Home அசைவம் சுட சுட சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட ருசியான சிலோன் முட்டை குருமா இப்படி ஒரு...

சுட சுட சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட ருசியான சிலோன் முட்டை குருமா இப்படி ஒரு தடவை செஞ்சி பாருங்கள்!

முட்டைக் குழம்பு, ஆம்லெட், முட்டை பொடிமாஸ், அவிச்ச முட்டை, பச்சை முட்டைனு எல்லாம் சாப்பிட்டு இருப்பேங்க. ஆனா முட்டை குருமா சாப்பிட்டு இருக்கேங்களா.? முட்டையில் குருமா செய்வது எப்படினு இப்போ தெரிஞ்சுக்கலாம்.! முட்டை அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்றாகும். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படிப்பட்ட முட்டையை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான்‌ இந்த முட்டை குருமா. இந்த குருமா ஒரு சுவையான மற்றும் மிகவும் சுலபமான குழம்பு வகை. இது இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, சாதம், சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, சீரக சாதம், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.

-விளம்பரம்-

இந்த குருமா சுவையுடன் கூடிய ஆரோக்கியம் மிகுந்த உணவு வகை. இந்த குருமாவில் முட்டை தவிர உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம், அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர் சேர்த்துக்கொள்ளலாம். பொதுவாக சப்பாத்தி அல்லது நான்னுக்கு சிக்கன் பட்டர் மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, மட்டன் கிரேவி, அல்லது வெஜிடபிள் குருமா இது போன்று சைடிஷ்களை தொட்டு உண்பது வழக்கம். ஆனால் ஒரு சேஞ்சுக்கு இவைக்கு மாற்றாக சுவையான முட்டை குருமா செய்து சுவைக்கலாம். இவை செய்வதற்கும் மிக எளிமையானவை என்பதால் இதை வெகு சுலபமாக காலை நேர டிபனுக்கு கூட செய்து விடலாம். இதனின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை குருமாவை சாதத்தில் ஊற்றி உண்ணலாம். உங்களுக்கு சிலோன் ரெசிபிக்கள் பிடிக்குமானால், சிலோன் ஸ்டைலில் முட்டை குருமா செய்து சுவையுங்கள். இது ருசியாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

Print
No ratings yet

சிலோன் முட்டை குருமா | Ceylon Egg Kurma Recipe In Tamil

முட்டைக் குழம்பு, ஆம்லெட், முட்டை பொடிமாஸ், அவிச்ச முட்டை, பச்சை முட்டைனு எல்லாம் சாப்பிட்டு இருப்பேங்க. ஆனா முட்டை குருமா சாப்பிட்டு இருக்கேங்களா.? முட்டையில் குருமா செய்வது எப்படினு இப்போ தெரிஞ்சுக்கலாம்.! முட்டை அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்றாகும். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படிப்பட்ட முட்டையை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான்‌ இந்த முட்டை குருமா. இந்த குருமா ஒரு சுவையான மற்றும் மிகவும் சுலபமான குழம்பு வகை. இது இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, சாதம், சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, சீரக சாதம், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். இந்த குருமா சுவையுடன் கூடிய ஆரோக்கியம் மிகுந்த உணவு. இதனின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை குருமாவை சாதத்தில் ஊற்றி உண்ணலாம். உங்களுக்கு சிலோன் ரெசிபிக்கள் பிடிக்குமானால், சிலோன் ஸ்டைலில் முட்டை குருமா செய்து சுவையுங்கள். இது ருசியாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner
Cuisine: srilankan
Keyword: Ceylon Egg Kurma
Yield: 4 People
Calories: 67.39kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 இட்லி பாத்திரம்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 5 முட்டை
  • 1/2 டீஸ்பூன் சோம்புத்தூள்
  • கல்பாசி சிறிதளவு
  • 1 ஏலக்காய்
  • 1 அன்னாசி பூ
  • 2 மராத்தி மொக்கு
  • 3 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
  • பின் இந்த முட்டை கலவையை சிறிய கிண்ணங்களில் எண்ணெய் தடவி சம அளவு ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சோம்புத்தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கல்பாசி, ஏலக்காய், அன்னாசிப் பூ, மராத்தி மொக்கு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • குழம்பு நன்கு கொதித்ததும் வேகவைத்த முட்டையை குழம்பில் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் ருசியான, சுவையான சிலோன் முட்டை குருமா தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 67.39kcal | Carbohydrates: 6g | Protein: 6.64g | Fat: 4.57g | Sodium: 130mg | Potassium: 125mg | Vitamin A: 96IU | Calcium: 24.72mg | Iron: 2.91mg

இதனையும் படியுங்கள் : மீதமான சாதத்தில் சூப்பரான முட்டை ரைஸ் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை தாரறுமாறாக இருக்கும்!