ஆரோக்கியமாக சாப்பிட விரும்புவரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே சுவையான சத்தான பீட்ரூட் பிரியாணி ரெசிபி. இதன் சுவை பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் இவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான காய்கறிகளாகும். இவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அதிலும் சிறுபிள்ளைகள் இந்த காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். ஆனால் இவர்களை கட்டாயப்படுத்தி இந்த காய்கறி உணவுகளை சாப்பிட வைக்க முடியாது.
எனவே அவர்களுக்கு பிடித்த வகையில் இவற்றை சுவையான உணவுகளாக சமைத்து கொடுத்தால் தானாகவே உங்களிடம் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். பீட்ரூட்டில் இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளதால் உங்கள் உடலை வலுவாக்கி, சருமத்தை பொலிவாக்கும். பீட்ரூட்டில் அல்வா, பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. குழந்தைகளை பொருத்தவரை உணவு என்பது சுவையாய் இருப்பது இரண்டாம் பட்சம் தான்.
முதலில் உணவை பார்த்தவுடன் அந்த உணவானது அவர்கள் கண்களை கவரும் விதமாக நல்ல வண்ணமயமாக இருந்தால் அவர்களுக்கு அந்த உணவை சாப்பிடும் ஆர்வமும் அதிகரிக்கும். பீட்ரூட் என்பது உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு காய்கறி ஆனால் இதை பொரியலாக செய்து கொடுக்கும் பொழுது அதை குழந்தைகளுக்கு ஏனோ பிடிப்பது இல்லை எனவே அந்த பீட்ரூட்டை சாதத்துடன் சேர்த்து பிரியாணி போல் செய்து கொடுத்தால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று பீட்ரூட் வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பீட்ரூட் பிரியாணி | Beetroot biryani recipe in tamil
Equipment
- 1 குக்கர்
- 1 பவுள்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 2 பீட்ரூட்
- 1 டம்ளர் பாசுமதி அரிசி
- 1 பெரிய வெங்காயம்
- 1 பச்சை மிளகாய்
- 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1 பிரியாணி இலை
- 2 டீஸ்பூன் நெய்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1/2 கப் புதினா, கொத்தமல்லி
- 1/2 எலுமிச்சை பழம்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு பவுளில் பாஸ்மதி அரிசியை கழுவி தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும். பிறகு பீட்ரூடை தோல் நீக்கி துருவி எடுத்து கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
- பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- பின் பீட்ரூட் துருவல் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- பீட்ரூட் வதங்கியதும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி சேர்த்து கலந்து கொள்ளவும்.
- அதன்பிறகு எலுமிச்சை பழச்சாறு பிழிந்து, கடைசியாக கொத்தமல்லி, புதினா தூவி கலந்து மூடி விடவும்.
- அதன்பிறகு குக்கரில் 2 விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சூப்பரான பீட்ரூட் பிரியாணி தயார்.