள்
- கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தது மிகவும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில்இடித்து வைத்துள்ள பச்சை மிளகாய், பூண்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- பிறகு ஒரு கைப்பிடி அளவிற்கு சற்று கூடுதலாகபொடியாக நறுக்கி வைத்துள்ள வாழைத்தண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கி நீர் சேர்த்து வேகவைக்கவும். வாழைத்தண்டு நன்றாக கையால் நசுக்கினால் மசியும் அளவிற்கு வெந்த பிறகு அதில்இருந்து வாழைத்தண்டை மட்டும் தனியாக எடுத்து ஆற வைக்கவும்.
- சிறிது வாழைத்தண்டு அந்த நீரிலேயே இருக்கும்படி விட்டு முக்கால் அளவிற்கான வாழை தண்டுகளை எடுத்து ஆறவைத்து விட வேண்டும். வாழைத்தண்டு ஆறிய பிறகு அவைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது அடுப்பில் வைத்துள்ள வாழைத்தண்டு வேக வைத்த நீரில் அரைத்து வைத்துள்ள வாழைத்தண்டை ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டி விட்டு நார் எல்லாம் வடிகட்டியில் தங்குமாறு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வாழைத்தண்டு வேக வைத்த தண்ணீரோடு நன்றாக கலந்து கொதிக்க விடவும்.
- வாழைத்தண்டு சூப் கொதித்து வரும் பொழுது அதில் தேவையான அளவு உப்பு , மிளகு தூள் , கொத்தமல்லி தழைகள் தூவி சூடாக பரிமாறினால் சுவையானஆரோக்கியமிக்க வாழைத்தண்டு சூப் தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு இட்லி, தோசையுடன் தொட்டுக்க வாழைத்தண்டு சட்னி இப்படி செஞ்சி பாருங்க!