மதிய உணவுக்கு பக்காவான சுரைக்காய் பொரிச்ச கூட்டு இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

உடலுக்கு நீர்ச்சத்து தேவைப்படுகிறது, எனவே முடிந்தவரை அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் நாம் சாப்பிடும் உணவு வகைகளும் நீர் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்படி நீர்ச் சத்து நிறைந்த காய்கறி சுரைக்காய் ,புடலங்காய், வெள்ளரிக்காய், , பீர்க்கங்காய், சௌசௌ போன்ற பல காய்கறிகள் இருக்கின்றன. இவற்றை பொரியல் செய்தும் சாப்பிடலாம். அல்லது இவற்றுடன் பருப்பு சேர்த்துக் கூட்டு செய்தும் சாப்பிடலாம்.

-விளம்பரம்-

ஒவ்வொரு நாளும் சாததிற்க்கு தொட்டுக்கொண்டு சாப்பிட வறுவல்,கூட்டு இவற்றை மட்டுமே செய்து கொடுக்கிறோம். சுரைக்காய் காய்கறி சேர்த்து செய்யும் இந்த சுரைக்காய் பொரிச்ச கூட்டு உடம்பிற்கும் மிகவும் ஆரோக்கியமானது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவதாக இருந்தால் கூட்டு செய்வது தான் சிறந்த முறையாகும். இதில் காரமும் குறைவாக சேர்ப்பதால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

- Advertisement -

 சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயில் வைட்டமின் பி,சி சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. சுரைக்காயின் சதைப் பகுதியை வெட்டி ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை ப்ழச்சார்றை சேர்த்து பருகி வர சிறுநீரக கோளாறு, சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு இந்த சுரைக்காய்.

 அது மட்டுமல்லாமல் சுவையும் அருமையாக இருக்கும். அப்படி சுரைக்காயுடன் கடலைப்பருப்பு சேர்த்து இவ்வளவு அருமையான சுரைக்காய் பொரிச்ச கூட்டு செய்து விட முடியும். காய்கறிகளை பொரியலாக செய்து கொடுத்தால் பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட, இப்படி பருப்பு சேர்த்து பொரிச்ச கூட்டு செய்யும் பொழுது அதனை விருப்பமாக சாப்பிடுவார்கள்.  எனவே குழந்தைகளுக்கு இதன் சுவை பிடித்தமானதாக இருக்கும். வாருங்கள் இந்த சுரைக்காய் பொரிச்ச கூட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்

Print
2.50 from 2 votes

சுரைக்காய் பொரிச்ச கூட்டு | Bottle gourd Poricha Kootu

சுரைக்காயுடன் கடலைப்பருப்பு சேர்த்து இவ்வளவு அருமையான சுரைக்காய் பொரிச்ச கூட்டு செய்து விட முடியும்.காய்கறிகளை பொரியலாக செய்து கொடுத்தால் பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட, இப்படி பருப்புசேர்த்து பொரிச்ச கூட்டு செய்யும் பொழுது அதனை விருப்பமாக சாப்பிடுவார்கள்.  எனவே குழந்தைகளுக்கு இதன் சுவை பிடித்தமானதாக இருக்கும்.வாருங்கள் இந்த சுரைக்காய் பொரிச்ச கூட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்தபதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Bottle gourd Poricha Kootu
Yield: 4
Calories: 987kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ சுரைக்காய்
  • 50 கிராம் கடலைப்பருப்பு
  • 6 வரமிளகாய்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு
  • உப்பு தேவையானஅளவு
  • 2 தேங்காய் சில்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி எண்ணெய்

செய்முறை

  • சுரைக்காய் பொரிச்ச கூட்டு செய்ய தேவையான அனைத்தையும் தயாராக வைத்து கொள்ளுங்கள். தேங்காய் அரைக்க தயாராக வைக்கவும்.
     
  • முதலில் ஒரு கடாயில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு வரமிளகாய், சீரகம், உளுத்தம் பருப்பு ஆகியவற்றைவறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
  • கடலைப்பருப்பை கழுவி 2 கிளாஸ் தண்ணீரில் வேகவிடவும்.
  • பருப்பு 3/4 பதம் வெந்தவுடன் சுரைக்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி பருப்பில் போட்டு,உப்பு, அரைத்த மசாலா ஆகியவற்றை போட்டு வேகவிடவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கூட்டில் கொட்டவும்
  • சுவையான சுரைக்காய் பொரிச்ச கூட்டு தயார்.

Nutrition

Serving: 700g | Calories: 987kcal | Carbohydrates: 64g | Protein: 6.9g | Sodium: 6.9mg | Potassium: 1094mg | Fiber: 4.7g | Sugar: 2g | Calcium: 5.4mg