இட்லி தோசை ,சப்பாத்தியுடன் சாப்பிட ருசியான குடைமிளகாய் வெங்காய கிரேவி இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

இது ஒரு சிம்பிளான கிரேவி . சப்பாத்தி இட்லி தோசை கு தொட்டுக்கொள்ள அருமையா இருக்கும். இதை செய்வது ரொம்ப சுலபம் , பத்தே நிமஷத்துலே இந்த கிரேவியை செஞ்சுடலாம். இது சமைக்க தெரியாதவங்க கூட சுலப செய்யற வகையே ரொம்ப விலாவாரியா பார்க்கலாம். குடைமிளகாயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால் இதை சமையலில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். குடைமிளகாய் கென்றே ஒரு தனி மணமும் ருசியும் உண்டு. சரி வாங்க, இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

-விளம்பரம்-
Print
No ratings yet

குடைமிளகாய் வெங்காய கிரேவி | Capsicum Onion Gravy

இது ஒரு சிம்பிளான கிரேவி . சப்பாத்தி இட்லி தோசை கு தொட்டுக்கொள்ள அருமையா இருக்கும். இதை செய்வது ரொம்ப சுலபம் , பத்தே நிமஷத்துலே இந்த கிரேவியை செஞ்சுடலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Gravy
Cuisine: mumbai
Keyword: Capsicum Onion Gravy
Yield: 4
Calories: 265kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 குடைமிளகாய் சதுரமாகவெட்ட வேண்டும்.
  • 1 பெரிய வெங்காயம் சதுரமாகவெட்ட வேண்டும்.
  • 5 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 வெங்காயம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி
  • 2 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லிதூள்
  • 1/2 டீஸ்பூன் கரம்மசாலா தூள்

செய்முறை

  • கடாயில் எண்ணெய் சேர்த்து , எண்ணெய் சூடானதும் சதுரமாக நறுக்கிவைத்த வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்துக்கொள்ளவும்.
  • சிறுது நிறம் மாறும் வரை வதக்கவும். ரெண்டு நிமிடம் மட்டும் வெங்காயம் குடமிளகாய் மிருது தன்மை ஆக்குவதற்கு முன்னனரே எடுத்துவிடவேண்டும். கொஞ்சம் உப்பு சேர்த்து ௨௦ சதவீதம் வதங்கவிடவும்.
  • பின்னர் அதை  கரண்டியால்எண்ணெய் வடித்து ஒரு தட்டில் போட்டு தனியாக வைத்துவிடவும். இப்போது கடாயில் எண்ணெய் மீதம் இருக்கும் . ஒரு கரண்டி எண்ணெய்யை திரும்ப அதில் ஊற்றி.,காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
  • எண்ணெய் பிரிந்து வந்ததும் கடலை மாவு சேர்த்து நன்கு பச்சடி வாசம் போகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியவுடன் தக்காளியை சேர்க்கவும் , தக்காளியை சேர்த்து மசிஞ்சு நல்ல குழைத்து வர வரைக்கும் வதக்கவும்.
  • வதங்கியவுடன்,அதில் மசாலா சாமான்களை சேர்க்கவும் , மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்க்கவும் கிளறிவிடவும். பின்னர்,அதில் தயிரு சேர்த்து. ,சிறுது தண்ணீர் சேர்த்து மூடியை போட்டு எண்ணெய் பிறிது வரும் வரை மூடி வைக்கவும்..
  • சிறிது நேரம் களைத்து பார்த்தால் என்னை பிரிந்து கிரேவி பதம் வந்தவுடன். வதக்கி தனியே வைத்த குடைமிளகாய் வெங்காயத்தை சேர்த்து கிளறி இறக்கவும். மேல சிறுது கரம் மசாலா சேர்த்து . உப்பு சுவைக்கேற்ற மாதிரி சேர்த்து கொள்ளலாம். சுவையான தயார்
     

Nutrition

Serving: 250g | Calories: 265kcal | Carbohydrates: 18.2g | Protein: 10.6g | Fat: 19g | Sodium: 9mg | Potassium: 554mg
- Advertisement -