சுட சுட சாதத்தில் இந்த கேரட் பொரியலை போட்டு பிசைந்து, சாப்பிட்டு பொரியலை சீக்கிரம் காலி செஞ்சுருவாங்க!!!

- Advertisement -

கேரட் பொரியல் இப்படி செய்தால் குழம்பு வைக்க வேண்டிய வேலையே இருக்காது.காரசாரமான கேரட் பொரியல் செய்வது எப்படி இந்த கேரட் பொரியலை எவ்வளவுதான் சுவையாக செய்தாலும் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடிய பொருட்களில் இந்த கேரட்டும் ஒன்று. கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

-விளம்பரம்-

குளிர்காலத்தில் கேரட் விலை குறைவாக நமக்கு கிடைக்கும். உங்க வீட்டில் கேரட்டை வாங்கினால் ஒரு முறை தவறாமல் இந்த முறையில் பொரியல் செய்து சாப்பிடுங்கள். இந்த கேரட் பொரியல் காரசாரமான சுவையைக் கொடுக்கக்கூடிய ரெசிபி. ஆந்திரா பக்கத்தில் பொரியல் என்றால் இப்படித்தான் மசாலா பொருட்களை வறுத்து அரைத்து போட்டு செய்வார்கள்.

- Advertisement -

அது போலத்தான் இன்றைக்கும் நாம ஒரு ரெசிபியை பார்க்க போகின்றோம். வாங்க நேரத்தை கடத்தாமல் ரெசிபிக்குள் செல்வோம்.

Print
4.34 from 3 votes

கேரட் பொரியல் | Carrot Stir Fry Recipe In Tamil

குளிர்காலத்தில் கேரட் விலை குறைவாக நமக்குகிடைக்கும். உங்க வீட்டில் கேரட்டை வாங்கினால் ஒரு முறை தவறாமல் இந்த முறையில் பொரியல்செய்து சாப்பிடுங்கள். இந்த கேரட் பொரியல் காரசாரமான சுவையைக் கொடுக்கக்கூடிய ரெசிபி.ஆந்திரா பக்கத்தில் பொரியல் என்றால் இப்படித்தான் மசாலா பொருட்களை வறுத்து அரைத்துபோட்டு செய்வார்கள். அது போலத்தான் இன்றைக்கும் நாம ஒரு ரெசிபியைபார்க்க போகின்றோம். வாங்க நேரத்தை கடத்தாமல் ரெசிபிக்குள் செல்வோம்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Carrot Poriyal
Yield: 4
Calories: 131kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ கேரட்
  • சீரகம்
  • 1 வெங்காயம்
  • 1 ஸ்பூன் வர மல்லி
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை
  • 1 ஸ்பூன் எள்ளு
  • 1/4 ஸ்பூன் பெருங்காயம்
  • 4 வரமிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கைப்பிடி பெரிய வெங்காயம்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கைப்பிடி கொத்தமல்லி தழை

செய்முறை

  • முதலில் 1/2 கிலோ அளவு கேரட்டை வாங்கி தோல்சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். கேரட்டை முழுசாக கழுவியபின்பு நறுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு இதற்கு ஒரு நல்ல மசாலாவைவறுத்து அரைக்க வேண்டும்.
  • அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் வர மல்லி– 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், வறுத்த வேர்க்கடலை –1 ஸ்பூன், எள்ளு – 1 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், வரமிளகாய் – 4, இந்த பொருட்களைஎல்லாம் போட்டு மணக்க மணக்க வறுக்க வேண்டும்.
  •  எல்லாபொருட்களும் சிவந்து வந்த பிறகு இறுதியாக தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், சேர்த்துஅதையும் நன்றாக கடாயிலேயே வறுத்து விடுங்கள். தேங்காவும் லேசாக டிரை ஆகி வரும்போதுஅடுப்பை அணைத்து விடுங்கள். இந்த எல்லா பொருட்களும் ஆறிய பின்பு மிக்ஸிஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ரொம்பவும் நைசாக அரைக்கவேண்டாம். ரொம்பவும் கொரகொரப்பாகவும் அரைக்க வேண்டாம். 90% இந்த மசாலா அரைபட்டு இருக்கவேண்டும்.
  • இப்போது கேரட் பொரியலை தாளித்து விடலாம். அடுப்பில்ஒரு கடாயை வைத்து, எண்ணெய் – 2 ஸ்பூன் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு– 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு,போட்டு நன்றாக வதக்கி விட வேண்டும்.
  • வெங்காயம் லேசாக நிறம் மாறி வந்ததும் நறுக்கி வைத்திருக்கும்கேரட், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு போட்டு, ஒரு நிமிடம் வரை எண்ணெயிலேயேகேரட்டை வதக்கி 1/4 கப் அளவு தண்ணீரை ஊற்றி மூடி போட்டு ஐந்து நிமிடம் இந்த கேரட்டைவேக வையுங்கள்.
  •  
    கேரட் தண்ணீர் சுண்டி வெந்து வந்ததும் மிக்ஸிஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடி இதோடு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.பொரியல் நன்றாக டிரையாகி நமக்கு கிடைக்கும். இறுதியாக கொத்தமல்லி தழைகளை தூவி சுடச்சுட சாப்பாட்டுடன் சாப்பிட்டு பாருங்கள் இதன் சுவையே சுவைதான்.
     

Nutrition

Serving: 500g | Calories: 131kcal | Carbohydrates: 7g | Protein: 1.8g | Fat: 0.5g | Potassium: 405mg | Calcium: 32mg | Iron: 2.2mg