சிக்கன் பல உணவுகள் வித்தியாச வித்தியாசமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம். இப்ப நம்ம செய்யப் போறது கேண்டி சிக்கன் ஒரு உணவை நம்ம புதுசா கண்டுபிடிக்கிறது முக்கியம் கிடையாது அந்த உணவுக்கு அங்க வைக்கிற பெயர் தான் முக்கியம். அந்த வகையில் தான் இப்போ இந்த உணவுக்கு நம்ம கேண்டிட் சிக்கன் அப்படின்னு பெயர் வைத்திருக்கோம்.
இந்தக் கேண்டி சிக்கன் எப்படி பண்றது அப்படிங்கறது தெரிஞ்சுக்கோ போறோம் இந்த பதிவில். ரொம்பவே ஈசியா இந்த கேண்டி சிக்கனை வீட்ல செய்திடலாம். இந்த கேண்டி சிக்கன் செய்யறதுக்கு நமக்கு அதிகமான பொருட்களும் தேவைப்படாது எவ்வளவு சுலபமா செய்ய முடியுமோ அவ்வளவு சுலபமாக இந்த கேண்டி சிக்கனை நம்ம பண்ண போறோம். இந்த கேண்டி சிக்கன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரொம்ப பிடித்தமான ஒரு உணவா இருக்கும்.
இந்த மாலை சிற்றுண்டிகள் போல எடுத்துக்கலாம். விருப்பம் இருக்கிறவங்க இதை சாதத்துக்கு சைடு டிஷ் ஆகவும் எடுத்து சாப்பிட்டுக்கலாம். நாம இப்ப பண்ண போறது இந்த மாலை நேர சிற்றுண்டிக்கு பக்காவா இருக்கும். அதுவும் மழை பெய்து கொண்டு இருக்கும் போது சுட சுட இந்த கேண்டி சிக்கன் சாப்பிட்டோம்னா சும்மா பீலே அவ்வளவு சூப்பரா இருக்கும். வாங்க இந்த மழை நேரத்துக்கு ரொம்ப சுவையான அசத்தலான்னு ருசியிலஞ இந்த கேண்டி சிக்கன் எப்படி செய்வது அப்படின்னு பார்க்கலாம்.
கேண்டி சிக்கன் | Candy Chicken Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ சிக்கன்
- 1 ஸ்பூன் மிளகாய்தூள்
- 1 ஸ்பூன் மல்லிதூள்
- 1/4 கப் மைதா
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 10 பிரட்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையானஅளவு
- 5 ஐஸ் குச்சிகள்
செய்முறை
- முதலில் சிக்கனை சுத்தமாக கழுவி விட்டு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அரைத்து வைத்துள்ள சிக்கனில் மிளகாய் தூள், மல்லித்தூள், இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.இதில் எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக பிசைந்து தனியாக எடுத்து வைக்கவும்.
- பிறகுஒரு பாத்திரத்தில் மைதா மாவு, மிளகாய்தூள், உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பத்திற்கு கலந்து வைத்து கொள்ளவும். பிறகு பிரட்டுகளை நடுவில் சின்ன சின்ன வட்ட வடிவ துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
- மீத முள்ள பிரட் ஓரங்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது வட்டமாக கட் செய்து வைத்துள்ள பிரட் துண்டுகளை எடுத்துக் கொண்டு ஒரு துண்டு நடுவில் பிசிறி வைத்துள்ள சிக்கனை வைத்து மேலே இன்னொரு ஒரு வட்ட பிரட்டை வைத்து இரண்டுக்கும் நடுவில் ஒரு ஐஸ் குச்சியை வைத்து. கேண்டி போல் செய்யவும்.
- கலந்து வைத்துள்ள மைதா மாவில் செய்து வைத்துள்ள கேண்டி சிக்கனை போட்டு இரண்டு புறமும் படுமாறு எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு பொடித்து வைத்துள்ள பிரட் துகள்களில் மைதாமாவில் நனைத்து வைத்துள்ள கேண்டி சிக்கனை இரண்டு புறமும்போட்டு பிரட்டி எடுத்துக் கொள்ளவும் .
- அடுப்பில்கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிசூடானதும் அதில் செய்து வைத்துள்ள கேண்டி சிக்கனை சேர்த்து இரண்டு புறமும் நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான கேண்டி சிக்கன் தயார்.