எவ்வளவு நாள் பீீட்ரூட்டை வைத்து ஒரே பொரியல் செய்வீர்கள்! பீட்ரூட் கறி அடுத்தமுறை இப்படி ஒரு தடவை செய்து பாருங்க!

- Advertisement -

பீட்ரூட்  என்று சொன்னாலே நிறைய பேருக்கு சுத்தமாக பிடிக்காது. இன்று மதியம் சாப்பாட்டுக்கு பீட்ரூட் என்றால் எனக்கு சாப்பாடு வேண்டாம், என்று தான் சொல்வார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கூட்டு, பொரியல் என்று காய்கறிகளை வைத்து சமைக்கும் அனைத்து உணவுகளையும் தவிர்ப்பது என்பதை பலரும் வழக்கமாக வைத்திருப்பார்கள். அதிலும் பீட்ரூட் வைத்து செய்யக்கூடிய எந்த உணவாக இருந்தாலும் அதனை விரும்பி சாப்பிடுபவர்கள் மிகவும் குறைவானவர்களே. ஆனால் பீட்ரூட்டில் உடம்பிற்க்கு தேவையான சத்துகள் அதிகமாக இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் இரத்தத்தை சுத்தம் செய்கிறது. உடம்பில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள்

-விளம்பரம்-

ஆனால் உடலுக்கு தேவையான ரத்தத்தின் அளவை அதிகப்படுத்த இந்த பீட்ரூட்டுக்கு முதலிடம் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. ஆரோக்கியம் தரக்கூடிய இந்த பீட்ரூட் கறி மிக மிக சுவையாக செய்யலாம். பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களுக்கு உண்டாகும் உடல்நல குறைபாடு பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். 5 நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த ஆரோக்கிய ரெசிபியை மிஸ் பண்ணாதீங்க. வாருங்கள் இந்த பீட்ரூட்டை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு மசாலா சேர்த்து எப்படி சுவையாக செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -
Print
No ratings yet

பீட்ரூட் கறி | Beetroot Curry Recipe In Tamil

உடலுக்கு தேவையான ரத்தத்தின் அளவை அதிகப்படுத்த இந்த பீட்ரூட்டுக்கு முதலிடம் உண்டு என்று சொன்னால்அது மிகையாகாது. ஆரோக்கியம் தரக்கூடிய இந்த பீட்ரூட் கறி மிக மிக சுவையாக செய்யலாம்.பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களுக்கு உண்டாகும் உடல்நல குறைபாடுபிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். 5 நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த ஆரோக்கியரெசிபியை மிஸ் பண்ணாதீங்க. வாருங்கள் இந்த பீட்ரூட்டை அனைவரும் விரும்பி சாப்பிடும்வகையில் ஒரு மசாலா சேர்த்து எப்படி சுவையாக செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின்மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Side Dish
Cuisine: tamilnadu
Keyword: Beetroot Curry
Yield: 4
Calories: 88kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 400 கிராம் சுத்தம் செய்த பீட்ரூட்
  • 20 கிராம் வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 3 பற்கள் பூண்டு
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1/2 தேக்கரண்டி உப்பு
  • 3 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 1 தேக்கரண்டி எலுமிச்சம் சாறு

செய்முறை

  • தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பீட்ரூட், வெங்காயம் இரண்டையும் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். பூண்டை தட்டி நறுக்கி வைக்கவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், அதில் நறுக்கி வைத்திருக்கும் பீட்ரூட்டை சேர்த்து பிரட்டி விடவும்.
  • பீட்ரூட்டிற்கு மேலே நிற்கக்கூடிய அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு மிதமான தீயில் வைத்து நீண்ட நேரம் வேக விடவும்.
  • பாதியளவு நீர் வற்றி அவிந்து வந்ததும், கறித்தூளை சேர்த்து, மீண்டும் மூடி வைத்து வேக விடவும். பீட்ரூட் ஓரளவிற்கு வெந்து பிரட்டலானதும் கறிவேப்பிலை, கரம்மசாலா தூள் சேர்த்து பிரட்டி விடவும்.
  • நன்கு வெந்ததும் இறக்கி வைத்து மேலே எலுமிச்சம் சாறு சேர்த்து பிரட்டவும்.
  • சுவையானஸ்பைஸி பீட்ரூட் கறி தயார்

Nutrition

Serving: 400g | Calories: 88kcal | Carbohydrates: 21g | Protein: 13g | Sodium: 2.1mg | Potassium: 8mg | Iron: 0.4mg