பீன்ஸ் வைத்து பொரியல், குழம்பு இவற்றை தான் அதிகமாக செய்திருக்கிறோம். ஒருமுறை இப்படி கூட்டு செய்து பாருங்க!

- Advertisement -

பீன்ஸ் மிளகு கூட்டு ரொம்பவும் சுவையானது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த முறையில் நீங்கள் ஒரு முறை பீன்ஸ் மிளகு கூட்டு செய்து பாருங்கள், இனி அடிக்கடி பீன்ஸ் வாங்க ஆரம்பிச்சிடுவீங்க! அந்த அளவிற்கு டேஸ்டாக இருக்கக்கூடிய இந்த பீன்ஸ் கூட்டு இதே அளவுகளில் இதே பொருட்களை வைத்து செய்து பார்க்க வேண்டும். பீன்ஸ் மிளகு கூட்டு எளிதாக எப்படி சுவையாக செய்யலாம்? என்பதை இனி பார்ப்போம்.

-விளம்பரம்-

பீன்ஸ் சாப்பிடுவதால் புற்றுநோய் செல்களை அழிக்கும், ரத்தம் உறையாமல் பாதுகாக்கும். அனைவரது வீட்டிலும் அதிகமாக வாங்கக்கூடிய காய்கறிகளில் இந்த பீன்ஸ்ம் ஒன்று தான். ஏனென்றால் பீன்ஸ் சாம்பார், குருமா, காரக்குழம்பு போன்ற அனைத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு பீன்ஸ் பொரியல், பீன்ஸ் கேரட் பொரியல் என பல காய்கறிகளுடன் இதனை சேர்த்து சமைக்க முடியும். அவ்வாறு பீன்ஸ் சேர்த்து செய்யும் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும்.

- Advertisement -

பீன்ஸ் சேர்த்து பல உணவுகள் செய்தாலும் ஒரு முறை இப்படி கூட்டு செய்து பாருங்கள். இதன் தனிப்பட்ட சுவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதனை சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான பீன்ஸ் மிளகு கூட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
5 from 1 vote

பீன்ஸ் மிளகு கூட்டு | Beans Pepper Kootu Recipe In Tamil

பீன்ஸ்  கூட்டு ரொம்பவும் சுவையானது என்று எல்லோருக்கும்தெரியும். ஆனால் இந்த முறையில் நீங்கள் ஒரு முறை பீன்ஸ் மிளகு கூட்டு செய்து பாருங்கள்,இனி அடிக்கடி பீன்ஸ் வாங்க ஆரம்பிச்சிடுவீங்க! அந்த அளவிற்கு டேஸ்டாக இருக்கக்கூடியஇந்த பீன்ஸ் கூட்டு இதே அளவுகளில் இதே பொருட்களை வைத்து செய்து பார்க்க வேண்டும். பீன்ஸ்மிளகு கூட்டு எளிதாக எப்படி சுவையாக செய்யலாம்? என்பதை இனி பார்ப்போம். பீன்ஸ் சேர்த்து பல உணவுகள் செய்தாலும் ஒரு முறை இப்படி கூட்டு செய்து பாருங்கள். இதன் தனிப்பட்ட சுவைஅனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதனை சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட அவ்வளவுஅருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான பீன்ஸ் மிளகு கூட்டை எவ்வாறு செய்ய வேண்டும்என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Side Dish
Cuisine: tamil nadu
Keyword: beans pepper Kootu
Yield: 4
Calories: 131kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பீன்ஸ்
  • 1/4 பாசிப் பருப்பு
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 ஸ்பூன் பெருங்காயம்
  • உப்பு தேவையான அளவு
  • 1 ஸ்பூன் துவரம் பருப்பு
  • 2 ஸ்பூன் தனியா தூள்
  • 1/2 ஸ்பூன்  சீரகப் பொடி
  • 10 மிளகு
  • 2  காய்ந்த மிளகாய்
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 ஸ்பூன் கடுகு
  • 1/4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை சிறிது

செய்முறை

  • முதலில் பாசிப்பருப்பை வேகவைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் அத்துடன் பீன்ஸையும் சேர்த்து வேகவிடவும்.
  • துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து, தண்ணீர் விடாமல் உலர்பொ டியாகப் பொடிசெய்துகொள்ளவும்.
  • வெந்து கொண்டிருக்கும் காயில் இந்தப் பொடியைப் போட்டு, கொதித்துக் கெட்டியானதும் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கூட்டில் கொட்டி இறக்கவும்.
  • சுவையான பீன்ஸ் மிளகு கூட்டு தயார்

Nutrition

Serving: 600g | Calories: 131kcal | Carbohydrates: 7g | Protein: 1.8g | Fat: 0.5g | Potassium: 405mg | Fiber: 2.7g | Vitamin C: 1.2mg | Calcium: 35mg | Iron: 2.2mg