ப்ரோக்கோலி உருளைக்கிழங்கு மசாலா ஒரு முறை உங்கள் வீட்டில் இப்படி செய்து பாருங்க! சுவை அருமையாக இருக்கும்!

- Advertisement -

பொதுவாக அனைவரது வீட்டிலும் விசேஷ நாளன்று சைவ சாப்பாடு என்றாலே அந்த சாப்பாட்டில் உருளைக்கிழங்கு மசாலா கண்டிப்பாக இருக்கும். அனைவருக்கும் பிடித்தமான ஒரு சைடு டிஷ் என்றால் அது உருளைக்கிழங்கு. பெரும்பாலும் உருளைக்கிழங்கை எப்படி செய்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உருளைக்கிழங்கு பொரியல் உருளைக்கிழங்கு மசியல் உருளைக்கிழங்கு பட்டாணி கூட்டு, உருளைக்கிழங்கு சாதம், வெஜ் கட்லெட் என உருளைக்கிழங்கு வைத்து செய்யும் அனைத்துமே அனைவராலும் விரும்பக் கூடிய ஒன்று.

-விளம்பரம்-

வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகளில் உருளைக்கிழங்கும் ஒன்று. இதில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் உடலுக்கு ஆரோக்கியமானது. அத்தகைய உருளைக்கிழங்கோடு ப்ரோக்கலி வைத்து ஒரு மசாலா இப்பொழுது செய்யப் போகிறோம். பச்சை காய்கறியான ப்ரோக்கலியிலும் பலவிதமான சத்துக்கள் உண்டு. உருளைக்கிழங்கு போல் இதிலும் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒன்றாக இது திகழ்கிறது.

- Advertisement -

நீரிழிவு நோய் உள்ளவர்களும் இந்த ப்ரோக்கலியை சாப்பிடலாம் மிகவும் நல்லது. உருளைக்கிழங்கையும் ப்ரோக்கலிங்கையும் வைத்து செய்யும் இந்த மசாலா மிகவும் சுவையாக இருக்கும். எப்பொழுதும் ஒரே மாதிரியாக உருளைக்கிழங்கு மசாலா செய்யாமல் ஒருமுறை இதே மாதிரி கொஞ்சம் டிஃபரண்டாக செய்து பாருங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

இந்த மசாலாவை இட்லி தோசை சப்பாத்தி பூரி சாம்பார் சாதம் தயிர்சாதம் காரக்குழம்பு சாதம் வெறும் சாதம் என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம் சுவை அற்புதமாக இருக்கும். எளிமையான முறையிலேயே இதனை செய்து விடலாம். இந்த சுவையான உருளைக்கிழங்கு புரோக்கரில் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்

Print
No ratings yet

ப்ரோக்கலி உருளை மசாலா | Broccoli Potato Masala

பெரும்பாலும் உருளைக்கிழங்கை எப்படி செய்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உருளைக்கிழங்கு பொரியல் உருளைக்கிழங்கு மசியல் உருளைக்கிழங்கு பட்டாணி கூட்டு, உருளைக்கிழங்கு சாதம், வெஜ் கட்லெட் என உருளைக்கிழங்கு வைத்துசெய்யும் அனைத்துமே அனைவராலும் விரும்பக் கூடிய ஒன்று.. எளிமையான முறையிலேயே இதனை செய்து விடலாம். இந்த சுவையான உருளைக்கிழங்கு புரோக்கரில் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Brocoli Potato Masala
Yield: 4
Calories: 240kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  • 200 கிராம் ப்ரோக்கலி
  • 2 தக்காளி
  • 2 பெரிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • கொத்தமல்லி இலைகள் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கருவேப்பிலை தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு

செய்முறை

  • முதலில் உருளைக்கிழங்கு நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து ப்ரோக்கலியை சிறிய துண்டுகளாக வெட்டி அதை சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின்பும் பெரிய வெங்காயத்தை வெட்டி அதில் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும் வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து ஐந்து நிமிடங்கள் எண்ணெயில் வதக்கவும். உருளைக்கிழங்கு பாதி வெந்தவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
  • அனைத்தையும் சேர்த்து ஒரு பத்து நிமிடங்கள் வேகவைத்து எடுத்து இறுதியாக மல்லி இலைகள் சேர்த்த இறக்கினால் சுடச்சுட ப்ரோக்கலி உருளைக்கிழங்கு மசாலா தயார்.

செய்முறை குறிப்புகள்

வெறும் சாதத்தோடும் இட்லி தோசை சப்பாத்தி பூரி என அனைத்திலும் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 4.1g | Cholesterol: 25mg | Potassium: 104mg | Calcium: 16mg | Iron: 0.9mg