Home சைவம் ஒரு அருமையான டிபன் பாக்ஸ் ரெசிபி பெங்களூர் பிசிபெலேபாத் இப்படி ஒரு தரம் மிஸ் பண்ணாமா...

ஒரு அருமையான டிபன் பாக்ஸ் ரெசிபி பெங்களூர் பிசிபெலேபாத் இப்படி ஒரு தரம் மிஸ் பண்ணாமா செய்து பாருங்க!

பெங்களூர்ல எல்லா ஹோட்டல்களிலும் ரொம்பவே ஃபேமஸா நம்ம சாப்பிடக்கூடிய ஒரு உணவு வகை அப்படின்னு பார்த்தோம்னா பிசி பேலே பாத். இந்த பெங்களூர் ஸ்டைல் பிசி பேலே பாத் பாத்தா அவ்ளோ ஒரு சுவையா இருக்கு. அந்த பிசி பேலே பாத்  மாதிரி சுவையான பிசி பேலே பாத்  எப்படி வீட்ல செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த பிசி பேலே பாத்  ரொம்ப சுவையான ஒரு உணவு. கர்நாடகாவில் எந்த ஹோட்டல்கள் போனாலும் சரி இல்ல பெங்களூர்ல எந்த ஹோட்டல்கள் போனாலும் சரி உங்களுக்கு கண்டிப்பா பிசி பேலே பாத் கிடைக்கும்.

-விளம்பரம்-

இந்த பிசி பேலே பாத் ஃபேமஸ் என்னன்னா இந்த பிசி பேலே பாத்ல அவங்க சேர்க்கும் மசாலா பொடி தான். அந்த மசாலா பொடி ரொம்ப சுவையான மசாலா பொடியா இருக்கும். இந்த பிசி பேலே பாத் அப்படின்னா என்ன அப்படின்னா நம்ம ஊர்ல சொல்றதுனா அது சாம்பார் சாதம் அப்படின்னு சொல்லலாம். ஆனால் இதுக்கு அவங்க செய்ற மசாலா பொடி தான் பிசி பேலே பாத்க்கு வேற லெவல்ல ஒரு டேஸ்ட் கொடுக்குது.

எப்படி பெங்களூர்ல செய்யற மாதிரியே பிசி பேலே பாத்க்கு மசாலா பொடி செய்து சுவையான பிசி பேலே பாத் சேர்த்து சாப்பிடலாம் வீட்டிலேயே அப்படிங்கறது பார்க்க இருக்கோம். குழந்தைகள் கிட்ட சாம்பார் சாதம் சொன்னீங்கன்னா சாப்பிட மாட்டாங்க அவங்க கிட்ட பிசி பேலே பாத் சொன்னீங்கன்னா தான் சாப்பிட்டு வாங்க. சுவையான பிசி பேலே பாத் பெங்களூர் ஸ்டைலில் எப்படி செய்யலாம் பார்க்கலாம்.

Print
4 from 4 votes

பெங்களூர் பிசிபெலேபாத் | Bangalore Bisibelabath Recipe In Tamil

பெங்களூர்ல எல்லா ஹோட்டல்களிலும் ரொம்பவே ஃபேமஸா நம்ம சாப்பிடக்கூடிய ஒரு உணவு வகை அப்படின்னு பார்த்தோம்னா பிசி பேலே பாத். இந்த பெங்களூர் ஸ்டைல் பிசி பேலே பாத் பாத்தா அவ்ளோ ஒரு சுவையா இருக்கு. அந்த பிசி பேலே பாத்  மாதிரி சுவையான பிசி பேலே பாத்  எப்படி வீட்ல செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த பிசி பேலே பாத்  ரொம்ப சுவையான ஒரு உணவு. கர்நாடகாவில் எந்த ஹோட்டல்கள் போனாலும் சரி இல்ல பெங்களூர்ல எந்த ஹோட்டல்கள் போனாலும் சரி உங்களுக்கு கண்டிப்பா பிசி பேலே பாத் கிடைக்கும்.சுவையான பிசி பேலே பாத் பெங்களூர் ஸ்டைலில் எப்படி செய்யலாம் பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: bangalore
Keyword: Bangalore Bisibelabath
Yield: 4
Calories: 97kcal

Equipment

  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1 கப் அரிசி
  • 1/2 கப் துவரம்பருப்பு
  • 1/2 கேரட் கேரட்
  • 10 கப் பீன்ஸ்
  • 2 கத்திரிக்காய்
  • 1 உருளைக்கிழங்கு
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 12 குடைமிளகாய்
  • 1 தக்காளி
  • 1/4 கப் புளி கரைசல்
  • 10 முந்திரிபருப்பு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • நெய் தேவையான அளவு

பிசி பேலே பாத் மசாலாவிற்கு

  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 1 ஸ்பூன் தனியா விதைகள்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1/4 ஸ்பூன் வெந்தயம்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் கசகசா
  • 1 ஸ்பூன் வெள்ளை எள்
  • 1/4 கப் கொப்பரை தேங்காய் துருவல்

செய்முறை

  • முதலில்  அரிசி , துவரம்பருப்பை சுத்தமாக களைந்து ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து ஊற வைத்து எடுத்துள்ள அரிசி , துவரம் பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  •  பிறகு அதில் மீடியமாக நறுக்கிய கத்திரிக்காய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து காய்கறிகளும் அரிசி பருப்பு வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை  மூடி போட்டு 4 விசில் விடவும்.
  •    பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடலைப்பருப்பு, உளுந்து, தனியா விதைகள் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதில் வெந்தயம் , மிளகு , சீரகம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அதனோடு வெள்ளை எள், கசகசா சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு பட்டை, கிராம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  •  இதன் பிறகு அதில் துருவி உள்ள கொப்பரை தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
     

Nutrition

Serving: 100g | Calories: 97kcal | Carbohydrates: 31g | Protein: 9.2g | Sodium: 127mg | Potassium: 98mg | Calcium: 41mg | Iron: 0.2mg

இதையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சத்துமிக்க செம்பருத்தி பூ தோசை இப்படி ஈஸியாக வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க!