கடல்வாழ் உயிரினங்களில் இறால் ரொம்பவும் வித்தியாசமானது. சிறிய மற்றும் பெரிய பெரிய அளவுகளில் கூட கிடைக்கும் இந்த இறால் என்றால் சிலருக்கு அலாதியான ஒரு விருப்பம் உண்டு. இறால் பிரியர்களுக்கு கேப்சிகம் இறால் ஃப்ரை ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த இறால் சமையல் சுவையாக இருக்கும்
கேப்சிகம் இறால் ஃப்ரை சாதத்துடன் சாப்பிட்டால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். பலருக்கு எதிர்ப்பு சக்தி குறைபாடு அதிகம் ஆகி கொண்டே வருகிறது. அவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கவே இந்த இறால்கள் பெரிதும் பயன்படுகிறது. இவற்றில் உள்ள அதிகப்படியான ஜின்க் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மேலும், வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கூட்ட இந்த இறால் உதவுகிறது.
இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இறால் பிரியர்களுக்கு கேப்சிகம் இறால் ஃப்ரை ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த இறால் வறுவல் சுவையாக இருக்கும். கேப்சிகம் இறால் ஃப்ரை வீட்டில் உள்ளவர்க்கு செய்து கூடுதல் அனைவரும் பாராட்டி தள்ளிவிடுவார்கள்.அந்த அளவிற்கு இறால் வறுவல் சுவையாக இருக்கும். இந்த பதிவில் இறால் வறுவல் எப்படி சமைப்பது என்று பார்ப்போம் வாருங்கள்.
கேப்சிகம் இறால் ஃப்ரை | Capsicum Prawn Fry Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 25 இறால்
- 1 கேப்ஸிகம்
- 1 வெங்காயம்
- 2 மேசைக்கரண்டி எண்ணெய்
- 2 மேசைக்கரண்டி வெள்ளை நல்ல மிளகு
- 1 எலுமிச்சை
- 1 1/2 தேக்கரண்டி ஒன்றிரண்டாக அரைத்த மிளகாய்
- 1 மேசைக்கரண்டி சோயா சாஸ்
- உப்பு தேவைக்கு
- 3 பூண்டு
செய்முறை
- இறாலை சுத்தப்படுத்தி அதனுடன் வெள்ளை மிளகு, எலுமிச்சை சாறு ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பூண்டைநசுக்கி வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், நசுக்கிய பூண்டு மற்றும் கேப்ஸிகம் போட்டு வதக்கவும்,
- பாதி வதங்கியவுடன் அஜினோமோட்டோ உப்பு, சாஸ், மிளகாய் தூள், உப்பு போட்டு இறாலையும் சேர்க்கவும்.
- இறால் வெந்தவுடன் இறக்கி வைக்கவும். சுவையான கேப்சிகம் இறால் ஃப்ரை ரெடி.