ஆரோக்கியமான காலை டிபனுக்கு, குதிரைவாலி தோசை இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

குதிரைவாலி அரிசியில் தோசையை என்று சில பேர் யோசிக்கலாம். ஆனால், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, எல்லாம் இப்படி சிறுதானிய தோசை செய்து கொடுப்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதேபோல குழந்தைகள் சிறுதானியத்தில் அடை செய்து கொடுத்தாலோ, கஞ்சி வைத்து கொடுத்தாலோ, குடிக்க மாட்டாங்க. இப்படி குதிரைவாலி தோசை சுட்டு கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

நாம் வீட்டில் அனைவரும் தோசை அடிக்கடி சாப்பிடுகிறோம். ஆனால் குதிரைவாலி வைத்து செய்யப்படும் தோசை சாப்பிட்டிருக்கிறீர்களா? சாதாரண தோசையை  விட இதன் சுவை நன்றாகவும் இருக்கும். இது தயாரிக்க சிறுது நேரம் தான் எடுக்கும். ஆனால், சுவையுடன் சேர்ந்து ஆரோக்கியமும் கிடைக்கும். குதிரைவாலி தோசையை உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு காலை உணவாக பரிமாறலாம் அல்லது இரவு உணவிற்கும் செய்யலாம்.வாங்க இதை எப்படி சுவையாக செய்வது என்ற செய்முறையை பார்க்கலாம்.

- Advertisement -
Print
5 from 2 votes

குதிரைவாலி தோசை | Barnyard Millet Dosa Recipe In Tamil

அனைவரும் தோசை அடிக்கடி சாப்பிட்டிருகிறோம். ஆனால் குதிரைவாலி வைத்து செய்யப்படும் தோசை சாப்பிட்டிருக்கிறீர்களா? சாதாரண தோசையை  விடஇதன் சுவை நன்றாகவும் இருக்கும். இது தயாரிக்க சிறுது நேரம் தான் எடுக்கும். ஆனால்,  குதிரைவாலி தோசையை உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு காலை உணவாக பரிமாறலாம் அல்லது இரவு உணவிற்கும் செய்யலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Barnyard Millet Dosa
Calories: 212kcal

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 4 கப் குதிரைவாலி அரிசி
  • டீஸ்பூன் சீரகம்
  • எண்ணெய் தேவைக்கு ஏற்ப
  • உப்பு தேவைக்கு ஏற்ப
  • 1 கப் உளுந்து
  • சிறிய இஞ்சி துண்டு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்

செய்முறை

  • முதலில் குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை மூன்று மணி நேரம் ஊறவிட்டு அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து, நான்கு மணி நேரம் புளிக்கவிடவும்.
  • மிக்சியில் சீரகம், இஞ்சி சேர்த்து, விழுதாக அரைத்து, மாவுடன் கலக்கவும். அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கலக்கவும்.
  • சூடானதோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.சத்து நிறைந்த குதிரைவாலி தோசை ரெடி.

Nutrition

Serving: 100g | Calories: 212kcal | Carbohydrates: 65g | Protein: 7g | Fiber: 9g | Calcium: 20mg | Iron: 5mg