சுடச்சுட சாதத்தில் போட்டு சாப்பிட , கத்திரிக்காய் தொக்கு இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

கத்திரிக்காயை எடுத்து இது போல, புளி எல்லாம் சேர்த்து ஒருமுறை தொக்கு செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல், சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். சூப்பரான ஆரோக்கியமான கத்திரிக்காய் தொக்கு எப்படி எளிதாக நம் வீட்டிலும் செய்யலாம். முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது, ஆஸ்துமா, ஈரல் நோய்கள், சளி, உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

சமைக்கும் போதே நமக்கு நாக்கில் எச்சில் ஊறத் தொடங்கி விடும். இதை எப்போது சாதத்தில் போட்டு சாப்பிடுவோம் என்ற ஆர்வம் நம்மை கட்டுப்படுத்தவே முடியாது. அந்த அளவிற்கு ருசியான சுலபமான கத்திரிக்காய் தொக்கு இது. இதை கத்திரிக்காய் துவையல் என்றும் வைத்துக் கொள்ளலாம். பெயர் வைப்பது நம்முடைய விருப்பம்தான். என்ன பெயர் வைத்தால் என்ன? ருசிக்கு மட்டும் குறைவு இருக்க கூடாது அல்லவா. அப்படிப்பட்ட சூப்பரான ஒரு ரெசிபி இன்னைக்கு உங்களுக்காக.

- Advertisement -
Print
4 from 1 vote

கத்திரிக்காய் தொக்கு | Brinjal Thokku Recipe In Tamil

கத்திரிக்காயை எடுத்து இது போல, புளி எல்லாம் சேர்த்து ஒருமுறை தொக்கு செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல், சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். சூப்பரான ஆரோக்கியமான கத்திரிக்காய் தொக்கு எப்படி எளிதாக நம் வீட்டிலும் செய்யலாம். முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது, ஆஸ்துமா, ஈரல் நோய்கள், சளி, உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH, Side Dish
Cuisine: tamilnadu
Keyword: Brinjal Thokku
Yield: 4
Calories: 60kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • கத்திரிக்காய்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 2 வெங்காயத்தாள்
  • 6 பல் பூண்டு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா
  • உப்பு தேவைக்கு ஏற்ப
  • 1/2 கப் தேங்காய் துருவல்

தாளிக்க

  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி சோம்பு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • எண்ணெய் தேவைக்கு ஏற்ப

செய்முறை

  • வெங்காயம்,பச்சை மிளாகாய், தக்காளி, வெங்காயத்தாள், பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். கத்திரிக்காயை கழுவி விட்டு காம்பை நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்திருப்பவற்றை சேர்த்து வதக்கி எடுத்து ஆற வைக்கவும். வதக்கிஆற வைத்ததை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
     
  • அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்பு தாளித்தவற்றுடன் அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும். பின்பு மசாலாதூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • அதன் பின்ன அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதினை சேர்த்து சிம்மில் வைத்து நன்கு கிளறி விட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கவும், சுவையான கத்திரிக்காய் தேங்காய் தொக்கு ரெடி இதனை சாம்பார் சாதம், கீரை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். காரம் வேண்டுவோர் இதனுடன் மிளகு தூள் சேர்த்தும் சாப்பிடலாம்.

Nutrition

Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 37g | Protein: 19g | Fat: 2g | Cholesterol: 2mg | Sodium: 10mg | Potassium: 83mg | Fiber: 2g