பட்டர் கீமா மசாலா இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க! இனி வாழ்க்கையில் இந்த டேஸ்டை மறக்கவே மாட்டீங்க!!

- Advertisement -

மட்டன் கொத்து கறியைத் தான் கீமா என்கிறார்கள். இந்த கறி கீமா கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ரொம்பவே சுவை மிகுந்ததாக இருக்கிறது. அசைவ பிரியர்களுக்கு  இந்த மட்டன் கீமாவில் பட்டர் கீமா மசாலா இப்படி எளிதாக ஒரு முறை தயாரித்து பாருங்கள். இந்த டேஸ்டை சாப்பிடுபவர்கள் மறக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு சுவையாக இருக்கக் கூடிய இந்த எளிதான பட்டர் கீமா மசாலா எப்படி தயாரிப்பது? என்பதை இனி பார்ப்போம்.

-விளம்பரம்-
Print
No ratings yet

பட்டர் கீமா மசாலா | Butter Keema Masala Recipe In Tamil

மட்டன் கொத்து கறியைத் தான் கீமா என்கிறார்கள். இந்த கறி கீமா கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ரொம்பவே சுவை மிகுந்ததாக இருக்கிறது. அசைவ பிரியர்களுக்கு  இந்த மட்டன் கீமாவில் பட்டர் கீமா மசாலா இப்படி எளிதாக ஒரு முறை தயாரித்து பாருங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: MASALA
Cuisine: tamilnadu
Yield: 4
Calories: 223kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கிலோ கீமா நன்கு நீரில் அலசிக் கொள்ளவும்
  • 1 கப் வெண்ணெய்
  • 500 கிராம் தயிர்
  • 3 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட்
  • 3 டீஸ்பூன் பூண்டு பேஸ்ட்
  • 2 தக்காளி நறுக்கியது
  • 5 கிராம்பு
  • 3 வெங்காயம் நறுக்கியது
  • 1 இன்ச் பட்டை
  • 2 பச்சை ஏலக்காய்
  • உப்பு தேவையானஅளவு
  • 7 பச்சை மிளகாய்
  • 2 பிரியாணி இலை
  • 3 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • கொத்தமல்லி சிறிது

செய்முறை

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, பட்டை, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  • பின்னர் அதில் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
  • அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கீமாவை போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.
     
  • பின் அதில் வெண்ணெயை சேர்த்து நன்கு பிரட்டி, மற்றொரு அடுப்பில் உள்ள வாணலியில் போட்டு கிளறி விட வேண்டும். பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை நன்கு கீமாவை வேக வைக்க வேண்டும்.
     
  • அடுத்து அதில் தயிர் சேர்த்து கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து கீமா தயிரை முற்றிலும் உறிஞ்சியதும், அடுப்பில் இருந்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், பட்டர் கீமா மசாலா ரெடி!!!

Nutrition

Serving: 200g | Calories: 223kcal | Carbohydrates: 15g | Protein: 9.7g | Fat: 75g | Cholesterol: 7mg | Sodium: 13mg | Potassium: 188.7mg | Fiber: 0.9g | Sugar: 0.5g | Calcium: 14mg | Iron: 1.6mg
- Advertisement -