இரவு உணவுக்கு ருசியான கேரட் கேழ்வரகு ரொட்டி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

- Advertisement -

இன்றைய நவீன உலகத்தில் சாப்பிடுவதற்கென்று பீட்சா, பர்கர், சாண்ட்விச் போன்ற பலவித உணவுகள் இருக்கின்றன. இவற்றை உண்பதால் ஊட்டச்சத்துகள் எதுவும் கிடைப்பதில்லை. எனவே வாரம் ஒருமுறையாவது வீட்டில் குழந்தைகளுக்கு

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : ருசியான கிராமத்து கேழ்வரகு புட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான

- Advertisement -

ஆரோக்கியமான உணவுகளை சமைத்துக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து மிக்க இந்த கேரட் கேழ்வரகு ரொட்டியை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்

Print
1 from 1 vote

கேரட்-கேழ்வரகு ரொட்டி | Carrot Ragi Roti Recipe In Tamil

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை சமைத்துக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து மிக்க இந்த கேரட் கேழ்வரகு ரொட்டியை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamilnadu
Keyword: Carrot Ragi Roti
Yield: 5
Calories: 135kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கேழ்வரகு
  • 1 பச்சை மிளகாய்
  • 2 கேரட்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கைப்பிடியளவு கொத்தமல்லி, கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, ஆகியவற்றை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பின்கேரட்டை துருவிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, கேரட் துருவல், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும்
  • இந்தக்கலவையில் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவேண்டும் .
  • பின்புதோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பிசைந்த மாவை சிறு சிறு ரொட்டிகளாக தட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் சேர்த்து சுட்டெடுக்கவும். சுவையான கேரட்-கேழ்வரகு ரொட்டி தயார்

Nutrition

Serving: 100g | Calories: 135kcal | Carbohydrates: 15g | Protein: 2g | Fat: 7.8g | Cholesterol: 3.7mg | Sodium: 68mg | Potassium: 61.3mg | Fiber: 0.7g | Calcium: 12mg | Iron: 0.6mg