சாதம்,இட்லி, தோசைக்கு ஏற்ற சென்னா தேங்காய்ப்பால் குழம்பு இப்படி செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்!

- Advertisement -

சென்னா தேங்காய்ப்பால் குழம்பு என்றாலே அது, கடையிலிருந்து வாங்கி சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். நம் வீட்டிலேயும் சுவையான சென்னா தேங்காய்ப்பால் குழம்பு செய்து அசத்த முடியும். சுலபமான முறையில், கொஞ்சம் வித்தியாசமாக, இந்த குழம்பு  எப்படி செய்வது, என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

-விளம்பரம்-

கொண்டைக்கடலை வைத்து ரொம்ப சுவையான ஒரு குழம்பு பண்ண இருக்கோம். இந்த சென்னா, தேங்காய்ப்பால் சேர்த்து இந்த குழம்பு  எப்படி பண்றது அப்படின்னு பார்க்க இருக்கோம். கொண்டைக்கடலையை வைத்து நாம் நிறைய உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம்.  கொண்டைக்கடலையில் அந்த அளவுக்கு புரதமும், நார்ச்சத்து நிறையவே இருக்கு.தானிய வகைகளில் கொண்டக்கடலை ரொம்பவே உடலுக்கு நல்லது கொடுக்கக்கூடிய ஒரு தானியமாகும். இஇந்த கொண்டைக்கடலையை ஊற வெச்சு நம்ம  சுண்டல் செய்து சாப்பிடும்போது கூட அப்படியே அதில் இருக்கிற புரதம் நமக்கு கிடைக்குது.

- Advertisement -

கொண்டைக்கடலை வைத்து சுண்டல் செய்து சாப்பிட்டிருப்போம். ஏன் வடை கூட தட்டி சாப்பிட்டு இருப்போம் அதே மாதிரி ஒரு தோசைக்கு இட்லிக்கும் சாதத்திற்கு சட்டுனு ஒரு கொண்டக்கடலை சென்னா மசாலா எப்படி செய்யறது அப்படின்னு தான் பார்க்க இருக்கோம்.

Print
2 from 1 vote

சென்னா தேங்காய்ப்பால் குழம்பு | Channa Gravy In Tamil

கொண்டைக்கடலை வைத்து ரொம்ப சுவையான ஒரு குழம்பு பண்ண இருக்கோம். இந்த சென்னா, தேங்காய்ப்பால் சேர்த்து இந்த குழம்பு  எப்படி பண்றது அப்படின்னு பார்க்க இருக்கோம். கொண்டைக்கடலையை வைத்து நாம் நிறைய உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம்.  கொண்டைக்கடலையில் அந்த அளவுக்கு புரதமும், நார்ச்சத்து நிறையவே இருக்கு.தானிய வகைகளில் கொண்டக்கடலை ரொம்பவே உடலுக்கு நல்லது கொடுக்கக்கூடிய ஒரு தானியமாகும். இஇந்த கொண்டைக்கடலையை ஊற வெச்சு நம்ம  சுண்டல் செய்து சாப்பிடும் போது கூட அப்படியே அதில் இருக்கிற புரதம் நமக்கு கிடைக்குது.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: Gravy
Cuisine: tamil nadu
Keyword: Channa Coconutmilk Gravy
Yield: 4
Calories: 91kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் வெள்ளை கொண்டைக்கடலை
  • 1/2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 2 மேஜைக்கரண்டி தனியாதூள்
  • 1 தேக்கரண்டி சீரகத்தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • உப்பு தேவையான அளவு
  • 100 கிராம் தேங்காய் துருவல்
  • கொத்தமல்லித் தழை சிறிது
  • 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 வெங்காயம்
  • கறிவேப்பிலை சிறிது

செய்முறை

  • கொண்டக்கடலையை தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைத்து பிறகு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  • தக்காளி, கொத்தமல்லித்தழை இரண்டையும் மிக்ஸ்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கெட்டியாக தேங்காய் பால் எடுத்து தனியாக வைக்கவும். அடுத்தது அதே தேங்காயுடன் அரை கப் தண்ணீர்சேர்த்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் இரண்டாவதாக எடுத்த தேங்காய்பால், அவித்து வைத்துள்ள சென்னா. மிளகாய்த்தூள், தனியாதூள். சீரகத்தூள், மஞ்சள் தூள்,அரைத்து வைத்துள்ள தக்காளி கலவை, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு எல்லாவற்றையும் போட்டுஅடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  • மசாலா வாடை போனதும் முதல் தேங்காய்பாலை ஊற்றிஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.4 அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, வெங்காயம்போட்டு தாளித்து குழம்பில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும்.
  • கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையானசென்னா தேங்காய்ப்பால் குழம்பு ரெடி
     

Nutrition

Serving: 100g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Potassium: 198mg | Fiber: 4g | Iron: 0.1mg

இப்படியும் படியுங்கள் : சப்பாத்தியுடன் சாப்பிட காரசாரமான ருசியில் சென்னா சாட் மசாலா இப்படி செய்து பாருங்க!