மயில் என்றதும் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது தமிழ் கடவுள் முருகப் பெருமான் ஆவார். ஏனென்றால் முருகப்பெருமானின் வாகனமாக திகழும் மயிலையும் அதன் உடம்பிலிருந்து விழுந்த இறகை கூட நாம் புனிதமாக கருதுவோம். அந்த அளவிற்கு முருகப் பெருமானின் மீது இருக்கும் பக்தி அவரது வாகனத்தின் மீதும் நம்மில் பெரும்பாலான கைத்திருப்போம். அப்படிப்பட்ட மயிலிறகை நாம் சிறுவயதில் வைத்து விளையாடி இருப்போம் ஏன் மயிலிறகை கீழே பார்த்தால் கூட எடுத்து வீட்டில் வைத்துக் கொள்வோம். இப்படி நாம் வீட்டில் மயிலிறகை வைப்பதன் மூலம் நம் வீட்டிற்கு என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பது பற்றி எந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பணம் சேர
உங்கள் வீட்டில் பீரோவில் நீங்கள் நகை பணம் வைத்திருக்கும் இடத்தில் இந்த மயிலிறை வைத்தால் மேலும் உங்களது வீட்டில் பணம் நகைகள் பெருகி கொண்டே போகும். இந்த செல்வங்கள் நிலையாகவும் உங்கள் கையில் இருக்கும்.
படுக்கை அறை
திருமணமான தம்பதியர்கள் தங்களின் வீட்டின் படுக்கையறையில் மயிலிறகை வைப்பதன் மூலம் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி இருவருக்கும் இடையே ஒரு புரிதலும் அன்யோன்யமும் உண்டாகும்.
வாஸ்த்து தோஷங்கள்
வீட்டில் இருக்கும் வாஸ்து சம்பந்தப்பட்ட தோஷங்கள் நீங்குவதற்கு எட்டு மயில் இறகை ஒன்றாக வைத்து. அதை வெள்ளை நிற நூலில் கட்டி பூஜை அறையில் வைத்து. “ஓம் சோமாயா நமஹ” என்ற மந்திரத்தை உச்சரித்தால். நம் வீட்டில் எப்படிப்பட்ட வாஸ்த்து தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும்.
கெட்ட சக்தி
உங்கள் வீட்டின் நிலை வாசலில் மயிலிறகை வைப்பதன் மூலம் உங்கள் வீட்டில் எந்த விதமான கெட்ட சக்திகளும் நுழைய முடியாது. அது உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளையும் வெளியேற்றிவிடும்.
சனி தோஷம்
உங்கள் வீட்டில் உள்ள சனி தோஷம் நீங்க வேண்டு என்றால் மூன்று மயில் இறகை ஒன்றாக வைத்து. அதை கருப்பு நிற கயிறு கட்டி. பின் சிறிது பார்க்கை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை மயிலிறைகில் தொட்டு வீட்டிலும் எல்லா இடங்களிலும் தெளித்து கொண்டே “ஒம் சனீஸ்வராய நமஹ” என்ற மந்திரத்தை 21 முறை உச்சரித்தால் சனி தோஷம் நீங்கும்.
மயிலிறகை நீங்கள் உங்கள் வீட்டில் சாதாரணமாக சுவற்றில் வைத்திருந்தால் கூட உங்கள் வீட்டில் பல்லிகள் பூச்சிகள் என எதுவும் வராமல் தடுக்கும்.
நீங்கள் தொழில் செய்யும் இடம் அல்லது வேலை பார்க்கும் இடங்களில் மயிலிறகை நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில வைப்பதன் மூலம் நீங்கள் இருக்கும் இடத்தின் அழகை மேம்படுவதோடு நீங்கள் வேலையை பார்க்கும் இடத்தின் உற்பத்திகளும் அதிகமாகும்.