சூப்பரான பீட்ரூட் இனிப்பு அடை இப்படி செஞ்சி கொடுத்து பாருங்க நிறையவே பீட்ரூட் சாப்பிடுவாங்க!

- Advertisement -

காய்கறிகள் சாப்பிட்டாலே நம்ம உடம்புல நிறைய சக்தி கிடைக்கும் அப்படின்னு சொல்லுவாங்க ஆனா குழந்தைகளுக்கு எதிரியே இந்த காய்கறிகள் அப்படின்னு சொல்லலாம். காய்கறிகள் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடவே மாட்டாங்க விரும்பி சாப்பிடுவது என்ன சும்மாவே சாப்பிட மாட்டாங்க. அப்போ நம்ம அவங்களுக்கு புடிச்ச மாதிரி இந்த காய்கறிகளை வைத்து வேறு ஏதாவது செஞ்சு இன் டேரக்ட்டா காய்கறிகளை அவர்களுக்கு கொடுத்து பார்க்கணும்.

-விளம்பரம்-

பொதுவா கேரட் பீட்ரூட் பீன்ஸ் இந்த மாதிரி காய்கறிகள் எல்லாம் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்பவே நல்லது அப்படின்னு சொல்லுவாங்க. அந்த வகையில பீட்ரூட் சாப்பிட்டோம் அப்படின்னா நம்ம உடம்புல ரத்த சிவப்பணுக்களோட எண்ணிக்கை ரொம்பவே அதிகமாகும். குறிப்பா ரொம்பவே அனிமிகா இருக்கவங்களுக்கு இந்த பீட்ரூட் கொடுத்தோம் அப்படின்னா நிறைய காசு மருத்துவமனையில் செலவு பண்ணாம வீட்டிலேயே அவங்கள நம்ம தேத்தி கொண்டு வர முடியும். கர்ப்பிணி பெண்களுக்கு கூட பீட்ரூட் நிறைய சாப்பிடுவது மூலமா அவர்களுக்கும் அவங்க குழந்தைகளுக்கும் நிறைய ஆரோக்கியத்தை கொடுக்க முடியும்.

- Advertisement -

இப்ப நான் கர்ப்பிணி பெண்கள் உடம்புல ரத்தம் கம்மியா இருக்கு அப்படின்னு சொல்லி ரத்தம் ஏத்திட்டு இருக்காங்க. ஆனா அவங்க எல்லாரும் இந்த பீட்ரூட் சாப்டாங்கனா மருத்துவமனைக்கு போகாமலேயே அவங்க உடம்புல நிறைய ரத்தம் அதிகரிக்கும். ஆரோக்கியத்துக்கு மட்டுமில்லாம நம்ம இந்த பீட்ரூட்ட செய்ற விதத்துல செஞ்சோம் அப்படின்னா இதோட சுவையும் நமக்கு ரொம்பவே பிடிக்கும்.

பீட்ரூட் பொரியல் குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க அப்படின்னா இப்ப நம்ம பாக்க போற இந்த பீட்ரூட் இனிப்பு அடைய செஞ்சு கொடுங்க. பீட்ரூட் சும்மாவே இனிப்பா தான் இருக்கும். அதுகூட நம்ம இன்னும் கொஞ்சம் இனிப்பு சேர்த்தோம் அப்படின்னா இன்னுமே டேஸ்டா இனிப்பா நம்ம ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய வகையில இந்த அடை இருக்கும். ரொம்பவே தித்திப்பா ஆரோக்கியமா இருக்கக் கூடிய இந்த பீட்ரூட் இனிப்பு அடை எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Print
5 from 1 vote

பீட்ரூட் இனிப்பு அடை | Beetroot Sweet Adai Recipe In Tamil

காய்கறிகள் சாப்பிட்டாலே நம்ம உடம்புல நிறைய சக்தி கிடைக்கும் அப்படின்னு சொல்லுவாங்க ஆனா குழந்தைகளுக்குஎதிரியே இந்த காய்கறிகள் அப்படின்னு சொல்லலாம். காய்கறிகள் கொடுத்தால் குழந்தைகள் விரும்பிசாப்பிடவே மாட்டாங்க விரும்பி சாப்பிடுவது என்ன சும்மாவே சாப்பிட மாட்டாங்க. அப்போநம்ம அவங்களுக்கு புடிச்ச மாதிரி இந்த காய்கறிகளை வைத்து வேறு ஏதாவது செஞ்சு இன் டேரக்ட்டாகாய்கறிகளை அவர்களுக்கு கொடுத்து பார்க்கணும். அப்படின்னா இன்னுமே டேஸ்டா இனிப்பா நம்ம ரொம்ப விரும்பிசாப்பிடக்கூடிய வகையில இந்த அடை இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Beetroot Sweet Adai
Yield: 4
Calories: 58kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 பீட்ரூட்
  • 2 கப் பால்
  • 2 கப் பச்சரிசி மாவு
  • 1 டீஸ்பூன் பால் பவுடர்
  • 1/2 கப் கோதுமை மாவு
  • 3 கப் வெல்லம்
  • 10 முந்திரி
  • 2 ஏலக்காய்
  • பச்சைக் கற்பூரம் சிறிதளவு
  • நெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பீட்ரூட்டை கழுவி சுத்தம் செய்து நன்றாக துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பால்ஊற்றி காய்ந்தவுடன் அதில் பீட்ரூட் துருவலை சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.
  • மற்றொரு பாத்திரத்தில் வெள்ளத்தை சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைத்து ஆறவைத்து வடிகட்டிக் கொள்ளவும்.கோதுமை மாவையும்மைதா மாவையும் நன்றாக வறுத்து எடுத்துக் கொண்டு ஒரு பாத்திரத்தில் போடவும்
  • அதனுடன் பால் பவுடரை சேர்த்து கலந்து கொள்ளவும். வடிகட்டி வைத்துள்ள வெள்ளை கரைசலில் கலந்து வைத்துள்ளமாவை சேர்த்து கிளற வேண்டும்.
     
  • ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இந்த வறுத்தமுந்திரியையும், தட்டி வைத்துள்ள ஏலக்காயையும் , வேக வைத்துள்ள பீட்ரூட்டையும் அந்தமாவுடன் சேர்த்து கிளற வேண்டும்.
  • ஒரு தோசை கல்லில் நெய் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு அடைகளாக தட்டி இரு பக்கமும் பொன்னிறமாகவேக வைத்து எடுத்தால் சுவையான பீட்ரூட் இனிப்பு அடை தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 58kcal | Carbohydrates: 13g | Protein: 22.2g | Sodium: 106mg | Potassium: 216mg | Fiber: 1.8g | Calcium: 12mg | Iron: 0.8mg