நீங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக எப்பொழுதும் ஒரே மாதிரியான உணவு வகைகளை தான் பெரும்பாலும் கொடுத்து விடுவீர்கள். ஏதாவது ஒரு குழம்பு மற்றும் சாதம், ஒரு ஒரு இது போன்ற முறையில்தான் உணவை கொடுத்து அனுப்பி விடுவீர்கள். இப்படி ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிட்டு உங்களுக்கும் சலித்து போய் இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு சலித்து போய் இருக்கும். ஒரு மாறுதலாக சில சாதங்களை தயார் செய்து அனுப்பலாம். ஆம் உதாரணமாக நீங்கள் சாம்பார் சாதம் அடிக்கடி செய்திருப்பீர்கள் அதை தவிர இன்னும் சில சாதங்கள் செய்து கொடுத்து அனுப்பலாம்.
இன்று பீட்ரூட் சாதம் செய்வது பற்றி பார்க்கலாம். பீட்ரூட் சாப்பிட்டால் இரத்ததில் உள்ள சிவப்பு அனுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த ஒட்டதையும் அதிகரிக்கிறது இதனால் உங்கள் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியமும் மேம்படும். மேலும் நீங்கள் மாதத்திற்கு மூன்று முறையாவது பீட்ரூட்டை உணவாக எடுப்பதன் மூலம் ரத்தில் உள்ள கழிவு பொருட்களையும் மற்றும் உடம்பில் உள்ள நச்சு பொருட்களையும் வெளியேற்றுகிறது. இன்று இந்த பீட்ரூட் சாதத்தை எப்படி சமைப்பது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பீட்ரூட் சாதம் | Beetroot Satham Recipe in Tamil
Equipment
- 1 குக்கர்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
அரைக்க
- 5 சின்ன வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- தண்ணீர் சிறிது
பீட்ரூட் சாதத்திற்கு
- 2 tbsp எண்ணெய்
- 1 tbsp நெய்
- 1 துண்டு பட்டை
- 2 கிராம்பு
- 1 ஏலக்காய்
- 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
- 1 tbsp கரம் மசாலா
- ¼ tbsp மஞ்சள் தூள்
- ¾ கப் பீட்ரூட் நறுக்கியது
- ¼ கப் பட்டாணி
- 1 கப் அரிசி
- 1 ½ கப் தண்ணீர்
- உப்பு தேவையான அளவு
- கொத்த மல்லி சிறிது
செய்முறை
- முதலில் நாம் எடுத்துக் கொண்ட அரிசியை இரண்டு முறை தண்ணீரில் அலசி கொண்டு பின்பு சிறிது தண்ணீரை ஊற்றி கொஞ்ச நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள். அதன் பின்பு மிக்ஸி ஜாரில் நாம் அரைப்பதற்காக கொடுத்துள்ள பொருட்கள் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து தண்ணீர் ஊற்றி மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- பின்னர் குக்கரை அடுப்பை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதனுடன் நெய்யும் சேர்த்துக் கொள்ளவும், எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் அதில் பட்டை கிராம்பு மற்றும் ஏலக்காய் போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளுங்கள்.
- பின்பு இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளறி விட்டு நாம் அரைத்து வைத்திருக்கும் வெங்காயத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
- அதன் பின்பு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் போட்டு வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள், வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் மஞ்சள் தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வதக்கவும்.
- பின் நான் சேர்த்து அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பீட்ரூட் மற்றும் பட்டாணியை சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின் நாம் வைத்திருக்கும் அரிசியை சேர்த்து கொளாளவும்
- பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி விடுங்கள் பின் 4 விசில் வரும் வரை குக்கரை அடைப்பில் வைத்து விசில் வந்ததும் குக்கரை இறக்கி சிறிது கொத்தமல்லி தூவி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் சாதம் தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : வீடே மணக்கும் பாசிபயறு சாதம் செய்வது எப்படி ?