- Advertisement -
சாதத்துடன் தொட்டுக்கொள்ள அருமையான சுவையில் கத்திரிக்காய் பொரியல் இனி இப்படி செய்து கொடுத்து பாருங்க வேண்டான்னு சொல்லவே மாட்டாங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இது போன்று செய்து கொடுத்தால் கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க.
-விளம்பரம்-
எப்படி இந்த கத்திரிக்காய் பொரியல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
கத்திரிக்காய் பொரியல் | Brinjal Poriyal Recipe In Tamil
சாதத்துடன் தொட்டுக்கொள்ள அருமையான சுவையில் கத்திரிக்காய் பொரியல் இனி இப்படி செய்து கொடுத்து பாருங்க வேண்டான்னு சொல்லவே மாட்டாங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இது போன்று செய்து கொடுத்தால் கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி இந்த கத்திரிக்காய் பொரியல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- ¼ கிலோ கத்திரிக்காய்
- 3 வெங்காயம்
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- ¼ டீஸ்பூன் கடுகு
- புளி நெல்லிக்காய் அளவு
- எண்ணெய், உப்பு தேவையான அளவு
- 1 கப் தேங்காய் துருவல்
செய்முறை
- முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்து, காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- பிறகு நறுக்கிய கத்தரிக்காயை போடவும். உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, புளியை கெட்டியாக கரைத்து அதில் சேர்க்கவும்.
- நன்றாக வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும், தேங்காய் துருவலை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும். தேங்காய் துருவலை விருப்பப்பட்டால் சேர்த்து கொள்ளலாம் புளிக்கு பதிலாக தக்காளி சேர்க்கலாம்.