வீட்டில் கோதுமை மாவு இருந்தா போதும் காரசாரமான பீன்ஸ் கோதுமை அடை இப்படி சுலபமாக செய்து விடலாம்!

- Advertisement -

பீன்ஸ் கோதுமை அடை, நம் வீட்டில் எல்லோருமே செய்வோம். அந்த கோதுமை மாவை வைத்து, புதுவிதமாக, ருசியாக பீன்ஸ் கோதுமை அடை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிகவும் சுலபமான முறையில், சுவையாக, அதுவும் சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு டிபன் தான் இது! நீங்க எங்கேயாவது வெளியே போயிட்டு வந்தீங்கன்னா கூட, சட்டுனு 10 நிமிடத்துல் பீன்ஸ் கோதுமை அடை சுட்டு, வீட்ல இருக்கிறவங்க எல்லோருக்கும் கொடுத்து விடலாம்.

-விளம்பரம்-

கோதுமை மாவு இருந்தா போதும் சுவையான காரசாரமான பீன்ஸ் கோதுமை அடையை வீட்டிலேயே செய்து அசத்தலாம். சாதாரண தோசையை விட அடை போல சுட்டு எடுக்கும் இந்த பீன்ஸ் கோதுமை அடை ரொம்பவே வித்தியாசமான சுவையை உங்களுக்கு கொடுக்கும்.

- Advertisement -

கோதுமை மாவு ஆரோக்கியம் நிறைந்ததாக இருப்பதால் இந்த தோசையை அடிக்கடி செய்து சாப்பிடலாம். காலை நேர உணவை அற்புதம் ஆக்கிக் கொடுக்கக்கூடிய இந்த பீன்ஸ் கோதுமை அடை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள்.

Print
5 from 1 vote

பீன்ஸ் கோதுமை அடை | Beans Wheat Adai Dosa In Tamil

கோதுமை மாவு இருந்தா போதும் சுவையான காரசாரமான பீன்ஸ் கோதுமை அடையை வீட்டிலேயே செய்து அசத்தலாம். சாதாரண தோசையை விட அடை போல சுட்டு எடுக்கும் இந்த பீன்ஸ் கோதுமை அடை ரொம்பவே வித்தியாசமான சுவையை உங்களுக்கு கொடுக்கும். கோதுமை மாவு ஆரோக்கியம் நிறைந்ததாக இருப்பதால் இந்த தோசையை அடிக்கடி செய்து சாப்பிடலாம். காலை நேர உணவை அற்புதம் ஆக்கிக் கொடுக்கக்கூடிய இந்த பீன்ஸ் கோதுமை அடை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Beans Wheat Adai Dosa
Yield: 4
Calories: 49kcal

Equipment

  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் பீன்ஸ்
  • 1 வெங்காயம்
  • 1 வெங்காயத்தாள்
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  • உப்பு தேவைக்கு ஏற்ப
  • 1 தேக்கரண்டி உளுந்து
  • 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு
  • எண்ணெய் தேவைக்கு ஏற்ப
  • 1 கரண்டி தோசை அல்லது இட்லி மாவு

செய்முறை

  • முதலில் பீன்ஸை பொடியாக நறுக்கி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். வெங்காயம், வெங்காயத்தாள் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • தோசை கல்லில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுந்து, சேர்த்து வதக்கவும்.பருப்புகள் பொன்நிறமானதும் அதனுடன் வெங்காயம், வெங்காயத்தாள் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு வதக்கிய பொருள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, தோசைமாவு ஆகியவற்றை கோதுமை மாவுடன் சேர்த்து கலக்கவும்.
  • அவற்றில் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.
  • அடுப்பில்தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும் தீயை சிம்மில் வைத்து அடை போல் ஊற்றி நன்கு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். தேவையெனில் அடையில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி எடுக்கவும்
  • சுவையான,ஆரோக்கியமான பீன்ஸ் கோதுமை அடை தயார்.

Nutrition

Serving: 2nos | Calories: 49kcal | Carbohydrates: 6g | Protein: 4.4g | Fat: 0.9g | Calcium: 395mg | Iron: 1.93mg