Home அசைவம் மீதமான சாதத்தில் சூப்பரான முட்டை ரைஸ் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை...

மீதமான சாதத்தில் சூப்பரான முட்டை ரைஸ் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை தாரறுமாறாக இருக்கும்!

வீட்ல சாப்பாடு மீந்து போயிட்டு அப்படி என்றால் நாம் எல்லாரும் ரொம்பவே வருத்தப்படுவோம். அந்த மாதிரி வேஸ்ட்டா போயிடுச்சு அதை தண்ணி ஊத்தி பழைய சாதமும் சாப்பிட முடியல சளி பிரச்சனை இருக்கு. அப்போ என்ன பண்ணலாம் நீங்க வருத்தப்பட்டீங்க அப்படின்னா உங்களுக்காக தான் இந்த சூப்பரான ரெசிபி. நீங்க சாதம் மீந்து போயிடுச்சு மத்தியானம் சாப்பாடு அப்படினா ஒரு முட்டை சாதம் பண்ணி சாப்பிடலாம்.

-விளம்பரம்-

இந்த சுவையான எக் ஃபிரைட் ரைஸ் செய்வது ரொம்பவே சிம்பிள் இருக்கும் அப்படி சுவையான இந்த எக் ரைஸ் எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த சுவையான எக் ரைஸ்ஸ வீட்ல இருக்குற சிம்பிளான பொருளை வைத்து ரொம்ப ஈஸியா பண்ணிடலாம். அந்த அளவுக்கு சுவையாக இருக்கும் இந்த எக் ரைஸ். இத நீங்க மீதமுள்ள சாதம் அப்படின்னு மட்டும் இல்லாமல் உங்களுக்கு இதே டேஸ்ட்ல சாப்பாடு வேணும் அப்படின்னா நீங்க சூடான சாதத்திலும் செய்துக்கலாம்.

இந்த மாதிரி முட்டை ரைஸ் செஞ்சா அது கொஞ்சம் கூட வேஸ்ட் ஆகாது. மீதமான சாதம்ன்னு தெரியாத அளவுக்கு இதோட சுவை அப்படி இருக்கும். எல்லாருமே ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இதை நீங்க மீதமான சாதத்தில் செய்தாலும் சரி இல்ல மதிய உணவுக்கு இதை செய்தாலும் சரி ரொம்பவே ருசியா இருக்கும் இந்த முட்டை சாதம். இதுக்கு தேவையான பொருட்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் தான் எப்பவுமே வீட்டுல இருக்கக்கூடிய பொருட்கள் தான் .சரி வாங்க எப்படி இந்த முட்டை சாதம் செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
5 from 1 vote

முட்டை ரைஸ் | Egg Rice Recipe in Tamil

வீட்ல சாப்பாடு மீந்து போயிட்டு அப்படி என்றால் நாம் எல்லாரும் ரொம்பவே வருத்தப்படுவோம். அந்த மாதிரி வேஸ்ட்டா போயிடுச்சு அதை தண்ணி ஊத்தி பழைய சாதமும் சாப்பிட முடியல சளி பிரச்சனை இருக்கு. அப்போ என்ன பண்ணலாம் நீங்க வருத்தப்பட்டீங்க அப்படின்னா உங்களுக்காக தான் இந்த சூப்பரான ரெசிபி. நீங்க சாதம் மீந்து போயிடுச்சு மத்தியானம் சாப்பாடு அப்படினா ஒரு முட்டை சாதம் பண்ணி சாப்பிடலாம். இந்த சுவையான எக் ஃபிரைட் ரைஸ் செய்வது ரொம்பவே சிம்பிள் இருக்கும் அப்படி சுவையான இந்த எக் ரைஸ் எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Chilly Egg, Chilly Egg Rice, Easy CoconutMilk Rice, egg rice
Yield: 4 people
Calories: 264kcal
Cost: 50

Equipment

  • 1 வாணலி
  • 1 கரண்டி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் சாதம்
  • 2 முட்டை
  • 1 வெங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 2 பச்சைமிளகாய்
  • 1 கைப்பிடி கறிவேப்பிலை
  • 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/4 ஸ்பூன் கரமசாலா
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு மிக்ஸி ஜாரில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும் .
  • பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்ட பிறகு அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு பின் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.
  • பிறகு அதில் சாதத்தை சேர்த்து எல்லா பக்கமும் படுமாறு நன்றாக கலந்து விட்டு சூடாக பரிமாறினால் சுவையான முட்டை சாதம் தயார்.

Nutrition

Calories: 264kcal | Carbohydrates: 20g | Protein: 15g | Fat: 7g